Camphor Coconut Oil Benefits: சருமத்தை பளபளப்பாக தேங்காய் எண்ணெயுடன் இந்த ஒரு பொருளை சேர்த்துகோங்க

  • SHARE
  • FOLLOW
Camphor Coconut Oil Benefits: சருமத்தை பளபளப்பாக தேங்காய் எண்ணெயுடன் இந்த ஒரு பொருளை சேர்த்துகோங்க


அதிலும், தேங்காய் எண்ணெயின் தனித்த பயனை விட, கற்பூரத்துடன் சேர்த்து பயன்படுத்துவது சிறந்த நன்மைகளைத் தரும். இந்த இரண்டின் கலவை சருமத்திற்கு மருந்தாக செயல்படுகிறது. தேங்காய் எண்ணெயில் பூஞ்சை எதிர்ப்பு மற்றும் பாக்டீரியா எதிர்ப்புப் பண்புகள் நிறைந்துள்ளது. இதில் கற்பூரம் தடவி பயன்படுத்துவது பல்வேறு சரும பிரச்சனைகளிலிருந்து நிவாரணம் தருகிறது. சருமத்திற்கு தேங்காய் எண்ணெய் கற்பூரம் தரும் நன்மைகள் மற்றும் எப்படி பயன்படுத்துவது என்பது குறித்து காணலாம்.

இந்த பதிவும் உதவலாம்: Sunscreen Benefits: சன்ஸ்கிரீனை பயன்படுத்த சரியான வழி இது தான்! இதன் நன்மைகள் என்னென்ன தெரியுமா?

சருமத்திற்கு தேங்காய் எண்ணெய் மற்றும் கற்பூரம் தரும் நன்மைகள்

முகப்பருக்களை நீக்க

தேங்காய் எண்ணெயில் கற்பூரத்தை சேர்த்து பயன்படுத்துவது முகப்பரு பிரச்சனையை நீக்க உதவுகிறது. இவை இரண்டிலுமே பாக்டீரியா எதிர்ப்புப் பண்புகள் நிறைந்துள்ளது. இவை முகப்பருவை உண்டாக்கும் பாக்டீரியாக்களை நீக்குகிறது. இந்த கலவையைத் தொடர்ந்து முகத்திற்கு பயன்படுத்துவது முகப்பருவை நீக்கி நன்மை பயக்கும்.

சருமத்தை மென்மையாக்க

தேங்காய் எண்ணெய் கற்பூர கலவையை சருமத்திற்கு தடவுவது சருமத்தை மென்மையாக வைக்க உதவுகிறது. இதற்கு தேங்காய் எண்ணெயில் லாரிக் அமிலம் இருப்பதே காரணம் ஆகும். இது சருமத்தை ஆரோக்கியமாகவும், மென்மையாகவும் வைக்க உதவுகிறது. இந்த கலவையானது சருமத்தின் வறட்சியை நீக்க உதவுகிறது. எனவே இரவு தூங்கும் முன்பாக, கற்பூரம் மற்றும் தேங்காய் எண்ணெய் கலந்த கலவையை முகத்திற்கு மசாஜ் செய்யலாம். இது மென்மையான மற்றும் பளபளப்பான சருமத்தைக் கொடுக்கும்.

கறைகளை நீக்க

இந்த இரண்டின் கலவையானது முகத்தில் உள்ள கறைகளை நீக்குவதில் மிகவும் பயனுள்ளதாக அமைகிறது. இவை இரண்டையும் தொடர்ந்து சருமத்தில் தடவி வருவதன் மூலம் முகத்தில் உள்ள கரும்புள்ளிகளை நீக்கலாம். இது பருக்களின் அடையாளங்களை அகற்ற உதவுகிறது. தேங்காய் எண்ணெய் மற்றும் கற்பூரம் கலந்த கலவையை முகத்தில் தடவுவது இயற்கையான சருமப் பொலிவைத் தருகிறது.

இந்த பதிவும் உதவலாம்: Raw Milk For Skin: பால் போன்ற பளபளப்பான முகத்திற்கு பச்சைப்பாலை இப்படி யூஸ் பண்ணுங்க

சுருக்கங்களைக் குறைக்க

கற்பூரம் மற்றும் தேங்காய் எண்ணெயைப் பயன்படுத்துவது முகத்தில் உள்ள கரும்புள்ளிகளை நீக்க உதவுகிறது. இதன் பண்புகள் சருமத்தை ஆழமாக சுத்தம் செய்கிறது. இந்த கலவையின் பயன்பாடு, முகத்தில் உள்ள சுருக்கங்களை நீக்கி, சருமம் இளமையாக வைக்க உதவுகிறது.

ஒவ்வாமை பிரச்சனை நீங்க

சருமத்தில் ஏதேனும் ஒவ்வாமை பிரச்சனைகள் இருப்பின், தேங்காய் எண்ணெயுடன் கற்பூரத்தை கலந்து பயன்படுத்தலாம். தேங்காய் எண்ணெய் மற்றும் கற்பூரம் இரண்டிலும் ஆன்டி பாக்டீரியல் பண்புகள் நிறைந்துள்ளது. இது ஒவ்வாமையைக் குறைக்க உதவுகிறது. கூடுதலாக இதன் பயன்பாடு சரும தொற்று மற்றும் சருமத்தில் ஏற்படும் அழற்சியைக் குறைக்க உதவுகிறது.

சருமத்திற்கு தேங்காய் எண்ணெய், கற்பூரத்தைப் பயன்படுத்தும் முறை

கற்பூரம், தேங்காய் எண்ணெயை முகத்தில் பயன்படுத்துவது மிகவும் எளிதாகும்.

  • முதலில் அரை கப் அளவிலான தேங்காய் எண்ணெயை எடுத்துக் கொள்ள வேண்டும்.
  • பின், இரண்டு ஸ்பூன் கற்பூரத்தை நன்றாக அரைத்து தேங்காய் எண்ணெயுடன் சேர்க்க வேண்டும்.
  • இவை இரண்டையும் நன்றாகக் கலந்து முகத்தில் தடவி மெதுவாக மசாஜ் செய்ய வேண்டும். இதை இரவு தூங்கும் முன் பயன்படுத்தலாம்.

இந்த பதிவும் உதவலாம்: Multani Mitti For Skin: கண்ணாடி போல மினு மினு சருமத்திற்கு முல்தானி மிட்டியை இப்படி யூஸ் பண்ணுங்க

Image Source: Freepik

Read Next

Summer Skin Care Juice: வெயிலிலும் சருமத்தை பளபளப்பாக வைக்க இந்த ஜூஸ் குடித்து பாருங்க!

Disclaimer