Fri Sep 11, 2026 | 11:10 PM IST

Dark Circles Face Pack: கருவளையங்கள் விரைவில் மறைய இந்த ஃபேஸ் பேக்குகளைப் பயன்படுத்துங்க.

How To Remove Dark Circles With Face Pack: கண் கருவளையங்கள் கண்ணாடியால் மட்டுமல்லாமல், குளிர்காலத்தில் ஏற்படும் சரும பிரச்சனையாகவும் இருக்கலாம். ஏனெனில் குளிர்ந்த காலநிலையிலேயே கருவளையம் பிரச்சனை அதிகமாகலாம். ஏனெனில், இவை முகத்தின் அழகைக் கெடுப்பது மட்டுமின்றி, எளிதில் மறையாத ஒன்றாக மாறிவிட்டது. இது தவிர, ஊட்டச்சத்து குறைபாடு, தூக்கமின்மை மற்றும் மோசமன வாழ்க்கை முறை போன்றவற்றால் கருவளையங்கள் தோன்றலாம்.

இந்த கருவளையங்களை நீக்க விலையுயர்ந்த பொருள்களை பயன்படுத்துவர் அல்லது அவை சருமத்திற்கு தீங்கு விளைவிப்பதாக இருக்கலாம். இதனைத் தவிர்க்க, சருமத்திற்கு முகமூடியைத் தடவலாம். இந்த ஃபேஸ் பேக்குகள் இயற்கையாகவே சருமத்திற்கு ஊட்டமளிப்பதுடன், சரும பிரச்சனைகளை நீக்குகிறது. இதில் கண் கருவளையங்கள் நீங்க உதவும் சில ஃபேஸ் பேக்குகளைக் காணலாம்.

இந்த பதிவும் உதவலாம்: Wrinkles Reducing Tips: முகச்சுருக்கம் சீக்கிரம் மறைய தேங்காய் எண்ணெயுடன் இந்த ஒரு பொருள் போதும்

கண் கருவளையத்தை நீக்க உதவும் ஃபேஸ் பேக்குகள்

கண்களின் கருவளையங்களிலிருந்து விடுபட சில முகமூடிகள் உதவுகின்றன. இதில் கருவளையத்தை நீக்குவதற்கு பயன்படுத்தும் ஃபேஸ் மாஸ்க்குகளைக் காணலாம்.

உருளைக்கிழங்கு ஃபேஸ்பேக்

கருவளையம் நீங்க உருளைக்கிழங்கு ஃபேஸ்பேக்கிற்குத் தேவையான பொருள்கள் மற்றும் எப்படி செய்வது என்பதைக் காண்போம்.

தேவையானவை

  • கற்றாழை ஜெல் - 1 ஸ்பூன்
  • உருளைக்கிழங்கு சாறு - 3 தேக்கரண்டி

எப்படி செய்வது?

உருளைக்கிழங்கு ஃபேஸ்பேக்குகளை உருவாக்க கற்றாழை ஜெல் மற்றும் உருளைக்கிழங்கு சாற்றைக் கலக்க வேண்டும். இந்த பேஸ்ட்டை முகத்தில் கருவளையம் உள்ள பகுதியில் தடவி மெதுவாக மசாஜ் செய்ய வேண்டும். இவ்வாறு 10 நிமிடங்களுக்கு வைத்து, பின் தண்ணீரால் முகத்தைக் கழுவி விடலாம். இவை கருவளையங்களைக் குறைப்பதுடன், சுருக்கங்களைக் குறைக்க உதவுகிறது.

ஆரஞ்சு மற்றும் கிளிசரின் ஃபேஸ்பேக்

ஆரஞ்சு, கிளிசரின் போன்றவற்றைப் பயன்படுத்தி தயாரிக்கப்படும் ஃபேஸ் மாஸ்க் கருவளையத்தை நீக்க உதவுகிறது.

தேவையானவை

  • கிளிசரின் - 1 ஸ்பூன்
  • ஆரஞ்சு சாறு - 3 தேக்கரண்டி

எப்படி செய்வது?

ஆரஞ்சு மற்றும் கிளிசரின் கலவையை கலந்து ஃபேஸ் பேக்காக தயார் செய்யவும். இந்த கலவையை முகம் மற்றும் கருமையான இடங்களில் தடவி 20 நிமிடங்கள் வைக்கலாம். அதன் பிறகு முகத்தைத் தண்ணீரில் கழுவ வேண்டும். இந்த ஃபேஸ் பேக் குளிர்காலத்தில் சருமத்திற்கு ஊட்டமளிக்கவும், கருவளையங்களை நீக்கவும் உதவுகிறது.

இந்த பதிவும் உதவலாம்: Face Massage Daily Benefits: தினமும் முகத்திற்கு மசாஜ் செய்யலாமா? அப்ப ஒரு நாளைக்கு எத்தனை முறை மசாஜ் செய்யலாம்

தக்காளி மற்றும் எலுமிச்சைச் சாறு ஃபேஸ்பேக்

எலுமிச்சைச் சாறு மற்றும் தக்காளி கலவையை ஃபேஸ்பேக்காக தயார் செய்து முகத்தில் தடவ கருவளையங்களை நீக்கலாம்.

தேவையானவை

  • எலுமிச்சைச் சாறு - 1 தேக்கரண்டி
  • தக்காளி சாறு - 3 தேக்கரண்டி

முகத்தில் அப்ளை செய்யும் முறை

எலுமிச்சைச் சாறு மற்றும் தக்காளி முகமூடி தயாரிக்க இந்த பொருள்களைக் கலந்து பேஸ்ட்டைத் தயார் செய்யவும். இப்போது இந்த பேஸ்ட்டை கண்களின் கருவளையங்கள் அல்லது முகம் முழுவதும் தடவலாம். அதன் பிறகு 15 நிமிடம் கழித்து முகத்தைத் தண்ணீரில் கழுவலாம். இவ்வாறு செய்வது கருவளையங்களைக் குறைத்து பருக்களைக் குறைக்கிறது.

இந்த வகை ஃபேஸ்மாஸ்க்கைப் பயன்படுத்துவதன் மூலம் கருவளையத்தைக் குறைக்கலாம். இருப்பினும் சருமம் மென்மையான உணர்திறன் மிக்கது என்பதால், அதை முகத்திற்கு தடவுவதற்கு முன் பேட்ச் டெஸ்ட் செய்வது நல்லது.

இந்த பதிவும் உதவலாம்: Wrinkles Removing Tips: கைகளில் உள்ள சுருக்கங்களை நீக்க இந்த 3 பொருள்கள் போதும்.

Image Source: Freepik

Read Next

Skincare Tips: முகம் பளபளவென ஜொலிக்க வேண்டுமா? பெரிய விஷயமே இல்ல!

Disclaimer

தகவலின் துல்லியம், நம்பகத்தன்மை, சரியான நேரத்தில் வழங்குதல் மற்றும் உண்மைத்தன்மையை உறுதி செய்ய அனைத்து சாத்தியமான நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளது. இருப்பினும், Onlymyhealth.com இதற்கு எந்தப் பொறுப்பையும் ஏற்காது. இந்த வலைதளத்தில் வழங்கப்படும் எந்தவொரு தகவலையும் பயன்படுத்துவது பார்வையாளர்களின் விருப்பத்திற்கு ஏற்ப மட்டுமே. ஏதேனும் மருத்துவத் தேவைகள்/தொடர்ச்சியான உடல்நலப் பிரச்சினைகள் ஏற்பட்டால், மேலே குறிப்பிடப்பட்டுள்ள வலைத்தளத்தில் எங்கள் குழு அல்லது மூன்றாம் தரப்பினரால் பதில்கள்/கருத்துகள் வடிவில் வழங்கப்படும் எந்தவொரு ஆலோசனை/குறிப்புகளையும் பயன்படுத்துவதற்கு முன்பாக, ஒரு தகுதிவாய்ந்த மருத்துவ பயிற்சியாளரை அணுகுமாறு நாங்கள் உங்களுக்கு அறிவுறுத்துகிறோம்.

கௌதமி சுப்ரமணி

கௌதமி சுப்ரமணி

இளைய உள்ளடக்க எழுத்தாளர்

நான் கௌதமி சுப்ரமணியம், டிஜிட்டல் மீடியாவில் ஐந்து ஆண்டுகளுக்கு மேலாக பணியாற்றி வருகிறேன். ஆரோக்கியம், உணவு, உடற்பயிற்சி, உடல் நலம், அழகு குறிப்பு போன்றவை தொடர்பான விவரங்களை ஆராய்ந்து கட்டுரைகளை எழுதி வருகிறேன். நான் எழுதும் ஒவ்வொரு பகுதியும் ஈர்க்கக்கூடியதாக இருப்பதை உறுதிசெய்து, விவரங்களுக்கு ஒரு தீவிரமான பார்வையை வளர்த்துக்கொண்டேன். மக்களுக்குத் தேவையான மற்றும் உண்மையான தகவல்களை வழங்குவதன் மூலம் நல்ல ஆரோக்கியம் மற்றும் நல்வாழ்வுக்கான இலக்கை மேம்படுத்துவது எனது நோக்கம் ஆகும்.

Read More..

How we keep this article up to date:

We work with experts and keep a close eye on the latest in health and wellness. Whenever there is a new research or helpful information, we update our articles with accurate and useful advice.


    Medically reviewed content
    200+ medical reviewers in network
    17 Years of Trusted Health Content
    Medically reviewed content
    200+ medical reviewers in network
    17 Years of Trusted Health Content
    Medically reviewed content
    200+ medical reviewers in network
    17 Years of Trusted Health Content