அழகான கூந்தலைப் பெற வேண்டுமா? இந்த மூன்று உணவுகளை சாப்பிடுங்க போதும்.. நிபுணர் சொன்ன சீக்ரெட்

Foods to eat for healthy hair growth: முடி வளர்ச்சியை ஆதரிக்கவும், முடி அழகாக இருக்கவும் சில ஆரோக்கியமான உணவுகளை எடுத்துக் கொள்ளலாம். இதில் முடி வளர்ச்சியை அதிகரிப்பதற்கு சாப்பிட வேண்டிய உணவுகள் குறித்து நிபுணர் பரிந்துரைத்த குறிப்புகளைக் காணலாம்.
  • SHARE
  • FOLLOW
அழகான கூந்தலைப் பெற வேண்டுமா? இந்த மூன்று உணவுகளை சாப்பிடுங்க போதும்.. நிபுணர் சொன்ன சீக்ரெட்


Foods to eat for better hair growth: இன்றைய காலத்தில் மோசமான வாழ்க்கைமுறை மற்றும் ஆரோக்கியமற்ற உணவுமுறை காரணமாக பலரும் பல்வேறு பிரச்சனைகளைச் சந்திக்கின்றனர். இதில் முடி சார்ந்த பிரச்சனைகளும் அடங்கும். குறிப்பாக போதிய பராமரிப்பு இல்லாமை மற்றும் ஊட்டச்சத்து குறைபாடு உள்ளிட்ட காரணங்களால் முடி உதிர்வு, முடி வறட்சி, நுனிமுடி பிளவு உள்ளிட்ட பிரச்சனைகளைச் சந்திக்க நேரிடலாம். ஆனால் முடி வளர்ச்சியை அதிகரிக்கவும், முடி ஆரோக்கியத்தை மேம்படுத்தவும் சில ஆரோக்கியமான முறைகளைக் கையாள்வது அவசியமாகும்.

அவ்வாறு முடி வளர்ச்சியின் தூண்டுதலை மேம்படுத்தவும், முடியை ஆரோக்கியமாக வைத்திருக்கவும் சில ஆரோக்கியமான உணவுகளை எடுத்துக் கொள்வது முக்கியமாகும். சில உணவு வகைகளில் முடி ஆரோக்கியத்தை மேம்படுத்தக்கூடிய ஊட்டச்சத்துக்கள் நிறைந்து காணப்படுகிறது. இது தவிர, முடி உதிர்தலை ஊக்குவிக்கவும், உச்சந்தலைக்கு ஊட்டமளிக்கவும், முடி உடைப்பைக் குறைக்கவும் உதவுகிறது. அதன் படி, ஊட்டச்சத்து நிபுணர் Palak Nagpal அவர்கள் தனது இன்ஸ்டாகிராம் பதிவில் முடி வளர்ச்சிக்கு சாப்பிட வேண்டிய சில உணவுகள் குறித்து குறிப்பிட்டுள்ளார். அதைப் பற்றி காண்போம்.

இந்த பதிவும் உதவலாம்: Hair growth foods: மின்னல் வேகத்தில் முடி வளரணுமா? இந்த ஊட்டச்சத்து நிறைந்த உணவுகளை சாப்பிடுங்க

முடி வளர்ச்சிக்கு சாப்பிட வேண்டிய உணவுகள்

முடி வளர்ச்சியை ஆதரிக்கவும், முடி ஆரோக்கியத்தை மேம்படுத்தவும் சாப்பிட வேண்டிய சில உணவுகளைக் காணலாம்.

வால்நட்ஸ்

வால்நட்ஸில் வைட்டமின்கள் பி, வைட்டமின் ஈ, பயோட்டின், புரதங்கள் மற்றும் மெக்னீசியம் போன்ற பல்வேறு ஊட்டச்சத்துக்கள் நிறைந்து காணப்படுகிறது.

  • இதில் பயோட்டின் ஊட்டச்சத்துக்கள் முடியை வலுப்படுத்த உதவுகிறது. அதே சமயம், இதில் உள்ள வைட்டமின்கள் பி உச்சந்தலையின் ஆரோக்கியத்தை ஊக்குவிக்கவும், முடி உடைப்பைக் குறைக்கவும் உதவுகிறது.
  • வால்நட்ஸில் காணப்படும் புரதங்கள் மற்றும் மெக்னீசியம் போன்ற ஊட்டச்சத்துக்கள் உச்சந்தலையை ஊட்டமளிக்க உதவுகிறது. இவை முடி வெட்டுக்களை வலுப்படுத்தவும், உச்சந்தலையை வளர்க்கவும் வழிவகுக்கிறது.
  • இதில் உள்ள வைட்டமின் ஈ முடி செல்களை சேதத்திலிருந்து பாதுகாக்கவும், ஆரோக்கியமான முடி வளர்ச்சியை ஊக்குவிக்கவும் உதவுகிறது.

தயிர்

அன்றாட உணவில் தயிர் சேர்ப்பது முடி ஆரோக்கியத்தை மேம்படுத்தவும், முடி வளர்ச்சிக்கும் உதவுகிறது. இதில் வைட்டமின் பி5 (பாந்தோதெனிக் அமிலம்) மற்றும் வைட்டமின் டி போன்ற ஊட்டச்சத்துக்கள் நிறைந்து காணப்படுகிறது.

  • தயிரில் நிறைந்து காணப்படும் வைட்டமின் பி5 முடி நுண்ணறை ஆரோக்கியத்தை ஆதரிக்கிறது. இது முடி மெலிதல் மற்றும் உதிர்தலைத் தடுக்க வழிவகுக்கிறது.
  • இதில் நிறைந்துள்ள வைட்டமின் டி முடி வளர்ச்சியை ஊக்குவிப்பதுடன், முடி உதிர்தலைத் தடுக்கிறது.
  • எனவே தயிர் உட்கொள்வதன் மூலம் ஒட்டுமொத்த முடி வலிமையையும், நுண்ணறை ஆரோக்கியத்தையும் ஆதரிக்கலாம். இது ஆரோக்கியமான முடிக்கு பங்களிக்கிறது.

இந்த பதிவும் உதவலாம்: Hair Growth Foods: நீளமான முடி வேணுமா.? இந்த உணவுகள் கட்டாயம்.!

பருப்பு வகைகள்

நாம் சமையலில் பயன்படுத்தக்கூடிய பருப்பு வகைகள் முடி வளர்ச்சியை மேம்படுத்த உதவுகிறது. எனவே அன்றாட உணவில் பருப்பு வகைகளைச் சேர்ப்பதன் மூலம் முடி ஆரோக்கியத்தை மேம்படுத்தலாம்.

  • இதில் வைட்டமின்கள் பி மற்றும் சி, புரதம், இரும்பு மற்றும் துத்தநாகம் போன்ற ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளது.
  • இந்த வைட்டமின்கள் பி, சி போன்றவை முடி வளர்ச்சியைத் தூண்டவும், ஒட்டுமொத்த முடி ஆரோக்கியத்தை ஆதரிக்கவும் உதவுகிறது.
  • இதில் காணப்படும் புரதங்கள் முடி வளர்ச்சி மற்றும் பழுதுபார்ப்பில் உதவுகிறது. அதே சமயம் இதில் உள்ள இரும்பு மற்றும் துத்தநாகம் முடி உதிர்தலைத் தடுக்கிறது.
  • இவை முடி ஆரோக்கியத்தை மீட்டெடுக்கவும் வளர்ச்சியை ஊக்குவிக்கவும் அவசியமானதாகும்.

நிபுணரின் கூற்றுப்படி, இது போன்ற உணவுகளைச் சேர்த்துக் கொள்வதன் மூலம் அழகான மற்றும் ஆரோக்கியமான முடியைப் பெறலாம்.

இந்த பதிவும் உதவலாம்: ஸ்ட்ராங்கான, நீளமான முடிக்கு இந்த ஐந்து உணவுகளைக் கட்டாயம் உங்க டயட்ல சேர்த்துக்கோங்க

Image Source: Freepik

Read Next

ஹேர் மாஸ்க் அல்லது கண்டிஷனர்.. இவற்றில் எது சிறந்தது.. வித்தியாசத்தை இங்கே புரிந்து கொள்ளுங்கள்..

Disclaimer