$
Tips To Grow Hair Faster: ஆண் பெண் என இருபாலரும் தங்கள் அழகு மீது அதிக கவனம் செலுத்தி வருகிறார்கள். அழகு என்று வரும்போது முடி முக்கிய பங்கு வகிக்கிறது. இதனை பராமரிக்க பல முயற்சிகளை எடுக்கிறார்கள். இதற்கான சந்தையில் கிடைக்கும் பொருள் முதல் வீட்டு வைத்தியம் வரை அனைத்தையும் செய்கிறார்கள்.
சிலருக்கு முடி அடர்த்தியாகவும், அழகாகவும், நீளமாகவும் இருக்கும். சிலருக்கு முடி மெலிந்து காணப்படும். இத்தகைய சூழலி, முடி நீளமாகவும், அடத்தியாகவும் வளர என்ன செய்ய வேண்டும் என்பதை நாங்கள் உங்களுக்கு சொல்கிறோம்.

ட்ரிம் செய்யவும்
நுனி முடியில் பிளவு ஏற்படும் போது, முடி வரட்சி, முடி உடைதல் போன்றவை ஏற்படும். இதில் இருந்து விடுபட மாதம் ஒரு முறை ட்ரிம் செய்யவும். இது முடி வளர்ச்சியை ஊக்குவிக்கவும், முடி உடைவை தடுக்கவும் உதவுகிறது.
ஹேர் மாஸ்க்
வாரம் இரு முறை ஏதேனும் ஹேர் மாஸ்க் வீட்டிலேயே செய்து தடவி, தலை குளிக்கவும். இதற்கு முட்டை, வெந்தயம், வேப்பிலை போன்றவற்றை பயன்படுத்தலாம். இது முடியை பொலிவாகவும், மென்மையாகவும் மாற்றுகிறது.
இதையும் படிங்க: தலை முடிக்கு எண்ணெய் தடவ வேண்டியது அவசியமா? டாக்டர்கள் கூறுவது என்ன?
ஆயில் மசாஜ்
தலைக்கு அதிகம் எண்ணெய் வைக்க வேண்டாம் என்று சிலர் கூறுகிறார்கள். ஆனால் வாரம் ஒரு முறையாவது, தலைக்கு ஆயில் மசாஜ் கொடுக்க வேண்டும். அப்போது தான் தலையில் இரத்த ஓட்டம் மேம்படும். இதனால் முடி உதிர்வு கட்டுப்படு, முடி அடத்தியாக வளரும்.
சீப்பின் பயன்பாடு
உங்கள் முடிக்கு எடுத்த உடல் நெருக்கு பல் சீப்பை பயன்படுத்த வேண்டும். இது முடி உடைவை ஏற்படுத்தும். அகல பல் சீப்பு கொண்டு தலை சீவவும். இது முடி உடைவை குறைக்கும். மேலும் தலை சீவும் போது, இரத்த ஓட்டம் மேம்படும். இது முடி வளர்ச்சியை ஊக்குவிக்கும்.

ட்ரையரை தவிர்க்கவும்
தலை குளித்த பின் மென்மையாக துண்டு கொண்டு முடியை துவட்டவும். வெப்பம் கொண்ட ட்ரையரை பயன்படுத்த வேண்டா. இது முடியை வரட்சியாக்கும். இதனால் முடி உடைவு, உதிர்தல் போன்றவை ஏற்படும் அபாயம் உள்ளது.
எண்ணெய்கள்
தலை முடிக்கு வாரம் ஒரு முறை ரோஸ்மேரி எண்ணெய், லாவண்டர் எண்ணெய் போன்றவற்றை பயன்படுத்தவும். இது உங்கள் மனநிலையை மேம்படுத்தும். மேலும் உடலுக்கு குளிர்ச்சியை தரும். இதனால் முடி உதிர்வு ஏற்படாது.
Image Source: Freepik