Hair growth foods: மின்னல் வேகத்தில் முடி வளரணுமா? இந்த ஊட்டச்சத்து நிறைந்த உணவுகளை சாப்பிடுங்க

Zinc-rich foods for hair growth in tamil: முடி வளர்ச்சியை ஆதரிக்க பல்வேறு வகையான ஊட்டச்சத்துக்கள் நிறைந்த உணவுகளை அன்றாட உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும். அவ்வாறு முடி வளர்ச்சிக்கு ஜிங்க் முக்கிய பங்கு வகிக்கிறது. இதில் முடி வளர்ச்சியை அதிகரிக்க சாப்பிட வேண்டிய ஜிங்க் நிறைந்த உணவுகளைக் காணலாம்.
  • SHARE
  • FOLLOW
Hair growth foods: மின்னல் வேகத்தில் முடி வளரணுமா? இந்த ஊட்டச்சத்து நிறைந்த உணவுகளை சாப்பிடுங்க


Zinc rich foods for hair growth and thickness: இன்றைய காலத்தில் மோசமான வாழ்க்கை முறை மற்றும் ஆரோக்கியமற்ற உணவுமுறை காரணமாக பலரும் பல பிரச்சனைகளைச் சந்திக்கின்றனர். இதில் பொதுவான பிரச்சனைகளில் ஒன்றாக முடி சார்ந்த பிரச்சனைகளும் அடங்கும். குறிப்பாக, வழக்கமான பராமரிப்பு இல்லாதது மற்றும் போதிய ஊட்டச்சத்துக்கள் இல்லாமை போன்ற காரணங்களால் முடி உதிர்தல், முடி உடைதல், முடி வறட்சி, நுனிமுடி பிளவு உள்ளிட்ட பிரச்சனைகள் ஏற்பட அதிக வாய்ப்புள்ளது. இந்த பிரச்சனைகளுக்குத் தீர்வாக மேற்பூச்சாக சில இயற்கை வைத்தியங்களைக் கையாளலாம். ஆனால், இது மட்டும் போதாது.

இயற்கையான முறையில் ஆரோக்கியமாக முடி வளர்வதற்கு சரியான ஊட்டச்சத்துக்கள் நிறைந்த உணவுகளை அன்றாட உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும். அவ்வாறு ஜிங்க் அல்லது துத்தநாகம் நிறைந்த உணவுகள் ஆரோக்கியமான முடி வளர்ச்சியை ஊக்குவிக்கவும், முடி உதிர்தலைத் தடுக்கவும், ஒட்டுமொத்த முடி ஆரோக்கியத்தை உறுதி செய்வதற்கும் குறிப்பிடத்தக்க பங்கு வகிக்கிறது. இந்த அத்தியாவசிய ஊட்டச்சத்துக்கள் முடி வளர்ச்சியில் ஈடுபடும் பல்வேறு நொதிகளின் செயல்பாட்டை ஆதரிக்கிறது. மேலும் இது பொடுகு மற்றும் உச்சந்தலையில் பிரச்சினைகளைத் தடுக்கவும் உதவுகிறது. இதில் முடி வளர்ச்சியை அதிகரிக்க ஜிங்க் நிறைந்த உணவுகளைக் காணலாம்.

இந்த பதிவும் உதவலாம்: Hair Growth Foods: முடி வேகமாக வளர இந்த உணவுகளை முயற்சிக்கவும்!

முடி வளர்ச்சிக்கு சாப்பிட வேண்டிய உணவுகள்

ஜிங்க் ஊட்டச்சத்துக்கள் நிறைந்த உணவுகளை உட்கொள்வது ஆரோக்கியமான, வலுவான மற்றும் வேகமாக வளரும் முடிக்கு வழிவகுக்கிறது. இதில் முடி வளர்ச்சிக்கு உதவும் ஜிங்க் நிறைந்த உணவுகளைக் காணலாம்.

கீரை

கீரை வகைகளில் பசலைக் கீரை வைட்டமின்கள் ஏ, சி, துத்தநாகம், இரும்புச்சத்து போன்ற பல்வேறு முக்கிய ஊட்டச்சத்துக்கள் நிறைந்ததாகும். இவை வலுவான மற்றும் ஊட்டமளிக்கும் முடியை பராமரிக்க அவசியமானவையாகும். இதில் இரும்புச்சத்து முடி நுண்குழாய்களுக்கு சிறந்த ஆக்ஸிஜன் சுழற்சியை ஊக்குவிக்கிறது. அதே சமயம், துத்தநாகம் முடி வளர்ச்சிக்கு காரணமான ஹார்மோன்களின் உற்பத்தியை ஒழுங்குபடுத்துகிறது.

கீரையைத் தொடர்ந்து உட்கொள்வதன் மூலம் முடி வளர்ச்சியைத் தூண்டவும், முடி இழைகளை வலுப்படுத்தவும் மற்றும் ஒட்டுமொத்த ஆரோக்கியத்தை மேம்படுத்தவும் உதவுகிறது. இதை சாலட்கள், ஸ்மூத்திகள் அல்லது சூப்கள் போன்ற வழிகளில் சேர்க்கலாம். இது முடி ஆரோக்கியத்திற்கு பங்களிக்கிறது. இதன் மூலம் முடி உதிர்தல் அல்லது முடி மெலிதல் போன்ற நிலைகளைத் தடுக்கலாம்.

பச்சைப்பயறு

இதில் துத்தநாகம், புரதம் மற்றும் வைட்டமின்கள் மற்றும் தாதுக்கள் போன்ற பிற அத்தியாவசிய ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளது. இவை முடியின் நுண்குழாய்களை ஊட்டமளிக்கவும், வலுவான மற்றும் ஆரோக்கியமான முடியை ஊக்குவிக்கவும் உதவுகிறது. இதன் மூலம் முடியின் ஆரோக்கியத்தை மேம்படுத்தலாம். அன்றாட உணவில் பாசிப்பயற்றை பருப்பு கறி, சூப்கள் அல்லது சாலடுகள் வடிவில் சேர்த்துக் கொள்வது எளிதான முறையாக அமைகிறது.

மேலும், இதில் முடி வளர்ச்சிக்குத் தேவையான பயோட்டின் ஊட்டச்சத்துக்களும் நிறைந்துள்ளது. இவை முடி வளர்ச்சிக்கும் வலுப்படுத்தலுக்கும் இன்றியமையாததாகும். இதன் மூலம் விரைவான மற்றும் வலுவான முடி வளர்ச்சியைப் பெறலாம். அன்றாட உணவில் தொடர்ந்து பாசிப்பருப்பைச் சேர்ப்பது தலைமுடியின் ஆரோக்கியத்தை அதிகரிக்கவும், வலுவான, பளபளப்பான மற்றும் வேகமாக வளரும் முடிக்கு பங்களிக்கவும் உதவுகிறது.

இந்த பதிவும் உதவலாம்: Biotin for hair growth: வேகமாக, இயற்கையாக முடி வளரணுமா? இந்த ஒரு வைட்டமின் நிறைந்த உணவுகளை எடுத்துக்கோங்க

கொண்டைக்கடலை

கொண்டைக்கடலையில் புரதம், துத்தநாகம் மற்றும் பயோட்டின் போன்றவை நம்பமுடியாத தாவர அடிப்படையிலான மூலமாகும். இந்த ஊட்டச்சத்துக்கள் நிறைந்த உணவுகளை உட்கொள்வது முடிக்கு ஊட்டமளிக்கவும், வளர்ச்சியை அதிகரிக்கவும் இன்றியமையாததாக விளங்குகிறது. இதில் உள்ள துத்தநாகம் ஆரோக்கியமான முடி நுண்குழாய்களைப் பராமரிப்பதில் மிகவும் முக்கிய பங்கு வகிக்கிறது.

அதே சமயம் இதில் உள்ள புரதம் முடி இழைகளை வலுப்படுத்தவும், முடி உடைவதைத் தடுப்பதற்கும் அவசியமாகும். முடியின் முக்கிய அங்கமான கெரட்டின் என்ற புரதத்தின் உற்பத்தியை அதிகரிப்பதற்கு பயோட்டின் உதவுகிறது. மேலும் இது முடி ஆரோக்கியத்தை மேம்படுத்தும் திறனுக்காக நன்கு அறியப்படுகிறது. அன்றாட உணவில் கொண்டைக்கடலை கறி, குழம்புகள் அல்லது சாலட்களில் சேர்த்து எடுத்துக் கொள்ளலாம். இதன் வழக்கமான நுகர்வு வலுவான, அடர்த்தியான மற்றும் வேகமான முடி வளர்ச்சிக்கு உதவுகிறது.

பூசணி விதைகள்

இது துத்தநாகத்தின் சிறந்த மூலமாகும். இது தவிர, முடி ஆரோக்கியத்திற்கு பங்களிக்கும் அத்தியாவசிய கொழுப்பு அமிலங்கள் மற்றும் ஆக்ஸிஜனேற்றிகளையும் கொண்டுள்ளது. இவை முடி நுண்குழாய்களைத் தூண்டவும், முடி மெலிவதைத் தடுக்கவும் மற்றும் ஆரோக்கியமான முடி வளர்ச்சியை ஊக்குவிக்கவும் உதவுகிறது.

கூடுதலாக, பூசணி விதைகளில் மெக்னீசியம் ஊட்டச்சத்துக்களும் உள்ளது. இது ஆரோக்கியமான முடியை ஊக்குவிக்கவும், உச்சந்தலையில் சுழற்சியை மேம்படுத்தவும் உதவுகிறது. இதன் மூலம் முடி நுண்குழாய்கள் போதுமான ஊட்டச்சத்துக்களைப் பெறுவதை உறுதி செய்கிறது. இதை நம் அன்றாட உணவில் சிற்றுண்டி, சாலட் அல்லது ஸ்மூத்திகள் போன்ற வழிகளில் எடுத்துக் கொள்ளலாம்.

முந்திரி

இது ஒரு சுவையான மற்றும் சத்தான ஜிங்க் நிறைந்த உணவாகும். இது முடி ஆரோக்கியத்தை மேம்படுத்துவது உட்பட பல்வேறு ஆரோக்கிய நன்மைகளைத் தருகிறது. இதில் மெக்னீசியம், துத்தநாகம் மற்றும் தாமிரம் போன்ற பிற முக்கிய தாதுக்களும் நிறைந்துள்ளன. இவை முடி நுண்குழாய்களைப் பராமரிக்கவும், முடி மெலிவதைத் தடுக்கவும் உதவுகிறது. தினசரி உணவில் முந்திரியைச் சேர்ப்பது உகந்த முடி ஆரோக்கியத்திற்கு வழிவகுக்கிறது.

இந்த பதிவும் உதவலாம்: Hair Growth Foods: நீளமான முடி வேணுமா.? இந்த உணவுகள் கட்டாயம்.!

Image Source: Freepik

Read Next

இளம் வயதில் நரை முடி பிரச்சனையா? கருகரு முடியைப் பெற இந்த இரண்டு பொருள்கள் போதும்

Disclaimer