Yogurt Face Pack And Its Benefits: சருமத்தை அழகாகவும், பொலிவாகவும் வைக்க உதவும் சிறந்த தீர்வுகளில் ஒன்று ஃபேஸ் பேக் ஆகும். இந்த ஃபேஸ் பேக் தயார் செய்ய வீட்டிலேயே கிடைக்கும் இயற்கையான பொருள்களைப் பயன்படுத்தலாம். அதே சமயம் இந்த வீட்டு வைத்திய முறைகள் சருமத்திற்கு தீங்கு விளைவிக்காததாக இருக்க வேண்டும்.
அனைவருமே சருமத்தை அழகாகவும், பளபளப்பாகவும் வைத்திருக்க விரும்புவர். எனவே சருமம் அழகாகவும் பொலிவோடும் இருக்க உதவும் சிறந்த பொருள்களில் ஒன்று தயிர் ஆகும். அன்றாட உணவில் சேர்க்கப்படும் தயிரை சருமத்திற்கும் ஃபேஸ் பேக்காக பயன்படுத்தலாம். இதில் சருமத்திற்கு தயிர் ஃபேஸ் பேக் தயார் செய்யும் முறை மற்றும் அதன் நன்மைகள் குறித்து காணலாம்.
சருமத்திற்கு தயிர் ஃபேஸ் பேக் தரும் நன்மைகள்
இறந்த செல்களை வெளியேற்ற
தயிரில் லாக்டிக் அமிலம் நிறைந்துள்ளது. இது சரும செல்களை சுத்தமாக வைக்கவும், சருமத்தில் உள்ள இறந்த செல்களை அகற்ற உதவுகிறது. மேலும், இது சருமத்திற்கு எரிச்சலை ஏற்படுத்தாத சிறந்த தீர்வாகும்.
இந்த பதிவும் உதவலாம்: Coconut Water For Skin: முகம் பளிச்சினு மாற, இளநீரை இப்படி யூஸ் பண்ணுங்க
சருமத்தை பொலிவாக்க
தயிரில் நிறைந்துள்ள லாக்டிக் அமிலம், டைரோசினேஸ் உருவாவதைத் தடுக்க உதவுகிறது. இந்த டைரோசினேஸ் என்பது மெலனின் உற்பத்தி செய்யக்கூடிய என்சைம் ஆகும். இந்த என்சைம் சருமத்தை கருமையாக்கலாம். இதற்கு தயிர் பயன்படுத்துவது சருமத்தின் நிறத்தை மேம்படுத்த உதவுகிறது.
முகப்பருவைக் குறைக்க
தயிரில் துத்தநாகம் நிறைந்துள்ளது. இதன் மூலம் முகப்பருவைத் தடுக்கலாம். மேலும், பளபளப்பான சருமத்தைத் தருகிறது. அழற்சி முகப்பருவுக்கு சிகிச்சையளிக்க துத்தநாகம் எடுத்துக் கொள்வது மிகுந்த நன்மை பயக்கும்.
முதுமை அறிகுறிகளைக் குறைக்க
சருமத்திற்குத் தொடர்ந்து தயிர் பயன்படுத்துவது முதுமை அறிகுறிகளைக் குறைக்க உதவுகிறது. ஆய்வின்படி , தயிரில் ஆக்ஸிஜனேற்ற விளைவுகளைக் கொண்ட பயோஆக்டிவ் பெப்டைட் பின்னங்கள் நிறைந்துள்ளது. இந்த பண்புகள் ஃப்ரீ ரேடிக்கல்களுக்கு எதிராக செயல்பட்டு வயதான செயல்முறையை தாமதமாக்குகிறது.
தோல் நோய்த்தொற்றை எதிர்த்துப் போராட
சரும தொற்றிலிருந்து பாதுகாக்க விரும்புபவர்கள் தயிர் ஃபேஸ் பேக்கைப் பயன்படுத்தலாம். தயிரில் பூஞ்சை எதிர்ப்புப் பண்புகள் மற்றும் லாக்டிக் அமிலம் உள்ளது. இது தோல் நோய்த்தொற்றுக்களுக்கு எதிரான போராட்டத்தில் உதவுகிறது.
இந்த பதிவும் உதவலாம்: Multani Mitti For Face: முல்தானி மிட்டியை இப்படி பயன்படுத்துனா இந்த சரும பிரச்சனைகளே வராதாம்
தயிர் ஃபேஸ்பேக் பயன்படுத்துவது எப்படி?
தயிருடன் சில சரும பராமரிப்புக்கு உதவக்கூடிய பொருள்களைப் பயன்படுத்துவதன் மூலம் சருமத்தைப் பொலிவாகவும், அழகாகவும் வைக்கலாம்.
ஓட்ஸ் மற்றும் தயிர் ஃபேஸ்பேக்
தேவையானவை
தயிர் - 1 தேக்கரண்டி
தேன் - 1/2 தேக்கரண்டி
ஓட்மீல் - 1 தேக்கரண்டி
செய்முறை
- கிண்ணம் ஒன்றில் இந்த அனைத்துப் பொருள்களையும் சேர்த்து கலக்க வேண்டும்.
- பின் இதை முகம் மற்றும் கழுத்தில் தடவலாம்.
- இந்த ஃபேஸ் பேக்கை 10 முதல் 20 நிமிடங்கள் வைத்து, பின் வெதுவெதுப்பான நீரில் கழுவி விடலாம்.

தயிர் மற்றும் அவகேடோ ஃபேஸ்பேக்
தேவையானவை
- தயிர் - 1/2 கப்
- வெண்ணெய் - 1/2 தேக்கரண்டி
- கற்றாழை - 2 தேக்கரண்டி
செய்முறை
- ஒரு கிண்ணத்தில் இந்த பொருள்கள் அனைத்தையும் கலந்து கொள்ள வேண்டும்.
- இந்த ஃபேஸ்பேக்கை முகம் மற்றும் கழுத்தில் தடவ வேண்டும்.
- 20 முதல் 25 நிமிடங்கள் கழித்து கழுவி விடலாம்.
இந்த பதிவும் உதவலாம்: Saffron For Skin: கோடை வெப்பத்தில் சருமத்தை கூலாக்கும் குங்குமப்பூ! இப்படி யூஸ் பண்ணுங்க
மஞ்சள் தயிர் ஃபேஸ்பேக்
தேவையானவை
- தயிர் - 1/2 கப்
- மஞ்சள் - 1 தேக்கரண்டி
செய்முறை
- அரை கப் தயிருடன், 1 டீஸ்பூன் அளவு மஞ்சள் தூள் சேர்த்து கலக்க வேண்டும்.
- பின் இந்த கலவையை முகம் மற்றும் கழுத்தில் தடவலாம்.
- பிறகு 20 முதல் 30 நிமிடங்களுக்குப் பிறகு வெதுவெதுப்பான நீரில் ஃபேஸ்பேக்கைக் கழுவலாம்.
தயிர் மற்றும் தேன் ஃபேஸ்பேக்
தேவையானவை
- தயிர் - 1/2 கப்
- மஞ்சள் - 1 தேக்கரண்டி
செய்முறை
- ஒரு கிண்ணத்தில் இந்த இரண்டு பொருள்களையும் கலந்து கலவையாக்க வேண்டும்.
- பின் இதை கழுத்து மற்றும் முகத்தில் தடவி, 20 நிமிடங்களுக்குப் பிறகு வெதுவெதுப்பான நீரில் ஃபேஸ்பேக்கை அகற்றலாம்.
இந்த சரும பொருள்களுடன் தயிரை சருமத்திற்குப் பயன்படுத்துவது பல்வேறு நன்மை பயக்கும். எனினும் சருமம் உணர்திறன்மிக்கதென்பதால் தயிர் மற்றும் தனுடன் சில பொருள்களைப் பயன்படுத்துவதற்கு முன் பேட்ச் டெஸ் செய்வது நல்லது. மேலும், இயற்கையான தயிரில் உள்ள புரோபயாடிக்குகள் அல்லது லாக்டிக் அமிலம் ஒவ்வாமையை ஏற்படுத்தினால் இந்த ஃபேஸ்பேக்குகளைத் தவிர்க்க வேண்டும்.
இந்த பதிவும் உதவலாம்: Summer Face Pack: சுட்டெரிக்கும் வெயிலில் சருமத்தைக் குளிர்ச்சியாக்க இந்த ஃபேஸ் பேக் ட்ரை பண்ணுங்க
Image Source: Freepik