முடி உதிர்தல், பலவீனமான முடி, பொடுகு போன்ற பல பிரச்சனைகளை நம்மில் பலர் சந்திக்கிறோம். இதேபோல் நம்மில் பெரும்பாலோர் எதிர்கொள்ளும் மற்றொரு பொதுவான பிரச்சனைகளில் ஒன்று நரை முடி பிரச்சனையாகும். இன்றைய காலத்தில் நரை முடி பிரச்சனை என்பது வயது வரம்பின்றி வர ஆரம்பித்துவிட்டது. பெரும்பாலான இளைஞர்கள் நரை முடி பிரச்சனையை எதிர்கொள்கின்றனர்.
இதனை போக்க பொதுமக்கள் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றனர். வெள்ளை முடியை கருமையாக்க பலரும் உடனடியாக கருமையாக்க கருமை நிற டை உதவியைதான் நாடுகிறார்கள். இதோடு கலர், மருதாணி மற்றும் பிற வீட்டு வைத்தியம் போன்ற பல்வேறு வகையான ரசாயன பொருட்களை முயற்சி செய்கிறார்கள், இது வெள்ளை முடியை சிறிது காலம் மட்டுமே மறைக்க உதவுகிறது, அந்த நாட்கள் முடிந்ததும் மீண்டும் வெள்ளை முடி பிரச்சனை ஆரம்பிக்கும்.
இதையும் படிங்க: Healthy Heart: உங்க இதயம் ஆரோக்கியமாக இருப்பதை உணர்த்தும் 7 அறிகுறிகள்!!
நரை முடிக்கு டை அடித்த பின் மீண்டும் வெள்ளையாக மாறும் காரணம்
நரை முடி பிரச்சனை டை அடித்தவுடன் கருமையாக மாறும். மீண்டும் சில காலத்திலேயே வெள்ளை நிறமாக மாற முக்கிய காரணம், முடி வளரும் போது அந்த இடத்தில் வளரும் முடி மீண்டும் வெள்ளையாகவே மாறும். ஒரு சிலருக்கு டை நீண்ட நாட்கள் இருக்கிறது சிலருக்கு மட்டும் குறைந்த நாட்கள் இருப்பதற்கு இதுதான் காரணம். முடி வேகமாக வெள்ளையாக மாற காரணம், உங்கள் முடி வளர்ச்சி வேகமாக இருக்கிறது என அர்த்தம்.
வெள்ளை முடியை கருமையாக்க மக்கள் எப்போதும் எதையாவது முயற்சி செய்கிறார்கள், அதற்கான ரிசல்ட் கிடைக்காமல் மீண்டும் மீண்டும் அடுத்தடுத்த முயற்சிகளை மேற்கொள்வார்கள். வெள்ளை முடி மீண்டும் இயற்கையாகவும் எப்போதும் கருப்பாக மாறுமா? இயற்கையாகவே கருமையான முடியை மீண்டும் பெறுவதற்கு ஏதேனும் வழிகள் உள்ளதா? என்பதற்கான பதிலை பார்க்கலாம்.
வெள்ளை முடி மீண்டும் கருப்பாக மாறுமா?
இதுகுறித்த மருத்துவரின் தகவலின்படி, வெள்ளை முடியை இயற்கையாக கருப்பாக்கும் முன், அதன் காரணங்களை நீங்கள் புரிந்து கொள்ள வேண்டும். பொதுவாக, நரை முடி பிரச்சனை உடலில் ஊட்டச்சத்து குறைபாடு, தவறான மற்றும் ரசாயன முடி பராமரிப்பு பொருட்கள், மரபியல், அடிப்படை சுகாதார பிரச்சனை போன்றவற்றின் காரணமாக இருக்கலாம்.
நரை முடி பிரச்சனை வயது அதிகரிக்கும் போது மிகவும் பொதுவானது, இது இயற்கையான செயல்முறையான முதுமை காரணமாக ஏற்படுகிறது. முதுமையின் காரணமாக நரைத்த முடியை கருமையாக்க எந்த நடவடிக்கையும் அத்தனை அளவு பயன்பெறாது என்றுதான் கூறினார்கள்.
ஆரோக்கியமான வாழ்க்கை முறையை பின்பற்றுவதன் மூலம், இந்த செயல்முறையை தாமதப்படுத்தலாம். ஆனால் நல்ல விஷயம் என்னவென்றால், வெள்ளை முடி பிரச்சனையிலிருந்து எளிதாக விடுபடலாம்.
சரி, அதிவேகமாக வெள்ளை முடியை கருப்பாக மாற்ற முடியுமா என்றால் அது கேள்விதான். அப்படி யாராவது கூறி ஏதேனும் பொருட்களை விற்றாலும் அதை நம்ப வேண்டும். சாயம்(டை) மட்டுமே இதற்கு தீர்வாகும், இதுவும் நிரந்தர தீர்வாக இருக்க முடியாது. வேகமாக கிடைக்கும் மாற்றம் நிலையாக இருக்காது, படிப்படியாக கிடைக்கும் மாற்றமே நிலையானதாகும்.
வெள்ளை முடியை மீண்டும் கருப்பாக மாற்றும் வழிகள்
முதலில், ஒரு நல்ல மருத்துவரை அணுகவும், அவர் உங்கள் நரை முடிக்கான காரணத்தைக் கண்டறிய முடியும். நரை முடி பிரச்சனை ஏதேனும் மருத்துவ நிலை காரணமாக இருந்தால், அதை சரிசெய்ய மருத்துவர் உங்களுக்கு உதவுவார்.
ஊட்டச்சத்து குறைபாடு காரணமாக உங்களுக்கு இந்த பிரச்சனைகள் இருந்தால், உங்கள் உணவை மாற்றவும். உங்கள் உணவில் முடிந்தவரை பல பழங்கள் மற்றும் காய்கறிகளை சேர்த்துக் கொள்ளுங்கள், ஊட்டச்சத்துக்கள் நிறைந்த உணவுகளை அதிகமாக சாப்பிடுங்கள். நீங்கள் ஒரு டயட்டீஷியனிடம் இருந்து தயாரிக்கப்பட்ட உணவுத் திட்டத்தையும் பெறலாம்.
ரசாயனங்கள் இல்லாத இயற்கையான முடி பராமரிப்புப் பொருட்களைப் பயன்படுத்துங்கள். இயற்கை எண்ணெய்கள், ஷாம்புகள், ஹேர் மாஸ்க் போன்றவற்றை மட்டுமே பயன்படுத்தவும்.
உங்கள் தலைமுடிக்கு எண்ணெய் தடவி வாரத்திற்கு 2-3 முறை சீப்பை பயன்படுத்துங்கள்.
உங்கள் தலைமுடியை அதிகமாக கழுவ வேண்டாம்.
மது அருந்துதல் மற்றும் புகைபிடித்தல் போன்ற பழக்கங்களை கண்டிப்பாக தவிர்க்கவும்.
முடிந்தவரை ஜங்க், பதப்படுத்தப்பட்ட உணவுகள், வறுத்த, காரமான உணவுகளை தவிர்த்துவிடுங்கள்.
சோடா, கோலா மற்றும் பிற கார்பனேற்றப்பட்ட பானங்களைத் தவிர்க்கவும்.
வழக்கமான உடற்பயிற்சி, யோகா பயிற்சி போன்ற பல பயிற்சிகள் முடி பிரச்சனைகளை தீர்க்கிறது.
அதிகம் படித்தவை: வாரத்திற்கு ஒரு முறை போதும்.. அளப்பரிய நன்மைகள் கிட்டும்.! என்னவா இருக்கும்.?
இந்த எளிய குறிப்புகளை பின்பற்றுவதன் மூலம் வெள்ளை முடி பிரச்சனையில் இருந்து எளிதாக விடுபடலாம். இருப்பினும், வயதான மற்றும் மரபியல் காரணமாக ஏற்படும் நரை முடியை கருமையாக்க வலியே கிடையாது என்றுதான் கூறப்படுகிறது. நரை முடி பிரச்சனைக்கு உண்மையான காரணம் என்ன என்பதை ஒரு நல்ல மருத்துவரை அணுகி கண்டறிவது நல்லது.
pic courtesy: freepik