Biotin sources for hair: அசுர வேகத்தில் முடி வளர நீங்க பயன்படுத்த வேண்டிய பயோட்டின் மூலங்கள்

Biotin sources for hair growth: முடி அடர்த்தியாகவும், நீளமாகவும் வளர வேண்டும் என்பது அனைவரின் விருப்பமாகும். முடி வளர்ச்சிக்கு முடி பராமரிப்பு முறைகளுடன், ஆரோக்கியமான உணவுமுறை அவசியமாகும். இதில் முடி வளர்ச்சியை மேம்படுத்துவதில் உதவும் பயோட்டின் மூலங்களைக் காணலாம்.
  • SHARE
  • FOLLOW
Biotin sources for hair: அசுர வேகத்தில் முடி வளர நீங்க பயன்படுத்த வேண்டிய பயோட்டின் மூலங்கள்

Which biotin is good for hair growth: முடி நீளமாகவும், அடர்த்தியாகவும் இருக்க வேண்டும் என்பதில் யாருக்குத் தான் ஆசை இருக்காது. ஆனால், இன்றைய காலத்தில் மோசமான வாழ்க்கை முறை, ஆரோக்கியமற்ற உணவுமுறை போன்ற பல்வேறு காரணங்களால் பலரும் முடி சார்ந்த பிரச்சனைகளைச் சந்திக்கின்றனர். உண்மையில் இது போன்ற காரணிகளால் முடி வறட்சி, முடி உடைதல் மற்றும் மெலிந்து போகுதல், நுனி முடிபிளவு உள்ளிட்ட பிரச்சனைகளைச் சந்திக்கும் நிலை ஏற்படலாம். இந்த பிரச்சனைகளிலிருந்து விடுபட பலரும் இரசாயனம் சார்ந்த முடி பராமரிப்பு முறைகளைப் பயன்படுத்துகின்றனர்.

எனினும் சிலர் இயற்கையான முடி வைத்தியங்களைக் கையாள்வதன் மூலம் ஆரோக்கியமான கூந்தலைப் பெறுகின்றனர். இருப்பினும் இந்த பராமரிப்பு முறைகளுடன் ஆரோக்கியமான உணவு உட்கொள்ளலும், சில சப்ளிமெண்ட்ஸ் எடுத்துக் கொள்வதும் அவசியமாகும். அவ்வாறு, முடி ஆரோக்கியம், தோல் மற்றும் நகங்களை ஆதரிப்பதில் பயோட்டின் முக்கிய பங்கு வகிக்கிறது. இது வைட்டமின் பி7 என்றும் அழைக்கப்படுகிறது. எனவே உகந்த முடி ஆரோக்கியத்தை பராமரிக்க பயோட்டின் நிறைந்த உணவுகளை உணவில் சேர்த்துக் கொள்வது முக்கியமாகும். இதில் முடி வளர்ச்சியை ஊக்குவிக்க உதவும் பயோட்டின் ஆதாரங்களைக் காணலாம்.

இந்த பதிவும் உதவலாம்: Biotin for Men: ஆண்களின் முடி வளர்ச்சிக்கு பயோட்டின் உதவுமா? பதில் இங்கே!

முடி ஆரோக்கியத்தை ஆதரிக்கும் பயோட்டின் ஆதாரங்கள்

நட்ஸ் மற்றும் விதைகள்

பாதாம், வால்நட்ஸ், சூரியகாந்தி விதைகள் மற்றும் ஆளி விதைகள் போன்ற நட்ஸ் மற்றும் விதைகள் பயோட்டின் நிறைந்த சிறந்த ஆதாரங்களாகும். இந்த ஊட்டச்சத்துக்கள் நிறைந்த சிற்றுண்டிகளை எடுத்துக் கொள்வது பயோட்டினை வழங்குவது மட்டுமல்லாமல், வைட்டமின் ஈ, ஆக்ஸிஜனேற்றிகள் மற்றும் அத்தியாவசிய கொழுப்பு அமிலங்களை வழங்குகிறது. இவை அனைத்துமே ஆரோக்கியமான முடி வளர்ச்சியை ஊக்குவிக்கிறது.

நட்ஸ் வகைகளில் உள்ள ஆரோக்கியமான கொழுப்புகள் உச்சந்தலை ஆரோக்கியத்திற்கு உதவுகிறது. இது முடி நுண்ணறைகளின் ஆரோக்கியத்தை ஆதரிக்கவும் உதவுகிறது. அதே சமயம், பயோட்டின் கெரட்டின் உற்பத்தியை அதிகரிக்கிறது. எனவே உணவில் பல்வேறு நட்ஸ் மற்றும் விதைகளைச் சேர்ப்பது உகந்த உகந்த முடி வளர்ச்சிக்குத் தேவையான ஊட்டச்சத்துக்களை வழங்க உதவுகிறது. அன்றாட உணவில் ஒரு கைப்பிடி நட்ஸ், விதைகளை சிற்றுண்டியாக எடுத்துக் கொள்ளலாம். இது தவிர, சாலட்கள், ஸ்மூத்திகளில் சேர்க்கலாம்.

முட்டைகள்

இது பயோட்டின் சத்து நிறைந்த ஆதாரங்களில் ஒன்றாகும். முடி வளர்ச்சியை ஊக்குவிக்க விரும்புபவர்கள் உணவில் ஒரு சிறந்த கூடுதலாக சேர்க்கப்படுகிறது. குறிப்பாக, முட்டையின் மஞ்சள் கரு மற்றும் வெள்ளை கரு இரண்டிலுமே பயோட்டின் நிறைந்துள்ளது. எனினும், இதில் மஞ்சள் கரு முதன்மையான மூலமாகும். இதில் ஆரோக்கியமான முடி உற்பத்திக்கு இன்றியமையாத உயர்தர புரதங்கள் மற்றும் அத்தியாவசிய அமினோ அமிலங்கள் நிறைந்துள்ளது.

பயோட்டின் ஆனது முடி வளர்ச்சியை ஆதரிக்கும் கெரட்டின் உற்பத்தியில் முக்கிய பங்கு வகிக்கிறது. பயோட்டின் குறைபாடு காரணமாக கெரட்டின் உற்பத்தி சீர்குலைக்கப்பட்டு உடையக்கூடிய, மெலிதான முடிக்கு வழிவகுக்கலாம். எனவே முட்டைகளைத் தவறாமல் உட்கொள்வது கெரட்டின் உற்பத்தியை ஆதரிக்கிறது. இதன் மூலம் வலுவான மற்றும் ஆரோக்கியமான முடியைப் பெறலாம். அன்றாட உணவில் முட்டைகளை சாலட்கள், சாண்ட்விச்சுகள் போன்றவற்றில் சேர்க்கலாம்.

இந்த பதிவும் உதவலாம்: Hair loss supplements: முடி உதிர்வால் அவதியா? இந்த சப்ளிமெண்ட்ஸ் யூஸ் பண்ணுங்க

கீரை வகைகள்

பசலைக்கீரையானது வைட்டமின்கள் ஏ மற்றும் சி, இரும்புச்சத்து, பயோட்டின், ஃபோலேட் உள்ளிட்ட பல்வேறு ஊட்டச்சத்துக்களின் சிறந்த மூலமாகும். இவை அனைத்துமே முடி ஆரோக்கியத்திற்கு பங்களிக்கிறது. இதில் இரும்புச்சத்துக்கள் முடி நுண்குழாய்களுக்கு ஆக்ஸிஜனை எடுத்துச் செல்ல உதவுகிறது. மேலும் ஆரோக்கியமான முடி வளர்ச்சியை ஊக்குவிக்கிறது. இந்த கீரையில் உள்ள பயோட்டின், மற்ற வைட்டமின்கள், தாதுக்களுடன் இணைந்து உச்சந்தலை மற்றும் நுண்குழாய்களுக்கு ஊட்டமளித்து, வலுவான மற்றும் அடர்த்தியான முடியை ஊக்குவிக்கிறது.

கூடுதலாக, பசலைக் கீரையில் உள்ள அதிகளவிலான வைட்டமின் சி முடி இழைகளை வலுவாகவும் ஆரோக்கியமாகவும் வைத்திருக்க உதவும் கொலாஜன் உற்பத்தியை ஆதரிக்கிறது. பசலைக் கீரையைத் தொடர்ந்து உட்கொள்வது முடியின் ஒட்டுமொத்த நிலையை மேம்படுத்துவதுடன், முடி வளர்ச்சியை அதிகரிக்க உதவுகிறது. அன்றாட உணவில் கீரையை சாலடுகள், ஸ்மூத்திகள் அல்லது சாண்ட்விச்களில் சேர்க்கலாம்.

சர்க்கரைவள்ளிக் கிழங்கு

இது ஒரு சுவையான மற்றும் சத்தான உணவாக மட்டுமல்லாமல், பயோட்டின் நிறைந்த சிறந்த இயற்கை மூலமாகவும் கருதப்படுகிறது. இதில் பீட்டா கரோட்டின் உள்ளது. இது உடல் வைட்டமின் ஏ ஆக மாற்ற உதவுகிறது. மேலும் வைட்டமின் ஏ முடி செல்கள் உட்பட ஆரோக்கியமான செல் உற்பத்தி மற்றும் வளர்ச்சிக்கு உதவுகிறது. பயோட்டின் நேரடியாக கெரட்டின் உற்பத்தியை ஊக்குவிக்கும் அதே சமயம், சர்க்கரைவள்ளிக் கிழங்கில் உள்ள பயோட்டின் மற்றும் வைட்டமின் ஏ போன்றவை தலைமுடிக்கு ஆரோக்கியமான ஊக்கத்தை அளிக்கிறது.

சர்க்கரைவள்ளிக்கிழங்கு ஆக்ஸிஜனேற்றிகள் நிறைந்துள்ளன. இது ஆக்ஸிஜனேற்ற அழுத்தத்தைக் குறைக்கவும், முடி நுண்ணறைகளை சேதத்திலிருந்து பாதுகாக்கவும் உதவுகிறது. அன்றாட உணவில் சர்க்கரைவள்ளிக்கிழங்கைச் சேர்ப்பதன் மூலம் ஆரோக்கியமான மற்றும் விரைவான முடி வளர்ச்சியை ஊக்குவிக்கலாம். அன்றாட உணவில் சர்க்கரைவள்ளிக் கிழங்கை சூப்கள், சாலட்கள் போன்ற வழிகளில் சேர்க்கலாம்.

இவ்வாறு பல்வேறு ஆரோக்கியமான வழிகளில் அன்றாட உணவில் பயோட்டின் நிறைந்த ஆதாரங்களைச் சேர்ப்பதன் மூலம் முடி வளர்ச்சியை ஊக்குவிக்கலாம்.

இந்த தகவல் உங்களுக்கு பிடித்திருக்கும் என நம்புகிறோம். இந்த கட்டுரையை உங்கள் நண்பர்களுக்கும், உறவினர்களுக்கும் பகிருங்கள். ஆரோக்கியம் தொடர்பான இதுபோன்ற பல சுவாரஸ்ய தகவல்களுக்கு தொடர்ந்து ஒன்லி மை ஹெல்த் உடன் இணைந்திருங்கள், மேலும் OnlyMyHealth பேஸ்புக் மற்றும் இன்ஸ்டா பக்கத்தை பின்தொடர இந்த இணைப்பை கிளிக் செய்யுங்கள்- Onlymyhealth Tamil FacebookOnlymyhealth Tamil Instagram

இந்த பதிவும் உதவலாம்: Biotin for hair growth: வேகமாக, இயற்கையாக முடி வளரணுமா? இந்த ஒரு வைட்டமின் நிறைந்த உணவுகளை எடுத்துக்கோங்க

Image Source: Freepik

Read Next

Vembalam pattai for hair: முடி நீளமா, அடர்த்தியா வேணுமா? வேம்பாளம்பட்டை எண்ணெயை இப்படி யூஸ் பண்ணுங்க

Disclaimer