What happens if you leave oil in your hair for too long: யாருக்குத்தான் நீளமான மற்றும் அடர்த்தியான கூந்தல் பிடிக்காது? ஆரோக்கியமான கூந்தலை பெற பெண்கள் மட்டும் அல்ல ஆண்களும் தற்போது சந்தையில் கிடைக்கும் பல பொருட்களை வாங்கி பயன்படுத்துகின்றனர். பெண்கள் தங்கள் தலைமுடியை சரியாக கவனித்து வந்தாலும், தற்போதைய காலத்தில் வேலை பளு காரணமாக அவர்களுக்கு தங்கள் கூந்தலின் ஆரோக்கியத்தை பராமரிக்க நேரம் கிடைப்பதில்லை. முன்பெல்லாம் நம்மில் பலர் விடுமுறை நாளில் தலைக்கு என்னை வைத்து குளிப்போம்.
ஆனால், இன்று தலைக்கு என்னை வைக்க கூட நேரம் இல்லாமல் பிசியாக ஓடிக்கொண்டிருக்கிறோம். இருப்பினும், நம்மில் பலர் இரவில் தலைக்கு எண்ணெய் தடவி காலையில் தலைக்கு குளிப்போம். தலைக்கு எண்ணெய் வைப்பது முடி ஆரோக்கியமாக இருக்க உதவுகிறது என காலம் காலமாக வீட்டில் உள்ள பெரியவர்கள் கூறி கேள்விப்பட்டிருப்போம். அந்தவகையில், இரவில் தலைமுடிக்கு எண்ணெய் தடவுவதால் கிடைக்கும் நன்மைகள் பற்றி இங்கே பார்க்கலாம்.
இந்த பதிவும் உதவலாம் : Hair Wash Mistakes: மழைக்காலத்தில் ஹேர் வாஷ் செய்யும் போது தவிர்க்க வேண்டியவை..
இரவில் தலைமுடிக்கு எண்ணெய் வைப்பதன் நன்மைகள்

கூந்தல் பட்டுப் போலவும் பளபளப்பாகவும் இருக்கும்
இரவில் கூந்தலுக்கு எண்ணெய் தடவுவதால் கூந்தலுக்கு சரியான ஊட்டம் கிடைப்பதுடன் கூந்தல் பட்டுப் போலவும் பளபளப்பாகவும் இருக்கும். அதே சமயம் இரவு தூங்கும் முன் முடியில் எண்ணெய் தடவி மசாஜ் செய்யவும். இரவில் தலைமுடிக்கு எண்ணெய் தடவி, காலையில் ஷாம்பு போட்டு, அதன் பிறகு கண்டிஷனரையும் பயன்படுத்தவும்.
கூந்தல் வறட்சி பிரச்சனை நீங்கும்
இரவில் கூந்தலுக்கு எண்ணெய் தடவினால், உச்சந்தலையில் வறட்சி ஏற்படுவதைக் குறைப்பதுடன், முடி ஆரோக்கியமாகவும் இருக்கும். கூந்தலில் எண்ணெய் தடவினால் முடி தொடர்பான பிரச்சனைகள் குறையும் அதே வேளையில் அரிப்பு பிரச்சனையும் தவிர்க்கப்படும்.
இந்த பதிவும் உதவலாம் : Amla Hair Oil: இவ்ளோ சின்ன வயசுல நரைமுடியா? இந்த ஒரு ஆயில் போதும்!
முடி வளர்ச்சி அதிகரிக்கும்
இரவில் தலைக்கு எண்ணெய் தடவி வந்தால், முடி வளர்ச்சி அதிகரித்து, முடி ஆரோக்கியமாகவும் இருக்கும். அதே நேரத்தில், இரவில் உங்கள் தலைமுடியை ஒரு வாலில் கட்டி நன்றாக மசாஜ் செய்யவும்.
மனதில் வைக்க வேண்டிய விஷயம்
சூடான எண்ணெயை தலைமுடியில் தடவாதீர்கள்.
முடியில் அதிக எண்ணெய் தடவாதீர்கள்.
சரியான எண்ணெயைத் தேர்ந்தெடுங்கள்.
எண்ணெய் தடவிய பிறகு உங்கள் தலைமுடியை கட்ட வேண்டாம்.
பொடுகு பிரச்சனை இருந்தால் தலைமுடியில் எண்ணெய் தடவாதீர்கள்.
Pic Courtesy: Freepik