Hair Growth: ஷாம்பு பயன்படுத்தினால் முடி வளருமா? நிபுணர்கள் கூறுவது என்ன?

  • SHARE
  • FOLLOW
Hair Growth: ஷாம்பு பயன்படுத்தினால் முடி வளருமா? நிபுணர்கள் கூறுவது என்ன?


How to grow hair faster: நீண்ட அடர்த்தியான கூந்தலைப் பெற, பெரும்பாலான பெண்கள் ஹேர் மாஸ்க், ஹேர் ஆயில், ஷாம்பு போன்ற சந்தைகளில் விற்கப்படும் ஹேர் தயாரிப்புகளை வாங்கி பயன்படுத்துகின்றனர். முடி உதிர்தல் மற்றும் உடைதல் போன்ற காரணங்களால், நீளமாக முடி வளர்ப்பது கடினமாக உள்ளது. இதற்காக, நீளமான கூந்தலை பெற விலை உயர்ந்த ஷாம்புகளைப் பயன்படுத்துகின்றனர். ஆனால், அதை பயன்படுத்துவதால் நமக்கு எந்த பலனும் கிடைப்பதில்லை.

இதற்கு மத்தியில், நம்மில் பலர் முடி உதிர்வை சரி செய்யவும், கூந்தல் வளர்ச்சியை அதிகரிக்கவும் ஷாம்பூ வாங்கி பயன்படுத்துவோம். ஆனால், ஷாம்பூவைப் பயன்படுத்தினால் முடி வளருமா என்ற கேள்வி நம்மில் பலரின் மனதில் அடிக்கடி எழும். கூந்தல் வளர்ச்சிக்கு சிறந்த ஷாம்பூவைப் பயன்படுத்தும் பெண்களில் நீங்களும் ஒருவராக இருந்தால், இதற்கான பதிலை நாங்கள் உங்களுக்கு கூறுகிறோம்.

இந்த பதிவும் உதவலாம் : கரு கரு கூந்தலைப் பெற ஆம்லா உடன் இந்த ஒரு பொருளைச் சேர்த்து பயன்படுத்துங்க.

ஷாம்பு உண்மையில் முடி வளர்ச்சிக்கு உதவுமா?

ஒரு மரம் வளர சூரிய ஒளி, தண்ணீர் மற்றும் மண் தேவைப்படுவது போல், முடி வளர ஷாம்பு மட்டும் போதாது. ஷாம்பு உங்கள் தலைமுடியை வெளிப்புறத்தில் அழகாகக் காட்ட உதவும். ஆனால், அதை வலுவாகவும் நீளமாகவும் மாற்ற, அதற்கு உள்ளிருந்து ஊட்டச்சத்து தேவை.

தோல் மருத்துவர் டாக்டர் ஸ்ரேயா கபூர் இது குறித்து கூறுகையில், “ஷாம்பு உங்கள் உச்சந்தலையை சுத்தப்படுத்தவும், உங்கள் தலைமுடியை சீரமைக்கவும் மற்றும் உங்கள் முடியின் அமைப்பை ஓரளவிற்கு பாதுகாக்கவும் உதவும். ஆனால் இது உங்கள் தலைமுடியை வளரச் செய்வதற்கு உதவாது. புரதங்கள், வைட்டமின்கள், தாதுக்கள் மற்றும் ஹார்மோன்களின் அளவு ஆகியவை முடி வளர்ச்சிக்கு உதவுகிறது. அத்துடன் முடியை பராமரிக்க வேண்டியதும் அவசியம்”. எனவே, நீளமான கூந்தலைப் பெற ஊட்டச்சத்து நிறைந்த உணவுகளை உணவில் சேர்த்துக் கொள்வது அவசியம்.

இந்த பதிவும் உதவலாம் : Hair Growth Tips: உங்க தலைமுடி எலி வால் மாதரி ஒல்லியா இருக்கா? இந்த 3 ஹேர் மாஸ்கை பயன்படுத்துங்க!

முடி வளர்ச்சிக்கு என்ன சாப்பிட வேண்டும்?

  • புரதம் நிறைந்த உணவுகளை சாப்பிடுங்கள், இறைச்சி, மீன், முட்டை, பீன்ஸ், பருப்புகள், சோயாபீன், பருப்பு வகைகள், உலர் பழங்கள் ஆகியவற்றை உணவில் சேர்த்துக்கொள்ளலாம்.
  • தாதுக்கள் நிறைந்த உணவுகளாக நீங்கள் இலைகள், கீரைகள் மற்றும் பச்சை காய்கறிகளை உட்கொள்ளலாம்.
  • வைட்டமின் ஈ உச்சந்தலையில் ஈரப்பதத்தை பராமரிக்க உதவுகிறது, எனவே சூரியகாந்தி விதைகள், வேர்க்கடலை, கீரை, கடுக்காய் போன்ற உணவுகளை உங்கள் உணவில் சேர்த்துக் கொள்ளலாம்.

இந்த பதிவும் உதவலாம் : கொத்து, கொத்தா முடி கொட்டுதா?… தடுப்பதற்கான எளிய வழிகள் இதோ!

முடி நீளமாக வளர, ஆரோக்கியமான உணவு மற்றும் வாழ்க்கை முறையை பின்பற்றவும். ஊட்டச்சத்து நிறைந்த உணவுகளை உட்கொள்வதோடு, நீரேற்றத்துடன் இருங்கள் மற்றும் உங்கள் தலைமுடியை சரியான முறையில் கவனித்துக் கொள்ளுங்கள்.

Pic Courtesy: Freepik

Read Next

Banana Hair Mask: சுருள் முடிபிரச்சனைக்கு வாழைப்பழ ஹேர் மாஸ்க் யூஸ் பண்ணுங்க

Disclaimer