Biotin for hair growth: வேகமாக, இயற்கையாக முடி வளரணுமா? இந்த ஒரு வைட்டமின் நிறைந்த உணவுகளை எடுத்துக்கோங்க

Biotin rich foods that promote hair growth: அழகான மற்றும் ஆரோக்கியமான கூந்தலைப் பெற விரும்புபவர்கள் சில ஆரோக்கியமான உணவுகளை எடுத்துக் கொள்ள வேண்டும். அந்த வகையில் பயோட்டின் நிறைந்த உணவுகள் பெரிதும் உதவுகிறது. இதில் முடி வளர்ச்சிக்கு பயோட்டின் நிறைந்த உணவுகளைக் காணலாம்.
  • SHARE
  • FOLLOW
Biotin for hair growth: வேகமாக, இயற்கையாக முடி வளரணுமா? இந்த ஒரு வைட்டமின் நிறைந்த உணவுகளை எடுத்துக்கோங்க

Foods for hair growth and thickness: ஆண்கள், பெண்கள் போன்ற அனைவருக்கும் அழகான மற்றும் வலுவான முடியை வளர்க்க வேண்டும் என்பது பலரின் விருப்பமாகும். இதற்கு, பராமரிப்பு, ஆசை மற்றும் மரபியல் போன்ற பல்வேறு காரணங்கள் இருப்பினும், ஒரு சீரான உணவு முடி ஆரோக்கியத்திற்கு மிகவும் இன்றியமையாததாக விளங்குகிறது. அந்த வகையில், முடி வளர்ச்சியை ஆதரிக்கவும், அதன் வலிமையை பராமரிக்கவும் தேவையான ஊட்டச்சத்துக்களில் ஒன்றாக பயோட்டின் அமைகிறது.

பயோட்டின் ஆனது வைட்டமின் பி7 அல்லது ஊட்டச்சத்து H என்றும் அறியப்படுகிறது. இந்த பயோட்டின் நமது முடியின் கட்டமைப்பை உருவாக்கும் புரதமான கெரட்டின் உற்பத்தியை ஆதரிக்கிறது. இதில் முடி வளர்ச்சியை ஆதரிக்கவும், சாதாரண முடி ஆரோக்கியத்தை மேம்படுத்தவும் உதவும் பயோட்டின் நிறைந்த சில உணவுகளைக் காணலாம்.

இந்த பதிவும் உதவலாம்: Ginger oil for hair: முடிக்கு இந்த ஒரு எண்ணெயை யூஸ் பண்ணுங்க. வேணாம்னு சொல்ற அளவுக்கு முடி வளரும்

முடி வளர்ச்சிக்கான பயோட்டின் நிறைந்த உணவுகள்

நட்ஸ் மற்றும் விதைகள்

பாதாம், அக்ரூட் பருப்புகள் போன்ற நட்ஸ் வகைகளிலும் மற்றும் சூரியகாந்தி விதைகள் மற்றும் ஆளிவிதைகள் உள்ளிட்ட பல்வேறு விதைகளிலும் பயோட்டின், துத்தநாகம் மற்றும் ஒமேகா-மூன்று கொழுப்பு அமிலங்கள் போன்ற ஊட்டச்சத்துக்கள் அதிகம் நிறைந்துள்ளது. இவை முடி வளர்ச்சியை ஊக்குவிக்க உதவுகிறது. மேலும், இது முடி அமைப்பை மேம்படுத்தவும், முடி உதிர்வை குறைக்கவும் உதவுகிறது. இது தவிர, உச்சந்தலை ஆரோக்கியத்திற்கும் இந்த ஊட்டச்சத்துக்கள் மிகவும் இன்றியமையாததாகும். அன்றாட உணவில் சிறிதளவு நட்ஸ் மற்றும் விதைகளை சிற்றுண்டி, சாலட்கள் அல்லது தயிர் மீது தூவி சாப்பிடலாம்.

அவகேடோ

அவகேடோ போன்ற வெண்ணெய் பழத்தில் பயோட்டின், ஆரோக்கியமான கொழுப்புகள் மற்றும் ஆன்டிஆக்ஸிடன்ட்கள் போன்ற ஊட்டச்சத்துக்கள் நிறைந்த பழமாகும். இது உச்சந்தலையை ஈரப்பதமாக்குவதுடன், முடி சேதத்தைத் தடுக்கிறது. மேலும், இது முடிக்கு பிரகாசத்தை அளிப்பதுடன், முடி வளர்ச்சியை ஊக்குவிக்கிறது. உணவில் வெண்ணெய் பழத்தை டோஸ்டில் நறுக்கி சாலட்களில் சேர்த்து எடுத்துக் கொள்ளலாம்.

முட்டை

முட்டையில் புரதம், வைட்டமின்கள் பி, பயோட்டின், இரும்பு மற்றும் துத்தநாகம் போன்றவை நிறைந்துள்ளது. இந்த ஊட்டச்சத்துக்கள் முடி வளரவும், முடி இழைகளை வளர்க்கவும், ஆரோக்கியமான கூந்தலுக்கு முக்கிய ஊட்டச்சத்துக்களை வழங்கவும் உதவுகிறது. அன்றாட உணவில் முட்டையை வேக வைத்து, ஆம்லெட் அல்லது முட்டை சார்ந்த உணவுகள் போன்றவற்றின் மூலம் முட்டையை சேர்க்கலாம்.

இந்த பதிவும் உதவலாம்: முடி வலிமையை அதிகரிக்க இந்த 5 சூப்பர் ஃபுட்ஸை எடுத்துக்கோங்க!

மீன்

சால்மன், கானாங்கெளுத்தி மற்றும் மத்தி போன்ற கொழுப்பு நிறைந்த மீன்களில் பயோட்டின், ஒமேகா-3 கொழுப்பு அமிலங்கள் மற்றும் குறிப்பிடத்தக்க புரதங்கள் போன்றவை நிறைந்துள்ளது. இவை உச்சந்தலையின் ஆரோக்கியத்திற்கு பெரிதும் உதவுகிறது. மேலும், இவை எரிச்சலைக் குறைக்கவும், முடி வளர்ச்சியைப் பராமரிக்கவும், உலர்ந்த மற்றும் உடையக்கூடிய முடியைக் காப்பாற்றவும் உதவுகிறது. கிரில், பேக்கிங் போன்றவற்றின் மூலம் உணவுத் திட்டத்தில் மீனைச் சேர்க்கலாம். இதை முதன்மை உணவாக எடுத்துக் கொள்ளலாம் அல்லது சாலடுகள் அல்லது சாண்ட்விச்களில் செய்யப்பட்ட மீனை சாப்பிடலாம்.

கீரை

கீரையில் வைட்டமின் ஏ மற்றும் சி, இரும்புச்சத்து, பயோட்டின் மற்றும் ஆன்டிஆக்ஸிடன்ட்கள் போன்றவை உள்ளது. இது உச்சந்தலையில் இரத்த இயக்கத்தை மேம்படுத்தவும், மயிர்க்கால்களை பலப்படுத்தவும் உதவுகிறது. மேலும், இது முடி வளர்ச்சியை ஊக்குவிக்கவும், ஆரோக்கியமான உச்சந்தலை பராமரிப்பிற்கும் வழிவகுக்கிறது. உணவில் கீரையை சாலட்கள், ஆம்லெட் மற்றும் ஸ்மூத்திகளில் சேர்க்கலாம். கீரையை வதக்கி எடுத்துக் கொள்ளலாம்.

பருப்பு வகைகள்

பருப்பு, கொண்டைக்கடலை, பீன்ஸ் போன்ற பருப்பு வகைகளில் புரதம், பயோட்டின் மற்றும் இரும்புச்சத்துக்கள் நிறைந்துள்ளது. இவை முடியின் மயிர்க்கால்களை மேம்படுத்தவும், முடி வளர்ச்சியைப் பராமரிக்கவும் உதவுகிறது. மேலும், முடி உடைவதைத் தடுக்கவும் மற்றும் ஆரோக்கியமான முடிக்கு தேவையான வைட்டமின்களை வழங்குகிறது. அதன் படி, அன்றாட உணவில் பருப்பு சூப்கள், கொண்டைக்கடலை சாலட்கள் அல்லது பீன்ஸ் அடிப்படையிலான உணவுகளைத் தயாரித்து சேர்த்துக் கொள்ளலாம்.

இந்த தகவல் உங்களுக்கு பிடித்திருக்கும் என நம்புகிறோம். இந்த கட்டுரையை உங்கள் நண்பர்களுக்கும், உறவினர்களுக்கும் பகிருங்கள். ஆரோக்கியம் தொடர்பான இதுபோன்ற பல சுவாரஸ்ய தகவல்களுக்கு தொடர்ந்து ஒன்லி மை ஹெல்த் உடன் இணைந்திருங்கள், மேலும் OnlyMyHealth பேஸ்புக் மற்றும் இன்ஸ்டா பக்கத்தை பின்தொடர இந்த இணைப்பை கிளிக் செய்யுங்கள்- Onlymyhealth Tamil FacebookOnlymyhealth Tamil Instagram

இந்த பதிவும் உதவலாம்: Hair Growth Foods: முடி வேகமாக வளர இந்த உணவுகளை முயற்சிக்கவும்!

 

Image Source: Freepik

Read Next

தாடி திட்டுத்திட்டாக ஆங்காங்கே மட்டும் வளருகிறதா? இதை மட்டும் பண்ணுங்க

Disclaimer