$
Homemade Ubtan for Glowing Skin: இன்று பெரும்பாலானோர் சருமத்தை அழகாக வைப்பதில் அதிக நாட்டம் கொள்கின்றனர். இதற்கு கடைகளில் விற்கப்படும் வேதிப்பொருள்கள் கலந்த கிரீம்களை அதிகம் பயன்படுத்துகின்றனர். ஆனால், இவை பக்க விளைவுகளை ஏற்படுத்தலாம். எனவே, எந்த வித பக்க விளைவுகளையும் ஏற்படுத்தாத இயற்கையாக வீட்டிலேயே தயார் செய்யப்படும் கிரீம்களைப் பயன்படுத்துவது அவசியமாகும்.
அந்த வகையில் உப்தான் சருமத்தைப் பொலிவாக்க உதவும் ஒரு அழகு ரகசியமாகும். இது பல்வேறு மூலிகைகள், மசாலாப் பொருள்கள் மற்றும் இன்னும் பிற இயற்கையான பொருள்களின் கலவையிலிருந்து தயார் செய்யப்படுகிறது. இயற்கையான ஸ்க்ரப்பான உப்தான் கடுமையான இரசாயனங்கள் பயன்படுத்தாமல் ஒளிரும் சருமத்தை அடைவதற்கான சரியான தீர்வாக அமைகிறது. இதில் பளபளப்பான சருமத்தைப் பெற உப்தானை வீட்டிலேயே எப்படி எளிதான முறையில் தயாரிப்பது மற்றும் அதன் நன்மைகள் குறித்து காணலாம்.
சருமத்திற்கு உப்தானின் நன்மைகள்
Ubtan சருமத்திற்கு இயற்கையான பொலிவைத் தரக்கூடிய சக்திவாய்ந்த இயற்கைப் பொருள்களின் கலவையாகும். இது சருமத்திற்கு பல வழிகளில் நன்மைகளைத் தருகிறது.
பிரகாசமான சருமத்திற்கு
உப்தான் தயாரிக்கத் தேவைப்படும் மஞ்சள், கடலை மாவு போன்ற இயற்கையான பொருள்களில் ஆன்டிஆக்ஸிடன்ட்கள் நிறைந்துள்ளது. இவை சருமத்தின் நிறத்தை மேம்படுத்தி பிரகாசமாக வைக்கிறது.
இந்த பதிவும் உதவலாம்: Raw Milk For Skin: பால் போன்ற பளபளப்பான முகத்திற்கு பச்சைப்பாலை இப்படி யூஸ் பண்ணுங்க
முதுமை எதிர்ப்பு
உப்தான் கொலாஜன் உற்பத்தியைத் தூண்டும் மற்றும் சருமத்தின் நெகிழ்ச்சித் தன்மையை மேம்படுத்தும் தன்மையைக் கொண்டுள்ளது. இதன் மூலம் முதுமை அறிகுறிகளை எதிர்த்துப் போராட உதவுகிறது.
இறந்த செல்களை நீக்க
மென்மையான எக்ஸ்ஃபோலியேட்டராக உப்தான் செயல்படுகிறது. இது சருமத்தில் உள்ள இறந்த செல்கள் மற்றும் அசுத்தங்களை நீக்கி சருமத்தை புத்துணர்ச்சியுடனும், மென்மையாகவும் வைக்க உதவுகிறது.

ஈரப்பதமாக சருமத்திற்கு
உப்தானில் பால், தயிர், அல்லது தேன் போன்ற பொருள்கள் சேர்க்கப்படுகிறது. இது சருமத்திற்கு ஆழமான நீரேற்றத்தை அளிப்பதுடன் மென்மையாக மற்றும் மிருதுவாக வைக்க உதவுகிறது.
இளமைத் தோற்றத்தைப் பெற
உப்தான் தயாரிக்கப் பயன்படுத்தப்படும் சில மூலிகைப் பொருள்கள் சருமத்தை இறுக்கமாக்கி இளமைத் தோற்றத்தைக் கொடுக்கிறது.
முகப்பரு பிரச்சனையைத் தவிர்க்க
இது சருமத்தின் துளைகளில் ஆழமாக ஊடுருவி அதிகப்படியான எண்ணெய், அழுக்கு போன்றவற்றை நீக்குகிறது. இது முகப்பரு மற்றும் பிற சரும பிரச்சனைகளைத் தடுக்க உதவுகிறது.
இந்த பதிவும் உதவலாம்: Sunscreen Benefits: சன்ஸ்கிரீனை பயன்படுத்த சரியான வழி இது தான்! இதன் நன்மைகள் என்னென்ன தெரியுமா?
உப்தான் செய்ய தேவையான பொருள்கள்
- மஞ்சள் தூள் - அரை டீஸ்பூன்
- பச்சை பால் - 1 டேபிள் ஸ்பூன்
- தேன் - 1 தேக்கரண்டி
- கடலை மாவு - 2 டேபிள் ஸ்பூன்
- குங்குமப்பூ இழைகள் - ஒரு சிட்டிகை (1 டேபிள் ஸ்பூன் வெதுவெதுப்பான பாலில் ஊறவைத்தது)
- மஞ்சள் தூள் - அரை டீஸ்பூன்

உப்தான் செய்ய தயார் செய்யும் முறை
- கிண்ணம் ஒன்றில் மஞ்சள் தூள், கடலை மாவு சேர்த்துக் கொள்ள வேண்டும். கடலை மாவு சுத்தப்படுத்தியாக செயல்படுகிறது. மேலும் மஞ்சள் பிரகாசமான மற்றும் அழற்சி எதிர்ப்புப் பண்புகளைத் தருகிறது.
- இந்த கலவையில் குங்குமப்பூ ஊறவைத்த பாலைச் சேர்க்க வேண்டும். குங்குமப்பூ நிறத்தை மேம்படுத்த உதவுகிறது.
- இதில் பச்சைப் பாலை சேர்த்துக் கொள்ள வேண்டும். பால் சேர்ப்பது இயற்கையான மாய்ஸ்சரைசர் மற்றும் க்ளென்சராக செயல்படுகிறது. இது சருமத்திற்கு ஊட்டமளிக்கிறது.
- இந்த கலவையில் ஒரு தேக்கரண்டி தேன் சேர்த்துக் கொள்ள வேண்டும். இது சருமத்திற்கு ஈரப்பதத்தைத் தருகிறது. இது வறண்ட சரும வகைகளுக்கு மதிப்பு மிக்க கூடுதலாகும்.
- இதை பேஸ்ட் போன்ற நிலைத்தன்மையை அடையும் வரை கிளறி, படிப்படியாக ரோஸ்வாட்டரை கலவையில் ஊற்ற வேண்டும்.
இந்த பதிவும் உதவலாம்: Camphor Coconut Oil Benefits: சருமத்தை பளபளப்பாக தேங்காய் எண்ணெயுடன் இந்த ஒரு பொருளை சேர்த்துகோங்க
சருமத்தில் உப்தானை தடவுவது எப்படி?
- உப்தானைப் பயன்படுத்தும் முன்னதாக முதலில் சருமத்தை நன்கு கழுவி சுத்தம் செய்து கொள்ள வேண்டும்.
- பின் உப்தான் கலவையை முகத்தில் வட்ட இயக்கத்தில் தடவி மெதுவாக மசாஜ் செய்ய வேண்டும். கண் பகுதியைத் தவிர்க்க வேண்டும்.
- இதை சருமத்தில் 15 -20 நிமிடங்கள் வரை வைத்து, உலர்ந்த பிறகு கைகளை ஈரப்படுத்தி வட்ட இயக்கத்தில் முகம் மற்றும் கழுத்தை மெதுவாக ஸ்க்ரப் செய்ய வேண்டும். இது சருமத்தை மேலும் உரிக்கச் செய்கிறது.
- முதலில் இதை வெதுவெதுப்பான நீரில் கழுவி, பின் குளிர்ந்த நீரைச் சேர்ப்பது சருமத்தில் உள்ள துளைகளை மூடச் செய்கிறது.

இவ்வாறு, உப்தானை சருமத்தில் பயன்படுத்துவது சருமத்தை ஆரோக்கியமாகவும், பளபளப்பாகவும் வைக்க உதவுகிறது.
இந்த பதிவும் உதவலாம்: Skin Tightening Face Pack: எந்த கறையும் இல்லாத சுத்தமான சருமத்தை பெற இந்த ஃபேஸ்பேக் யூஸ் பண்ணுங்க
Image Source: Freepik