Multani Mitti For Skin: கண்ணாடி போல மினு மினு சருமத்திற்கு முல்தானி மிட்டியை இப்படி யூஸ் பண்ணுங்க

  • SHARE
  • FOLLOW
Multani Mitti For Skin: கண்ணாடி போல மினு மினு சருமத்திற்கு முல்தானி மிட்டியை இப்படி யூஸ் பண்ணுங்க

இதில் மந்தமான சருமத்தை பளபளப்பாக வைத்திருக்க வீட்டிலேயே எளிமையான முறையில் சில பொருள்களைப் பயன்படுத்தலாம். அந்த வகையில் சருமத்திற்கு முல்தானி மிட்டி பயன்படுத்தப்படுகிறது. சருமத்தைப் பளபளப்பாக வைத்திருக்க முல்தானி மிட்டி பயன்படுத்தும் முறைகளைக் காணலாம்.

இந்த பதிவும் உதவலாம்: Neem For Acne: முகப்பரு இருந்த இடம் தெரியாமல் போக இந்த ஒரு ஃபேஸ் பேக் யூஸ் பண்ணுங்க

ஏன் முல்தானி மிட்டி

இது நீண்ட காலமாக தோல் பராமரிப்பு வழக்கத்தில் பயன்படுத்தப்பட்டு வரும் மூலிகையாகும். இது சருமத்தை டோனிங் செய்ய உதவுகிறது. கருவளையங்கள், பரு புள்ளிகள், முகப்பரு தழும்புகள் போன்றவற்றைக் குணமாக்கி சருமத்தை அழகாக வைக்கிறது. சரும பராமரிப்பு வழக்கத்தில் முல்தானி மிட்டியை எந்தெந்த வழிகளில் சேர்க்கலாம் என்பது குறித்து காணலாம்.

சரும பராமரிப்புக்கு முல்தானி மிட்டி பயன்படுத்தும் முறைகள்

நெல்லிக்காய் தூள்

இந்த ஃபேஸ்பேக் தயார் செய்ய, ஒரு தேக்கரண்டி முல்தானி மிட்டியுடன், ஒரு தேக்கரண்டி நெல்லிக்காய் பவுடரைச் சேர்த்து நன்கு கலக்க வேண்டும். இந்த கலவையில் ரோஸ் வாட்டரைச் சேர்த்து விரல்களால் முகத்தில் தடவலாம். சிறிது நேரம் இதை உலர வைத்து, பின் சாதாரண நீரில் முகத்தைக் கழுவிக் கொள்ள வேண்டும்.

காபிகொட்டை

சரும பராமரிப்பில் காபி பரவலாகப் பயன்படுத்தப்பட்டு வருகிறது. இது சருமத்தை குணப்படுத்த உதவும் அற்புத பண்புகளைக் கொண்டுள்ளது. இந்த ஃபேஸ் பேக் தயார் செய்வதற்கு ஒரு தேக்கரண்டி அளவிலான காபி தூளை எடுத்து, அதில் முல்தானி மிட்டி, கிரீன் டீ மற்றும் பச்சைப் பால் போன்றவற்றைச் சேர்க்க வேண்டும். பின் இதைக் கலந்து முகத்தில் தடவலாம்.

இந்த பதிவும் உதவலாம்: Importance of Sunscreen: தினமும் சன்ஸ்கிரீன் பயன்படுத்த வேண்டுமா? நிபுணர்கள் கூறுவது இங்கே!

மஞ்சள்

எண்ணெய் பசை சருமம் கொண்டவர்களுக்கு முல்தானி மிட்டி ஃபேஸ்பேக் சிறந்த நன்மை தரும். இதற்கு இரண்டு தேக்கரண்டி அளவிலான முல்தானி மிட்டியுடன், சந்தனப் பொடி, மஞ்சள் தூள் போன்றவற்றைக் கலந்து கொள்ள வேண்டும். பின் சுத்தமான முகத்தில் ஃபேஸ் பேக்கைத் தடவி சுமார் 15-20 நிமிடங்கள் வைத்து பின் கழுவலாம்.

வேப்பம்பூ

முல்தானி மிட்டியுடன் வேப்பம்பூவைப் பயன்படுத்தி ஃபேஸ் பேக் தயார் செய்யலாம். இவை இரண்டும் சரும பராமரிப்பில் மூலப் பொருளாக அமைகிறது. இது முகப்பருவைக் குறைப்பதற்கும், முன்கூட்டிய வயதைத் தாமதப்படுத்துவதற்கும், சரும அமைப்பை மேம்படுத்துவதற்கும் உதவுகிறது. இதற்கு ஒரு டேபிள் ஸ்பூன் முல்தானி மிட்டியுடன் ஒரு டேபிள் ஸ்பூன் வேப்பம்பூ பொடி, ஜாதிக்காய் தூள், தேன் மற்றும் ஆப்பிள் சைடர் வினிகர் சேர்த்து கலக்க வேண்டும். இதை சருமத்தில் தடவி 15-20 நிமிடங்கள் வரை வைத்து பின் வழக்கமான தண்ணீரில் கழுவி விடலாம்.

தேங்காய் தண்ணீர்

முல்தானி மிட்டியுடன் தேங்காய் தண்ணீரைச் சேர்த்து ஃபேஸ்பேக்காகத் தயார் செய்யலாம். இது முகத்தில் உள்ள தழும்புகள் மற்றும் புள்ளிகளை நீக்கலாம். ஒரு டேபிள் ஸ்பூன் முல்தானி மிட்டியை சிறிது தேங்காய் நீரில் சேர்த்து முகத்தில் தடவ வேண்டும். இந்த ஃபேஸ்பேக்கை வாரம் இருமுறை பயன்படுத்தலாம்.

முல்தானி மிட்டியுடன் இந்த பொருள்களைக் கொண்டு தயார் செய்யப்படும் ஃபேஸ்பேக்குகள் முகத்திற்கு பொலிவைத் தருவதுடன், பல்வேறு சரும பிரச்சனைகளைத் தீர்க்க உதவுகிறது.

இந்த பதிவும் உதவலாம்: Hydration Face Mask: கோடையில் சருமம் வறண்டு போகாம இருக்க இந்த ஃபேஸ்பேக் யூஸ் பண்ணுங்க

Image Source: Freepik

Read Next

Sunscreen: சன்ஸ்கிரீன் தடவிய பின் உங்களுக்கு பயங்கரமா வியர்க்கிறதா? அப்போ இதை செய்யுங்க!

Disclaimer