Hydration Face Mask: கோடையில் சருமம் வறண்டு போகாம இருக்க இந்த ஃபேஸ்பேக் யூஸ் பண்ணுங்க

  • SHARE
  • FOLLOW
Hydration Face Mask: கோடையில் சருமம் வறண்டு போகாம இருக்க இந்த ஃபேஸ்பேக் யூஸ் பண்ணுங்க

இந்த காலகட்டத்தில் சருமத்தை ஆரோக்கியமாக மற்றும் மகிழ்ச்சியாக வைத்திருப்பது அவசியமாகும். எனவே சருமத்திற்கு கூடுதல் கவனத்தை செலுத்த வேண்டும். இதற்கு வீட்டிலேயே தயாரிக்கப்பட்ட குளிர்ச்சியான ஃபேஸ் பேக்குகளைப் பயன்படுத்தலாம். இதில் முகத்தை நீரேற்றமாக வைத்திருக்க உதவும் சில ஃபேஸ் பேக்குகளைக் காணலாம்.

இந்த பதிவும் உதவலாம்: Homemade Serum: பளிச்சென்ற முகத்திற்கு வீட்டிலேயே எளிமையா இப்படி சீரம் தயார் செய்யலாம்

சருமத்தை நீரேற்றமாக வைத்திருக்கும் ஃபேஸ் பேக்குகள்

தேன் மற்றும் தயிர் ஃபேஸ் மாஸ்க்

தேன் மற்றும் தயிர் இரண்டும் சருமத்திற்கு நீரேற்றத்தைத் தரும் பண்புகளைக் கொண்டுள்ளது. இதற்கு 2 டேபிள் ஸ்பூன் அளவு வெற்று தயிரில் 1 டேபிள் ஸ்பூன் தேனைக் கலக்க வேண்டும். இந்தக் கலவையை முகத்தில் தடவி 10-15 நிமிடங்கள் வைத்து, பின் குளிர்ந்த நீரில் கழுவ வேண்டும். இந்த ஃபேஸ் பேக் பயன்படுத்துவது சருமத்தை மென்மையாக மாற்றும் ஈரப்பதமாக்க உதவுகிறது.

கற்றாழை மற்றும் வெள்ளரி ஃபேஸ் மாஸ்க்

இந்த ஃபேஸ் மாஸ்க் தயார் செய்ய, அரை வெள்ளரிக்காயை எடுத்துக் கொண்டு அதில் 2 டேபிள் ஸ்பூன் கற்றாழை ஜெல் சேர்க்க வேண்டும். பின் இந்த கலவையை முகத்தில் தடவி 10-15 நிமிடங்கள் வைத்து குளிர்ந்த நீரில் கழுவ வேண்டும். இந்த மாஸ்க் பயன்படுத்துவது கோடைக்காலத்தில் வறண்ட சருமத்தை ஈரப்பதமாக மாற்றுகிறது.

வெள்ளரிக்காய் மற்றும் புதினா ஃபேஸ் மாஸ்க்

அரை வெள்ளரிக்காய் எடுத்துக் கொண்டு அதில் ஒர் கைப்பிடி அளவு புதினா இலைகளைச் சேர்க்க வேண்டும். பின் இந்த கலவையை முகத்தில் தடவி 10-15 நிமிடங்கள் வரை வைக்கலாம். அதன் பிறகு இதை குளிர்ந்த நீரில் கழுவி சருமத்தை குளிர்விக்கலாம். மேலும் இது புத்துணர்ச்சியூட்டும் தன்மையைக் கொண்டுள்ளது.

இந்த பதிவும் உதவலாம்: Eye Dark Circles: கண்களுக்கு கீழே கருவளையம் வர காரணம் என்ன? தீர்வு இதோ!

தேன் மற்றும் ஸ்ட்ராபெர்ரி ஃபேஸ் மாஸ்க்

இவை இரண்டும் சருமத்தை பளபளப்பாக வைத்திருக்க உதவுகிறது. இதில் 4-5 ஸ்ட்ராபெர்ரி பழங்களை மசித்து, 1 டேபிள் ஸ்பூன் தேனைச் சேர்க்க வேண்டும். பின் இந்த கலவையை முகத்தில் தடவி 10-15 நிமிடங்கள் வைத்து குளிர்ந்த நீரில் கழுவலாம். இந்த ஃபேஸ் பேக் சருமத்தை மென்மையாக மற்றும் பிரகாசமாக வைக்க உதவுகிறது.

ஓட்மீல் மற்றும் தயிர் ஃபேஸ் மாஸ்க்

தயிர் மற்றும் ஓட்மீல் ஃபேஸ் பேக்கில் உள்ள பண்புகள் சருமத்தை ஆரோக்கியமாக வைக்க உதவுகிறது. 2 டேபிள் ஸ்பூன் ஓட்மீலை 2 டேபிள் ஸ்பூன் தயிர் சேர்க்கலாம். இந்த கலவையை முகத்தில் தடவி 10-15 நிமிடங்கள் வரை தடவி பின் குளிர்ந்த நீரில் கழுவி விடலாம். இந்த ஃபேஸ் மாஸ்க் சருமத்தை மென்மையாகவும், ஈரப்பதமாக்கவும் உதவுகிறது.

தேங்காய் எண்ணெய் மற்றும் கற்றாழை ஃபேஸ் மாஸ்க்

இந்த ஃபேஸ் மாஸ்க் தயார் செய்ய 2 ஸ்பூன் அளவு கற்றாழை ஜெல்லை எடுத்துக் கொள்ள வேண்டும். இதில் 1 தேக்கரண்டி அளவு தேங்காய் எண்ணெயைக் கலக்க வேண்டும். இந்த கலவையை முகத்தில் தடவி 10-15 நிமிடங்கள் வரை வைத்து குளிர்ந்த நீரில் கழுவ வேண்டும். இந்த ஃபேஸ் பேக் பயன்படுத்துவது சருமத்தை ஈரப்பதமாக்க மற்றும் மென்மையாகவும் இருக்கும்.

இந்த ஃபேஸ் மாஸ்க்குகள் சருமத்தை மென்மையாக மற்றும் பளபளப்பாக வைக்கிறது. எனவே கோடைக்காலத்தில் இந்த ஃபேஸ் மாஸ்க்குகளைப் பயன்படுத்தலாம்.

இந்த பதிவும் உதவலாம்: Summer Skin Care Tips: கோடைக்காலத்தில் சருமத்தை அழகாக்க உதவும் பழங்கள். கட்டாயம் சாப்பிடுங்க

Image Source: Freepik

Read Next

Glowing skin in summer: கோடை காலத்திலும் உங்க சருமம் கண்ணாடி மாதரி பளபளப்பாக இருக்க வேண்டுமா? இதை செய்யுங்க!

Disclaimer

குறிச்சொற்கள்