$
Skin Tightening Face Pack For Flawless Skin: சருமத்தை அழகாக வைத்திருக்க வேண்டும் என்பதில் யாருக்குத் தான் ஆசை இருக்காது? அதிலும் குறைபாடற்ற சருமத்தை அடைவது அனைவரின் இலக்காகவே உள்ளது. இந்த இலக்கின் முக்கிய அம்சம் சருமத்தை இறுக்கமாக வைப்பதாகும். சில இயற்கையான ஃபேஸ் பேக்குகளைக் கொண்டு சருமத்தை இறுக்கமாக வைப்பதுடன், ஒட்டுமொத்த ஆரோக்கியத்தையும் மேம்படுத்துகிறது. இதில் குறைபாடற்ற மற்றும் ஆரோக்கியமான சருமத்தைப் பெற உதவும் சில ஃபேஸ் பேக்குகளைப் பயன்படுத்தலாம்.
சருமத்தைப் பொலிவாக வைக்கும் ஃபேஸ் பேக்குகள்
முட்டை வெள்ளை நிற ஃபேஸ் பேக்
முட்டையின் வெள்ளைக்கருவில் புரோட்டீன்கள் நிறைந்துள்ளன. இது சருமத்தை இறுக்கமாக வைக்கவும், நேர்த்தியான கோடுகள், சுருக்கங்களைக் குறைக்கவும் உதவுகிறது. இந்த ஃபேஸ் பேக் தயார் செய்ய, முதலில் முட்டையின் வெள்ளைக் கருவ நுரை வரும் வரை செய்து, பின் இதை முகத்தில் தடவி 15-20 நிமிடங்கள் அப்படியே வைக்க வேண்டும். அதன் பிறகு இதை வெதுவெதுப்பான நீரில் கழுவிக் கொள்ளலாம்.
இந்த பதிவும் உதவலாம்: Seeds For Hair Growth: பொசு பொசுனு அடர்த்தியா முடி வளர இந்த 6 விதைகள் போதும்
வாழைப்பழ ஃபேஸ் பேக்
வாழைப்பழங்கள் ஊட்டச்சத்து மிக்க பழமாகும். இது உடல் ஆரோக்கியத்துடன், சரும ஆரோக்கியத்திற்கும் உதவுகிறது. இவை சருமத்திற்கு ஊட்டமளிப்பதுடன், நெகிழ்ச்சித் தன்மையை அதிகரிக்கிறது. இதற்கு பழுத்த வாழைப்பழத்தை மசித்து, அதில் ஒரு டீஸ்பூன் தேன் கலந்து பயன்படுத்துவது சருமத்தை இறுக்கமாக வைக்க உதவுகிறது. இதை முகத்தில் தடவி 20 நிமிடங்கள் வைத்து பின் தண்ணீரில் கழுவ வேண்டும்.

அலோவேரா ஃபேஸ் பேக்
கற்றாழை சருமத்திற்கு இயற்கையான மற்றும் ஈரப்பதமூட்டும் பண்புகளைக் கொண்டுள்ளது. இதில் புதிய கற்றாழை ஜெல்லை எடுத்து, முகத்தில் நேரடியாக தடவலாம். இதை 15-30 நிமிடங்கள் வைத்து தண்ணீரில் கழுவிக் கொள்ளலாம். இதன் வழக்கமான பயன்பாடு சருமத்தில் நெகிழ்ச்சி மற்றும் உறுதியை மேம்படுத்த உதவுகிறது.
கடலை மாவு ஃபேஸ் பேக்
பேசன் என்றழைக்கப்படும் கடலை மாவு, சருமத்தை இறுக்கும் மற்றும் தோலுரிக்கும் பண்புகளைக் கொண்டுள்ளது. இந்த மாவுடன் ரோஸ் வாட்டர் அல்லது தயிர் சேர்த்து கலவையாகத் தயார் செய்ய வேண்டும். இந்த பேக்கை முகத்தில் தடவி, 15-20 நிமிடங்கள்வரை உலர விட்டு, மெதுவாக ஸ்க்ரப் செய்யவும். பின், தண்ணீரில் கழுவுவதன் மூலம் இறுக்கமான மற்றும் பளபளப்பான சருமத்தை பெறலாம்.
இந்த பதிவும் உதவலாம்: Mustard Oil For Grey Hair: நரை முடியை கருமையாக மாற்றும் கடுகு எண்ணெய். இப்படி யூஸ் பண்ணுங்க
பப்பாளி ஃபேஸ் பேக்
பப்பாளியில் என்சைம்கள் நிறைந்துள்ளன. இது சருமத்தை இறுக்கமாக்கி இளமைப் பொலிவைத் தருகிறது. இதற்கு ஒரு பழுத்த பப்பாளியை எடுத்து மசித்து, அதனுடன் ஒரு டீஸ்பூன் தேன் கலந்து கொள்ள வேண்டும். இந்த ஃபேஸ் பேக்கை சருமத்தில் தடவி 15-20 நிமிடங்கள் வைத்து, பின் வெதுவெதுப்பான நீரில் கழுவ வேண்டும்.

வெள்ளரிக்காய் ஃபேஸ் பேக்
வெள்ளரிக்காய் சருமத்திற்குக் குளிர்ச்சியான விளைவைத் தருகிறது. இது சருமத்தின் துளைகளை இறுக்கமாக வைக்க உதவுகிறது. வெள்ளரிக்காயைக் கலவையாக மாற்றி அதில் ஒரு தேக்கரண்டி தயிர் சேர்த்துக் கொள்ள வேண்டும். இதை நன்றாகக் கலந்து சருமத்தில் தடவி 15-20 நிமிடங்கள் வைத்து பின் குளிர்ந்த நீரில் கழுவி வர சருமம் இறுக்கமாவதை உணரலாம்.
இந்த இயற்கையான சருமத்தைப் பொலிவாக்க உதவும் ஃபேஸ் பேக்குகளைப் பயன்படுத்துவது சரும பராமரிப்பு வழக்கத்தை எளிதாக்குகிறது. இது உறுதியான மற்றும் இளமை நிறத்தைப் பெற உதவுகிறது. எனினும் சருமம் உணர்திறன் மிக்கதென்பதால், புதிய பொருள்களைப் பயன்படுத்தும் முன் பேட்ச் டெஸ்ட் செய்வது நல்லது.
இந்த பதிவும் உதவலாம்: Watermelon Seeds For Hair: கொளுத்தும் வெயிலில் ஜில்லென சூப்பரான ஹேர் மாஸ்க்
Image Source: Freepik