Amla Curry Leaves Oil For Grey Hair: இன்று மோசமான உணவுமுறை மற்றும் ஆரோக்கியமற்ற பழக்க வழக்கங்கள் முடி சார்ந்த பிரச்சனைகளைச் சந்திக்கும் சூழல் ஏற்படலாம். இதில் முடி உடைதல், முடி வறட்சி, நரைத்த முடி போன்ற பல்வேறு பிரச்சனைகளைச் சந்திக்கின்றனர். நாம் வயதானவருக்கே நரைமுடி பிரச்சனை கண்டிருப்பதைப் பார்த்திருப்போம். ஆனால் தற்போதைய வாழ்க்கை முறை இளம் வயதிலேயே நரைமுடி பிரச்சனையை சந்திக்கும் சூழலை ஏற்படுத்துகிறது.
இது உணவுப்பழக்கம், உடலில் ஊட்டச்சத்து குறைபாடு அல்லது முடி பராமரிப்பு இல்லாதது போன்ற பல்வேறு காரணங்களால் முடி நரைக்கத் தொடங்குகிறது. இதனால், முடியிலிருந்து மெலனின் குறையத் தொடங்குகிறது. இந்த சூழ்நிலையில் சில வீட்டு வைத்தியங்களைக் கையள்வதன் மூலம் நரைமுடியைத் தவிர்க்கலாம். அதன் படி, ஆம்லா மற்றும் கறிவேப்பிலை கொண்டு தயாரிக்கப்படும் எண்ணெய் நரைமுடிக்குத் தீர்வாக அமைகிறது. இதில் ஊட்டச்சத்து நிபுணரும் உணவு நிபுணருமான சிம்ரன் கதுரியா அவர்கள் ஆம்லா கறிவேப்பிலை எண்ணெயின் நன்மைகள் மற்றும் செய்முறை குறித்த வீடியோ ஒன்றை தனது இன்ஸ்டாகிராமில் பகிர்ந்துள்ளார்.
இந்த பதிவும் உதவலாம்: Onion Juice For Hair: முடி பொசு பொசுனு வளர வெங்காயச் சாற்றை தலைக்கு இப்படி யூஸ் பண்ணுங்க
நரைமுடி பிரச்சனையைக் குறைக்க உதவும் எண்ணெய்
தேவையானவை
- கறிவேப்பிலை - 15 முதல் 20 வரை
- ஆம்லா - 2
- ரீத்தா - 2
- அக்ரூட் பருப்புகள் - 2
- பாதாம் - 6 முதல் 7
- பச்சை மஞ்சள் - சில துண்டுகள்
- கருப்பு எள் - 1 தேக்கரண்டி
- வெள்ளை எள் - 1 தேக்கரண்டி
- தேயிலை இலைகள் - 2 தேக்கரண்டி
- கடுகு எண்ணெய் - 1 கிண்ணத்திற்கு மேல்
- பாப்பி விதைகள் - 1 தேக்கரண்டி
ஆம்லா கறிவேப்பிலை எண்ணெய் செய்முறை
- முதலில் அடுப்பில் வாணலி ஒன்றை வைத்து, பாதாம் பருப்பை நன்கு வதக்க வேண்டும்.
- பின் அதில் வெள்ளை மற்றும் கருப்பு எள், அக்ரூட் பருப்புகள் போன்றவற்றைச் சேர்க்க வேண்டும்.
- பிறகு இதில் கறிவேப்பிலை, நெல்லிக்காய், பச்சை மஞ்சள் மற்றும் ரீத்தா போன்ற பொருள்களைச் சேர்க்கலாம்.
- இவை அனைத்தையும் குறைந்த தீயில் வைத்து சமைக்க வேண்டும்.
- இறுதியாக பாப்பி விதைகள் மற்றும் தேயிலை இலைகள் போன்றவற்றைச் சேர்த்து சமைக்கலாம்.
- இப்போது அதில் 2 கிண்ணம் கடுகு எண்ணெய் சேர்க்க வேண்டும். இதில் நீங்கள் எந்த அளவிற்கு எண்ணெய் வேண்டுமென விரும்புகிறீர்களோ அந்த அளவு சேர்த்துக் கொள்ளலாம்.
- ஆம்லா, கறிவேப்பிலை எண்ணெய் எவ்வாறு பயனுள்ளதாக இருக்கும்?
- ஆம்லா, ரீத்தா மற்றும் எள் எண்ணெய் பயன்படுத்துவது முடியின் இயற்கையான நிறத்தை பராமரிக்க உதவுகிறது.
- இதில் சேர்க்கப்பட்ட பச்சை மஞ்சள், அக்ரூட் பருப்புகள் மற்றும் பாதாம் போன்றவை முடிக்கு ஊட்டமளிக்க உதவுகின்றன.
- மேலும் கடுகு எண்ணெய் மற்றும் தேயிலை இலைகள் போன்றவை வெள்ளை முடி பிரச்சனையை கட்டுப்படுத்த உதவுகிறது.

இந்த பதிவும் உதவலாம்: Homemade Hair Conditioner: வறண்ட முடிக்கு இயற்கையான ஹேர் கண்டிஷனர் இதோ!
முன்கூட்டியே முடி நரைப்பதற்கான காரணங்கள்
ஆரோக்கியமற்ற உணவு
மோசமான உணவுப் பழக்கத்தால் முடி நரைக்கத் தொடங்கலாம். அதிலும் ஜங்க் ஃபுட் போன்றவற்றை அதிகம் சாப்பிடுவது உடலில் நச்சுக்களை அதிகரிக்கிறது. இந்த நச்சுக்கள் முடி நரைப்பதற்குக் காரணமாகிறது.
நீரிழப்பு காரணமாக
முடி நரைத்தலுக்கான முக்கிய காரணங்களில் ஒன்றாக நீரிழப்பும் அமைகிறது. எனவே உடலை நீரேற்றமாக வைப்பதை உறுதி செய்ய வேண்டும். இதற்கு போதுமான தண்ணீர் குடிப்பது, நாள் முழுவதும் நீரேற்றம் கொண்ட உணவுகள், பழங்களை எடுத்துக் கொள்வது போன்றவற்றை வழக்கமாக்கிக் கொள்ள வேண்டும்.
இரசாயன சிகிச்சை
தலைமுடிக்கு மீண்டும் மீண்டும் இரசாயன சிகிச்சைகளை மேற்கொள்ளும் போது, அதன் நிறத்தில் வித்தியாசத்தைக் காணலாம். இதனால், முடியின் இயற்கையான நிறம் மாறி, நரைமுடியை உண்டாக்குகிறது.
தூக்க பிரச்சனை
இன்றைய காலகட்டத்தில் மக்கள் தாமதமாக மற்றும் குறைவாகத் தூங்குவதையே வழக்கமாக்கிக் கொண்டுள்ளனர். இந்த சூழ்நிலையில் அவர்களின் மன அழுத்தம் மற்றும் கார்டிசோல் போன்றவை அதிகரிக்கத் தொடங்குகிறது. இதன் காரணமாக முடி வெள்ளையாக மாறலாம். எனவே தினமும் தொடர்ந்து 7 முதல் 8 மணிநேரம் தூங்குவதை உறுதிபடுத்திக் கொள்ள வேண்டும்.
அதிக மன அழுத்தம்
அதிகளவிலான மன அழுத்தம் சமநிலையற்ற ஹார்மோன் பிரச்சனையை ஏற்படுத்துகிறது. இந்த சூழ்நிலையில், முடியில் உள்ள மெலனின் குறையத் தொடங்கி, நரைமுடியை ஏற்படுத்துகிறது.
இவை அனைத்தும் முன்கூட்டியே முடி நரைத்தலுக்கான காரணமாக அமைகிறது. இதற்கு மேலே கொடுக்கப்பட்ட முறைகளில் தயாரிக்கப்பட்ட எண்ணெயைப் பயன்படுத்தலாம். எனினும், உச்சந்தலை தொடர்பான பிரச்சனைகள் இருப்பின், மருத்துவரின் ஆலோசனையின் பேரில் மட்டுமே இந்த எண்ணெயைப் பயன்படுத்த வேண்டும்.
இந்த பதிவும் உதவலாம்: Oiling Before Shampooing: ஷாம்பு போடும் முன் முடிக்கு எண்ணெய் தடவுவது நல்லதா? என்னனு தெரிஞ்சிக்கோங்க
Image Source: Freepik