What vitamins or supplements help with hair loss: இன்றைய காலகட்டத்தில் மோசமான வாழ்க்கை முறை, உணவுமுறை காரணமாக பல்வேறு பிரச்சனைகளைச் சந்திக்கின்றனர். இதில் முடி சார்ந்த பிரச்சனைகளும் அடங்கும். அதிலும் குறிப்பாக, போதிய பராமரிப்பு மற்றும் போதிய ஊட்டச்சத்து இல்லாமையால் முடி உதிர்வு, முடி வறட்சி மற்றும் இன்னும் சில பிரச்சனைகளைச் சந்திக்க நேரிடலாம். இந்த சூழ்நிலையில், வைட்டமின்கள், தாதுக்கள் மற்றும் ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள் நிறைந்த சீரான உணவில் கவனம் செலுத்துவதன் மூலமும், சரியான முடி பராமரிப்பு நுட்பங்களைப் பயன்படுத்துவதன் மூலமும் தலைமுடியின் ஆரோக்கியத்தைப் பாதுகாக்கலாம்.
சரியான மற்றும் ஆரோக்கியமான உணவுமுறை உடல் ஆரோக்கியத்துடன், முடி ஆரோக்கியத்தையும் பராமரிக்கிறது. ஆரோக்கியமான மற்றும் ஊட்டச்சத்துக்கள் நிறைந்த உணவுகளை எடுத்துக் கொள்வது நல்ல முடி பராமரிப்பிற்கு வழிவகுக்கிறது. தலைமுடி ஆரோக்கியத்திற்கு பலரும் இயற்கை பொருள்கள் நிறைந்த ஹேர் மாஸ்க்குகளைப் பயன்படுத்துகின்றனர். எனினும், முடியை உள்ளிருந்தே ஆழமாக வலுவாக்கவும், முடி வளர்ச்சியை ஊக்குவிக்கவும் , முடி உதிர்வை நிறுத்தவும் ஊட்டச்சத்துக்கள் நிறைந்த சப்ளிமெண்ட்ஸ்களை எடுத்துக் கொள்ளலாம். இதில் முடி உதிர்வைத் தடுக்க உதவும் சப்ளிமெண்ட்ஸ் சிலவற்றைக் காணலாம்.
இந்த பதிவும் உதவலாம்: Eggs for Hair: முடிக்கு முட்டை பயன்படுத்த போறீங்களா? இப்படி யூஸ் பண்ணுங்க
முடி ஆரோக்கியத்தை மேம்படுத்தும் சப்ளிமெண்ட்ஸ்
ஒமேகா 3 கொழுப்பு அமிலங்கள்
முடி உதிர்வைத் தவிர்க்கவும், முடி ஆரோக்கியத்தை மேம்படுத்தவும் ஒமேகா 3 கொழுப்பு அமிலங்கள் ஒரு சிறந்த தேர்வாகும். குறிப்பாக, இவை உச்சந்தலையின் ஆரோக்கியத்தைப் பாதுகாப்பதற்கு பெரிதும் உதவுகிறது. அதன் படி, ஒமேகா 3 கொழுப்பு அமிலங்கள் நிறைந்த மீன் எண்ணெய் மற்றும் ஆளி விதைகள் போன்றவற்றை எடுத்துக் கொள்ளலாம். இவை உச்சந்தலையின் சுழற்சியை ஆதரிக்கவும், வீக்கத்தைக் குறைக்கவும் உதவுகிறது. இதன் மூலம் முடியை வலுவாக மற்றும் பளபளப்பாக வைக்க உதவுகிறது.
இரும்புச்சத்துக்கள்
முடி உதிர்வு ஏற்படுவதற்கான ஒரு பொதுவான காரணம் உடலில் இரும்புச்சத்து குறைபாடு இருப்பதே ஆகும். அதிலும், குறிப்பாக பெண்களில் இரும்புச்சத்து குறைபாடு காரணமாக, இரத்த சோகை ஏற்படும் போது முடி உதிர்வு ஏற்படுகிறது. தலைமுடியின் மயிர்க்கால்கள் ஆக்ஸிஜனைப் பெறுவதற்கும், உயிரணு வளர்ச்சி மற்றும் பழுதுபார்க்கவும் இரும்புச்சத்து அவசியமானதாகக் கருதப்படுகிறது. எனவே முடி ஆரோக்கியத்திற்கு இரும்புச்சத்துக்களை எடுத்துக் கொள்வது முடி வளர்ச்சியை மீட்டெடுக்கவும், தீர்ந்து போன பொருட்களை மீண்டும் உருவாக்கவும் உதவுகிறது. இரும்புச்சத்து நிறைந்த சப்ளிமெண்ட்ஸ்களை எடுத்துக் கொள்வதன் மூலம் இரும்புச்சத்து குறைபாட்டால் ஏற்படும் கூடுதல் முடி உதிர்வைத் தவிர்க்கலாம்.
வைட்டமின் டி ஊட்டச்சத்துக்கள்
உடலில் வைட்டமின் டி குறைபாடு காரணமாக முடி உதிர்தல் பிரச்சனை ஏற்படுகிறது. இந்த அத்தியாவசிய வைட்டமின்கள் மயிர்க்கால்களைத் தூண்டவும், முடி வளர்ச்சி சுழற்சிகளைக் கட்டுப்படுத்தவும் உதவுகிறது. இதற்கு வைட்டமின் ஈ சப்ளிமெண்ட்ஸ் அல்லது சூரிய ஒளியில் இருந்து போதுமான வைட்டமின் டி போன்றவற்றைப் பெறலாம். இந்த வைட்டமின்கள் முடி உதிர்வதை நிறுத்தவும், அடர்த்தியான, ஆரோக்கியமான முடி வளர்ச்சியை ஊக்குவிக்கவும் உதவுகிறது.
இந்த பதிவும் உதவலாம்: முடி வலிமையை அதிகரிக்க இந்த 5 சூப்பர் ஃபுட்ஸை எடுத்துக்கோங்க!
துத்தநாகம்
புதிய முடியின் வளர்ச்சியை ஊக்குவிக்கவும், உச்சந்தலை ஆரோக்கியத்திற்கும் துத்தநாகம் மிகவும் அவசியமான ஊட்டச்சத்துக்கள் ஆகும். இது முடி ஆரோக்கியத்திற்குத் தேவையான கெரட்டின் தொகுப்பை ஊக்குவிக்கிறது. இது முடி இழைகளை உருவாக்கும் புரதம் ஆகும். இவை பொடுகு மற்றும் அரிப்பைக் குறைக்க உதவுகிறது. மேலும், இது உச்சந்தலையில் எண்ணெய் உற்பத்தியைக் கட்டுப்படுத்தவும், மயிர்க்கால்களின் வலிமையை மேம்படுத்த மற்றும் முடி உதிர்வைக் கட்டுப்படுத்த உதவுகிறது. இதன் மூலம் ஆரோக்கியமான மற்றும் அடர்த்தியான முடி வளர்ச்சியைப் பெறலாம்.
பயோட்டின்
இவை முடி ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவும் முக்கிய ஊட்டச்சத்துக்களில் ஒன்றாகும். இவை முடி இழைகளின் வலிமை மற்றும் ஒருமைப்பாட்டைப் பாதுகாக்க உதவுகிறது. மேலும் இது கெரட்டின் தொகுப்பை அதிகரிக்கவும், முடிக்கு கட்டமைப்பைத் தரக்கூடிய புரதமாகவும் அமைகிறது. இதன் மூலம் முழுமையான, அடர்த்தியான முடி வளர்ச்சியைப் பெறலாம். மேலும் இது முடி உடைவது மற்றும் இழப்பைத் தவிர்க்கிறது.
இது போன்ற சப்ளிமெண்ட்ஸ்களை எடுத்துக் கொள்வதன் மூலம் முடியின் வலிமையை மேம்படுத்தி, முடி ஆரோக்கியத்தை மேம்படுத்தலாம்.
இந்த பதிவும் உதவலாம்: Vitamin E for Hair: வைட்டமின் ஈ குறைபாடு முடி உதிர்வை ஏற்படுத்துமா? நிபுணர்கள் கூறுவது என்ன?
Image Source: Freepik