Best Foods To Get Rid Of Dark Circle: கண்களை சுற்றி உருவாகும் கருவளையம், அழகை கெடுப்பதாக மக்கள் கவலைப்படுகிறார்கள். குறிப்பாக, இதனால் பெண்கள் படும் துன்பம் விவரிக்க முடியாதவை. இதனை போக்க பல முயற்சிகளை மேற்கொள்வனர். ஆனால் முடிவோ.. தோல்வி தான்.
ஆனால் உணவு மூலம் உங்கள் கண்களை சுற்றியுள்ள கருவளையத்தை குறைக்க முடியும் என்றால் உங்களால் நம்ப முடிகிறதா? ஆம், இதற்காக நீங்கள் என்ன சாப்பிட வேண்டும் என்பதை நாங்கள் உங்களுக்கு சொல்கிறோம்.

சிட்ரஸ் பழங்களை சாப்பிடுங்கள்
பலர் வேலையின் அழுத்தத்தில் உள்ளனர். மேலும் சரியான உணவை எடுத்துக்கொள்வதில் அதிக கவனம் செலுத்துவதில்லை. இதனால் கண்களுக்குக் கீழே கருவளையம் ஏற்படுகிறது. இந்த பிரச்சனையால் பாதிக்கப்பட்டவர்கள் வைட்டமின் சி நிறைந்த உணவுகளை உண்ண வேண்டும். ஏனெனில், வைட்டமின் சி செல்களை ஃப்ரீ ரேடிக்கல்களில் இருந்து பாதுகாத்து கரும்புள்ளிகள் உருவாகாமல் தடுக்கிறது. அதனால் தினசரி உணவில் எலுமிச்சை, நெல்லிக்காய், கிவி, பெர்ரி போன்ற சிட்ரஸ் பழங்கள் உள்ளதா என்பதை உறுதி செய்ய வேண்டும்.
இலை காய்கறிகளுக்கு முன்னுரிமை கொடுங்கள்
நம் உடலில் உள்ள அனைத்து செல்களுக்கும் போதுமான ஆக்ஸிஜனை வழங்க விரும்பினால், உடலில் போதுமான இரும்புச்சத்து இருக்க வேண்டும். இலை கீரைகளில் இது ஏராளமாக காணப்படுகிறது. உங்கள் தினசரி உணவில் இலை காய்கறிகளை சேர்க்க திட்டமிடுங்கள்.
இதையும் படிங்க: Dark Circle: கருவளையங்கள் ஏற்பட காரணமும், சிறந்த வைத்திய முறையும்..
வைட்டமின் ஈ எடுத்துக்கொள்ள வேண்டும்
'வைட்டமின் ஈ' உள்ள உணவுகளும் கண்களுக்குக் கீழே உருவாகும் கரும்புள்ளிகளைக் குறைப்பதில் முக்கியப் பங்கு வகிக்கின்றன. இதில் அதிக அளவு ஆன்டிஆக்ஸிடன்ட்கள் உள்ளன. பாதாம், வெண்ணெய், நட்ஸ் போன்ற உணவுகளை உண்பதால் நமக்கு வைட்டமின் ஈ அதிகம் கிடைக்கிறது.
வைட்டமின் கே சேர்துக்கொள்ளுங்கள்
சேதமடைந்த திசுக்களை சரிசெய்வதில் வைட்டமின் கே முக்கிய பங்கு வகிக்கிறது. உங்கள் தினசரி உணவில் முட்டைக்கோஸ், இலை கீரைகள், ப்ரோக்கோலி போன்றவற்றை சேர்த்துக்கொள்ளுங்கள். இது உங்கள் சருமத்தைப் பாதுகாக்கும்.
மேற்கூறிய உணவுகளை எடுத்துக் கொள்ளும்போது முகத்தை ஒரு நல்ல க்ளென்சர் மூலம் அடிக்கடி சுத்தம் செய்யவும். மேலும் எப்போதும் ஆரோக்கியமான உணவுகளை மட்டுமே சாப்பிட முயற்சி செய்யுங்கள்.
உணவுப் பொருட்களை மட்டும் எடுத்துக்கொள்வதைத் தவிர்த்து, ஒரு நாளைக்கு குறைந்தது மூன்று லிட்டர் தண்ணீராவது குடிக்கும் பழக்கத்தை ஏற்படுத்திக் கொள்ள வேண்டும். அதேபோல இரவு உணவை மாலை 7 மணிக்குள் முடிக்க திட்டமிடுங்கள்.
இவை அனைத்தையும் சேர்த்து எட்டு மணிநேரம் நிம்மதியான தூக்கத்தை உறுதி செய்ய வேண்டும். இந்த மாற்றங்களைச் செய்யத் தொடங்கினால், சில நாட்களில் உங்கள் முகத்தில் எதிர்பாராத மாற்றத்தைக் காண்பீர்கள்.
Image Source: Freepik