Hair Vitamins: முடி வளர்ச்சிக்கு சப்ளிமெண்ட்ஸ் எடுப்பது பயனுள்ளதா? நிபுணர்கள் கூறுவது என்ன?

  • SHARE
  • FOLLOW
Hair Vitamins: முடி வளர்ச்சிக்கு சப்ளிமெண்ட்ஸ் எடுப்பது பயனுள்ளதா? நிபுணர்கள் கூறுவது என்ன?


Best Vitamins and Supplements for Hair Growth: கருகருவென அடர்த்தியான மற்றும் பளபளப்பான முடி யாருக்குத்தான் பிடிக்காது? ஆனால், இதற்கு ஊட்டச்சத்து மற்றும் முறையான பராமரிப்பு மிகவும் முக்கியம். நாம் உண்ணும் உணவின் மூலம் கூந்தலுக்கு தேவையான ஊட்டச்சத்து கிடைக்கும். ஆனால் முடி பளபளப்பாக இருக்க, கவனிப்பு மிக அவசியம். தவறான உணவு மற்றும் வாழ்க்கை முறை காரணமாக, முடி வலுவிழக்கத் தொடங்குகிறது.

பலர் இந்த பிரச்சனையை குறைக்க சப்ளிமெண்ட்ஸ் எடுத்துக்கொள்கிறார்கள். இன்னும் பலர் முடி வளர்ச்சிக்கு கூடுதல் மருந்துகளையும் எடுத்துக்கொள்கிறார்கள். ஆனால், முடி வளர்ச்சிக்கு நாம் எடுக்கும் சப்ளிமெண்ட்ஸ் உண்மையில் வேலை செய்கிறதா? கூந்தல் வளர்ச்சிக்கு சப்ளிமெண்ட்ஸ் அவசியமா? இதுபோன்ற பல கேள்விகளுக்கு அழகுக்கலை நிபுணர் டாக்டர் ஹுமா ஷேக் பதிலளித்து, இன்ஸ்டாகிராமில் ஒரு வீடியோவைப் பகிர்ந்துள்ளார். அவற்றில் கூறியுள்ள விஷயங்களை இங்கே விரிவாக பார்க்கலாம்.

இந்த பதிவும் உதவலாம் : Hair Loss Prevention: முடி உதிர்வை இயற்கையாக கட்டுப்படுத்த இதை மட்டும் செய்யுங்க!

முடி வளர்ச்சிக்கு சப்ளிமெண்ட்ஸ் அவசியமா? - Are supplements necessary for hair growth?

நிபுணர்களின் கூற்றுப்படி, முடி வளர்ச்சிக்கு கூடுதல் மருந்துகள் தேவையில்லை. முடி வளர்ச்சியில் சப்ளிமெண்ட்ஸ் பயனுள்ளதாக இருக்கும் என்று எந்த ஆய்விலும் கூறவில்லை. முடி வலுவிழக்க காரணம் உடலில் ஊட்டச்சத்துக்கள் இல்லாததுதான். இதன் காரணமாக முடியின் வேர்கள் தளர்வாக மாற ஆரம்பிக்கும்.

முடி வளர்ச்சிக்கு எந்தெந்த சத்துக்களை எடுத்துக்கொள்ள வேண்டும்? - Nutrients Needed For Hair Growth

பயோட்டின் (Biotin)

பயோட்டின், வைட்டமின் பி7 என்றும் அழைக்கப்படுகிறது. அதன் குறைபாடு காரணமாக, முடி மெலிந்து உதிர தொடங்குகிறது. பலர் முடி வளர்ச்சிக்கு பயோட்டின் சப்ளிமெண்ட்ஸ் எடுத்துக்கொள்கிறார்கள். முட்டை, பருப்புகள் மற்றும் முழு தானியங்கள் போன்றவை பயோட்டினின் சிறந்த மூலங்கள். முடியின் ஆரோக்கியமான வளர்ச்சிக்கு இது மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.

இரும்பு (Iron)

இரும்புச்சத்து குறைபாடும் உங்கள் முடி உதிர்வை அதிகரிக்கும். குறிப்பாக, பெண்களுக்கு இரும்புச்சத்து குறைபாடு இரத்த சோகை மற்றும் முடி உதிர்தல் போன்ற பிரச்சனைகளை ஏற்படுத்தும். முடி ஆரோக்கியமாக இருக்க, சிவப்பு இறைச்சி, கீரை மற்றும் பருப்பு போன்றவற்றை உங்கள் உணவில் சேர்த்துக்கொள்ளலாம்.

இந்த பதிவும் உதவலாம் : Turmeric For White Hair : மஞ்சளால் நரைமுடியை கருப்பாக்க முடியுமா? - தலைக்கு பயன்படுத்துவது எப்படி?

வைட்டமின் டி (Vitamin D)

உடலில் வைட்டமின் டி குறைபாடும் முடி உதிர்வை அதிகரிக்கும். முடி உதிர்வதற்கும், மெலிவதற்கும் இதுவும் முக்கிய காரணமாக இருக்கலாம். வெயிலில் சிறிது நேரம் செலவிடுவது மற்றும் மீன் மற்றும் வலுவூட்டப்பட்ட பால் பொருட்களை சாப்பிடுவது வைட்டமின் டி குறைபாட்டை சரிசெய்யும்.

இந்த விஷயங்களை மனதில் வைத்துக் கொள்ளுங்கள்

  • மன அழுத்தத்திலிருந்து விலகி இருங்கள். ஏனெனில், உடலில் கார்டிசோலின் அதிகரிப்பு அதிகப்படியான முடி உதிர்தலை ஏற்படுத்தும்.
  • உங்கள் வாழ்க்கை முறையை ஆரோக்கியமாக வைத்திருங்கள். மேலும், தினமும் உடற்பயிற்சி செய்வதை வழக்கமாக்கிக் கொள்ளுங்கள். இது நச்சுகளை அகற்றி, முடி வளர்ச்சியை துரிதப்படுத்தும்.

இந்த பதிவும் உதவலாம் : Long hair Home Remedies: 10 நாட்களில் தலைமுடி தரையைத் தொட… தேங்காய் எண்ணெய்யுடன் இத கலந்து தடவுங்க!

  • ஆரோக்கியமான உணவுகளை சாப்பிடுங்கள். தினமும் பழங்கள் மற்றும் காய்கறிகளை கண்டிப்பாக உட்கொள்ள வேண்டும். இது உங்கள் உடலுக்கு போதுமான ஊட்டச்சத்தை வழங்கும்.
  • உங்கள் தலைமுடி பல மாதங்களாக உதிர்ந்தால், நீங்கள் ஒரு மருத்துவரை அணுக வேண்டும். உடலில் சில நோய்களின் அறிகுறியாகவும் இருக்கலாம்.

Pic Courtesy: Freepik

Read Next

Sesame Seeds Hair Mask: முடியை ஸ்ட்ராங்கா வைக்க உதவும் எள் விதை ஹேர் மாஸ்க். எப்படி பயன்படுத்துவது?

Disclaimer