Skincare Tips: முகம் பளபளவென ஜொலிக்க வேண்டுமா? பெரிய விஷயமே இல்ல!

  • SHARE
  • FOLLOW
Skincare Tips: முகம் பளபளவென ஜொலிக்க வேண்டுமா? பெரிய விஷயமே இல்ல!

முகத்தை பளபளப்பாக வைக்க பெரிதளவு முயற்சி தேவையில்லை. விலை உயர்ந்த அழகு சாதன பொருட்கள், பியூட்டி பார்லர் சிகிச்சைகள் உள்ளிட்ட பெரிதளவு முயற்சிகள் எதுவும் தேவையில்லை. சிறிய அளவு முயன்றாலே போதுமானதாகும். உயிரற்ற மற்றும் வறண்ட சருமத்தால் நீங்கள் சிரமப்படுகிறீர்கள் என்றால் இந்த தகவலை பின்பற்றி பொலிவுள்ள சருமத்தை பெறலாம்.

வீட்டிலேயே ஃபேஸ் ஸ்க்ரப் செய்வது எப்படி?

பிரவுன் சுகர் மற்றும் தேன் ஸ்க்ரப்

சருமத்தை புத்துணர்ச்சியுடன் வைக்க பிரவுன் சுகர் மற்றும் தேன் சேர்த்து வீட்டிலேயே ஸ்க்ரப் தயாரிக்கலாம். இதைச் செய்ய, 1 ஸ்பூன் பிரவுன் சர்க்கரையில் அரை ஸ்பூன் தேன் கலந்து பேஸ்ட்டைத் தயாரிக்க வேண்டும்.

இந்த பேஸ்ட்டைக் கொண்டு உங்கள் முகம், கழுத்து மற்றும் கைகளை நன்கு தேய்த்து, பின்னர் தண்ணீரில் சுத்தம் செய்யுங்கள். தேனைப் பயன்படுத்துவது சருமத்தை ஈரப்பதமாக்குவதோது பொலிவு பெற உதவுகிறது. இது தோல் ஒவ்வாமை பிரச்சனையிலிருந்தும் நிவாரணம் அளிக்கிறது.

ஆரஞ்சு தோல் மற்றும் தேன் ஸ்க்ரப்

வைட்டமின் சி மற்றும் ஆன்டிஆக்ஸிடன்ட்கள் நிறைந்த ஆரஞ்சு பழத்தை சாப்பிட்ட பிறகு பலரும் அதன் தோலை தூக்கி எறிந்துவிடுவார்கள். ஆனால் அதன் தோலில் இருக்கும் நன்மைகளை பலரும் அறிவதில்லை. ஆரஞ்சு தோலில் வீட்டில் இருந்தே ஸ்க்ரப் தயாரிக்கலாம்.

ஆரஞ்சுத் தோலை மிக்ஸியில் போட்டு நைசாக அரைத்து, அதனுடன் தேன் சேர்த்து பேஸ்ட்டைத் தயாரிக்க வேண்டும். ஆரஞ்சு பழத்தோல் மற்றும் தேன் சேர்த்து செய்யப்படும் இந்த ஸ்க்ரப், சருமத்தில் படிந்துள்ள அழுக்குகளை சுத்தம் செய்து முகத்தை பொலிவாக்குகிறது.

காபி மற்றும் தேங்காய் எண்ணெய் ஸ்க்ரப்

குளிர்காலத்தில் சருமத்தை ஈரப்பதமாக்க காபி ஸ்க்ரப் பயன்படுத்தலாம். இதைச் செய்ய, காபியுடன் தேங்காய் எண்ணெயைக் கலந்து, பின்னர் உங்கள் முகத்தை சுத்தம் செய்யவும். காபி மற்றும் தேங்காய் எண்ணெயால் செய்யப்பட்ட ஸ்க்ரப் மூலம் முகத்தை சுத்தம் செய்வதன் மூலம் கறைகள் குறைந்து, நிறம் மேம்படும்.

ஓட்ஸ் மற்றும் தயிர் ஸ்க்ரப்

தயிர் குளிர்காலத்தில் சருமத்தை ஈரப்பதத்துடன் வைத்திருக்கும். ஓட்மீலுடன் தயிர் கலந்து வீட்டில் ஸ்க்ரப் தயார் செய்யலாம். இந்த ஸ்க்ரப் செய்ய, உங்களுக்கு 2 ஸ்பூன் ஓட்ஸ் தூள் மற்றும் 1 ஸ்பூன் புதிய தயிர் தேவைப்படும். இரண்டையும் கலந்து பேஸ்ட்டை உருவாக்கி முகத்தில் வட்ட இயக்கத்தில் தடவி மசாஜ் செய்து பின் இளநீரில் சுத்தம் செய்யவும். இந்த ஸ்க்ரப் முகத்தை ஈரப்பதமாக்கி , கரும்புள்ளிகளை அழிக்கும்.

பாதாம் மற்றும் தேன் ஸ்க்ரப்

சருமத்தை ஆழமாக சுத்தப்படுத்த பாதாம் மற்றும் தேன் ஸ்க்ரப் பயன்படுத்தலாம். இதற்கு, பாதாம் பருப்பை கரகரப்பாக அரைத்து, அதனுடன் தேன் சேர்த்து பேஸ்ட்டை தயார் செய்து, அதன் மூலம் முகம் மற்றும் கழுத்தை சுத்தம் செய்யவும்.

கரடுமுரடான பாதாம் பருப்பு இல்லையென்றால், ஊறவைத்த பாதாமை அரைத்து ஸ்க்ரப் தயார் செய்யலாம். பாதாம் மற்றும் தேன் ஸ்க்ரப் பயன்படுத்துவது சருமத்தை ஈரப்பதமாக்குகிறது.

Pic Courtesy: FreePik

Read Next

Wrinkles Removing Tips: கைகளில் உள்ள சுருக்கங்களை நீக்க இந்த 3 பொருள்கள் போதும்.

Disclaimer

குறிச்சொற்கள்