Mustard Oil For Grey Hair: நரை முடியை கருமையாக மாற்றும் கடுகு எண்ணெய். இப்படி யூஸ் பண்ணுங்க

  • SHARE
  • FOLLOW
Mustard Oil For Grey Hair: நரை முடியை கருமையாக மாற்றும் கடுகு எண்ணெய். இப்படி யூஸ் பண்ணுங்க

நரை முடிக்கு ஏன் கடுகு எண்ணெய்

கடுகு எண்ணெயில் பல்வேறு ஊட்டச்சத்துக்கள், ஆக்ஸிஜனேற்றிகள், மற்றும் செலினியம் போன்றவை நிறைந்துள்ளன. இது முடியின் மயிர்க்கால்களை ஆக்ஸிஜனேற்ற அழுத்தம் மற்றும் சேதத்திலிருந்து பாதுகாக்க உதவுகிறது. ஆக்ஸிஜனேற்ற அழுத்தம் என்பது முன்கூட்டிய நரைமுடிக்கு முதன்மையான காரணமாகும். ஏனெனில் இது மயிர்க்கால்களில் உள்ள மெலனின் உற்பத்தி செய்யும் செல்களை சேதப்படுத்துவதாக அமைகிறது. இதனால் மெலனின் உற்பத்தி குறைந்து நரை முடி உண்டாகலாம்.

இதன் மூலம் கடுகு எண்ணெயில் முன்கூடிய நரைமுடி உண்டாவதைத் தடுக்கும் பண்புகள் உள்ளதாகக் கூறப்படுகிறது. கடுகு எண்ணெயில் உள்ள ஆக்ஸிஜனேற்ற பண்புகள் ஆக்ஸிஜனேற்ற அழுத்தத்தை ஏற்படுத்தும் ஃப்ரீ ரேடிக்கல்களை நடுநிலையாக்க உதவுகிறது.

இந்த பதிவும் உதவலாம்: Tea For Hair: பொசு பொசுனு முடி வளர உதவும் டீ வகைகள். எப்படி பயன்படுத்துவது?

தலைமுடிக்கு கடுகு எண்ணெய் பயன்படுத்துவதால் கிடைக்கும் நன்மைகள்

முன்கூட்டிய நரைமுடியைத் தவிர்ப்பதைத் தவிர, கடுகு எண்ணெய் பல்வேறு நன்மைகளைக் கொண்டுள்ளது.

ஊட்டச்சத்துக்களை வழங்க

கடுகு எண்ணெயில் பூஞ்சை மற்றும் பாக்டீரியா எதிர்ப்புப் பண்புகள் நிறைந்துள்ளது. இந்த எண்ணெய் கொண்டு மசாஜ் செய்வது முடியின் மயிர்க்கால்களுக்கு ஊட்டமளிப்பதுடன், முடி வளர்ச்சியைத் தூண்டுகிறது.

முடியை வலுப்படுத்த

இந்த எண்ணெயில் பல்வேறு வகையான தாதுக்கள் மற்றும் அமினோ அமிலங்கள் நிறைந்துள்ளது. இது முடியின் கட்டமைப்பை பலப்படுத்துகிறது. மேலும் முடி உடைப்பு மற்றும் பிளவைக் குறைத்து தலைமுடியை வலுவாக்குகிறது.

ஆழமான கண்டிஷனிங்

இதில் உள்ள இயற்கையான பண்புகள் முடியின் ஆழம் வரை ஊடுருவி முடி அமைப்பை மேம்படுத்துகிறது.

பொடுகை நீக்க

கடுகு எண்ணெயில் உள்ள ஆன்டிமைக்ரோபியல் பண்புகள் பொடுகு மற்றும் உச்சந்தலை தொற்றுக்குக் காரணமாகும் பூஞ்சை மற்றும் பாக்டீரியாக்களை எதிர்த்துப் போராட உதவுகிறது. இதன் மூலம் பொடுகுத் தொல்லையிலிருந்து விடுபடலாம்.

இந்த பதிவும் உதவலாம்: Hair Growth oil: ஒரே வாரத்தில் தலைமுடி தாறுமாறாக வளர இந்த எண்ணெயை யூஸ் பண்ணுங்க!

கடுகு எண்ணெய் ஹேர் பேக்

இந்த நன்மைகளைப் பெற கடுகு எண்ணெயுடன் சில பொருள்களைச் சேர்த்து ஹேர் பேக்குகளைத் தயார் செய்யலாம்.

ஆம்லாவுடன் கடுகு எண்ணெய்

கடுகு எண்ணெயை ஆம்லா என்ற இந்திய நெல்லிக்காயின் தூள் அல்லது சாறுடன் சேர்த்து பயன்படுத்தலாம். இந்தக் கலவையை முடி மற்றும் உச்சந்தலையில் தடவி ஒரு மணி நேரம் வைத்து பின் கழுவி விடலாம்.

கடுகு எண்ணெய் மற்றும் மருதாணி

மருதாணி பவுடருடன் கடுகு எண்ணெய் சேர்த்து, சிறிது தண்ணீர் கலந்து கலவையைத் தயார் செய்ய வேண்டும். பின் இந்த கலவையை தலைமுடியில் தடவி, சில மணி நேரம் கழித்து முடியை அலச வேண்டும்.

தயிருடன் கடுகு எண்ணெய்

இந்த இரண்டையும் சேர்த்து தயாரித்த கலவையை தலைமுடிக்கு பயன்படுத்துவது சிறந்த நன்மையைத் தரும். இதை உச்சந்தலை மற்றும் முடிக்குத் தடவி ஒரு மணி நேரம் கழித்து கழுவி விடலாம்.

இந்த பதிவும் உதவலாம்: Spinach For Hair Growth: போதும் போதும்னு சொல்ற அளவுக்கு முடி வளரணுமா? கீரையை இப்படி எடுத்துக்கோங்க

வெந்தயம் மற்றும் கடுகு எண்ணெய்

முந்தைய நாள் இரவிலேயே வெந்தய விதைகளை ஊறவைத்து, அதனை அரைத்து கடுகு எண்ணெயுடன் கலக்க வேண்டும். இந்தக் கலவையை முடி மற்றும் உச்சந்தலையில் தடவி 30 நிமிடங்கள் வைத்து பின் கழுவி விடலாம்.

கடுகு எண்ணெய் மற்றும் தேங்காய் பால்

தேங்காய் பாலுடன், கடுகு எண்ணெய் சேர்த்த கலவையை முடிக்கு பயன்படுத்தி 30 நிமிடங்கள் வரை வைத்து பின் முடியை அலசலாம்.

கறிவேப்பிலை மற்றும் கடுகு எண்ணெய்

கடுகு எண்ணெயைச் சூடாக்கி, அதில் நறுக்கிய கறிவேப்பிலையைச் சேர்க்க வேண்டும். பின் இந்த கலவையை உச்சந்தலை மற்றும் முடியில் தடவி மசாஜ் செய்ய வேண்டும். இதை இரவு முழுவதும் அப்படியே வைத்து காலையில் கழுவி விடலாம்.

இவை அனைத்தும் தலைமுடிக்கு கடுகு எண்ணெய் தரும் பல்வேறு நன்மைகளாகும். இது முடிக்கு பாதுகாப்பானதாக இருப்பினும், உச்சந்தலையில் எரிச்சல், முடி வறட்சி, ஒவ்வாமை எதிர்வினைகள் போன்ற பல்வேறு பிரச்சனைகளை சந்திப்பவர்கள் மருத்துவ ஆலோசனை பெற்ற பிறகு எடுத்துக் கொள்வது நல்லது.

இந்த பதிவும் உதவலாம்: Mustard Oil For Hair: கரு கரு முடிக்கு கடுகு எண்ணெயுடன் இந்த 3 பொருள்களை மட்டும் சேர்த்து பயன்படுத்துங்க.

Image Source: Freepik

Read Next

Fish Oil for Hair: முடி வளர்ச்சிக்கு மீன் எண்ணெயின் சில ஆரோக்கியமான நன்மைகள்

Disclaimer