Is it good to put oil in your hair Everyday: கரு கரு வென அடர்த்தியான, நீளமான கூந்தல் யாருக்கு தான் பிடிக்காது. ஆரோக்கியமான கூந்தலை பெற சரியான கவனிப்பு அவசியம். தலைமுடிக்கு எண்ணெய் வைத்தால் கூந்தல் நீளமாகவும் அடர்த்தியாகவும் வளரும் என நாம் சிறு வயதில் இருந்தே பெரியவர்கள் கூறி கேள்விப்பட்டிருப்போம். ஏனென்றால், காலம் காலமாக கூந்தலுக்கு எண்ணெய் தடவும் பழக்கம் கடைபிடிக்கப்பட்டு வருகிறது.
இது குறித்து பல கருத்துக்கள் உள்ளது. சிலர் கூந்தலுக்கு எண்ணெய் தடவுவது சரியென்றும், சிலர் கூந்தலுக்கு எண்ணெய் தேவையில்லை என்றும் கருதுகின்றனர். தலைமுடிக்கு எண்ணெய் தடவுவது தொடர்பாக இணையத்திலும் சமூக ஊடகங்களிலும் பல்வேறு வகையான விவாதங்கள் இன்றும் நடைபெறுகிறது. கூந்தல் ஆரோக்கியத்திற்கு எண்ணெய் அவசியமா? என்பது பற்றி இந்த தொகுப்பில் பார்க்கலாம்.
இந்த பதிவும் உதவலாம் : முடி ரொம்ப வறட்சியா இருக்கா? இத யூஸ் பண்ணுங்க..
முடிக்கு கட்டாயம் எண்ணெய் தடவ வேண்டுமா?

கூந்தலுக்கு எண்ணெய் தடவுவது குறித்து பலருக்கும் பல கருத்து இருக்கும். ஆனால், இது உண்மையில் அந்த நபரின் முடியின் நிலையைப் பொறுத்தது. எஸ்சிபிஎம் மருத்துவமனையின் தோல் மருத்துவ நிபுணர் டாக்டர் சுமன் கூறுகையில், கூந்தலுக்கு ஊட்டமளிப்பதற்கும், ஆரோக்கியமாக இருப்பதற்கும் எண்ணெய் தடவுவது அவசியம்.
ஆனால், தவறான முறையில் எண்ணெய் தடவுவது கூந்தலுக்கு தீங்கு ஏற்படுத்தும். முடி உதிர்வதைத் தடுக்கவும், முடி ஆரோக்கியமாக இருக்கவும் முடிக்கு எண்ணெய் வைப்பது அவசியம். ஆனால், அளவாக எண்ணெய் பயன்படுத்தினால் நல்ல பலன் கிடைக்கும்.
இந்த பதிவும் உதவலாம் : Hair Growth Oil: அடர்த்தியா, நீளமா முடி வளர இந்த எண்ணெய்களை முயற்சி செஞ்சி பாருங்க!
கூந்தலுக்கு சரியான முறையில் எப்படி எண்ணெய் தடவுவது?

கூந்தலுக்கு எண்ணெய் தடவினால், தலைமுடி வலுவாகவும் ஆரோக்கியமாகவும் இருப்பதோடு மட்டுமல்லாமல் உச்சந்தலை தொடர்பான பிரச்சனைகளிலிருந்தும் நிவாரணம் கிடைக்கும். தவறான முறையில் எண்ணெய் தடவினால் கூந்தலுக்கு கடுமையான பாதிப்பு ஏற்படும் அபாயமும் உள்ளது. பொடுகு, முடி பலவீனம் மற்றும் முடி உடைவதற்கான வாய்ப்பும் அதிகம்.
வாரத்தில் இரண்டு முதல் மூன்று நாட்கள் முடிக்கு எண்ணெய் தடவி வந்தால், அது மிகவும் பலன் தரும். ஷாம்பூ பயன்படுத்திய பின் எண்ணெய் தேய்ப்பது கூந்தலுக்கு கடுமையான பாதிப்பை ஏற்படுத்தும். நீண்ட நேரம் கூந்தலுக்கு எண்ணெய் தடவினால் பலன் கிடைக்கும் என்று மக்கள் நினைக்கிறார்கள். ஆனால் அது முற்றிலும் தவறான கருத்து.
இந்த பதிவும் உதவலாம் : Hair Oil Benefits: தலைமுடி கருகருனு நீளமா வளர எண்ணெயை இப்படி தடவிப் பாருங்க.
40 முதல் 45 நிமிடங்கள் முடியில் எண்ணெய் வைத்தால் போதும். தலைக்கு என்ன வைத்த பின் 5 நிமிடங்கள் மசாஜ் செய்யவும். பின்னர், 40 நிமிடம் கழித்து லேசான ஷாம்பு கொண்டு தலையை அலசவும். முடியை வெந்நீரில் கழுவுவதை தவிர்க்கவும். கூந்தல் வலுவாகவும், பளபளப்பாகவும், அடர்த்தியாகவும் இருக்க, மேற்கூறிய விஷயங்களை மனதில் கொள்ளுங்கள்.
1 மணி நேரத்திற்கும் மேலாக தலைமுடியில் எண்ணெய் விடுவது பொடுகு மற்றும் அழுக்கு அபாயத்தை அதிகரிக்கும். இவ்வாறு செய்வதால் உச்சந்தலையில் உள்ள துளைகள் அடைத்துவிடும். இதனால் முடிக்கு பல வகையான பாதிப்புகள் ஏற்படும். உங்களுக்கு ஒவ்வாமை அல்லது வேறு ஏதேனும் பிரச்சனை இருந்தால், மருத்துவரின் ஆலோசனையின்றி உங்கள் தலைமுடிக்கு எண்ணெய் தடவுவதை தவிர்க்கவும்.
Pic Courtesy: Freepik