Best Oil For Dry Hair In Winter: குளிர்காலத்தில் வறண்ட கூந்தல் பிரச்னையால் பலர் போராட வேண்டியிருக்கும். குளிர் பருவத்தில் ஈரப்பதம் இல்லாததால் உலர்ந்த முடி பிரச்சனை ஏற்படுகிறது. இதனால் பொடுகு பிரச்னை அதிகமாக இருக்கும்.
குளிர்காலத்தில், மோசமான உணவுப் பழக்கவழக்கங்களாலும், சோம்பேறித்தனத்தாலும், தலைமுடியை பராமரிக்க மறந்து விடுகிறோம். இதன் காரணமாகவும் முடி வறண்டு போகும். சருமத்தை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ள க்ரீம் அல்லது லோஷனைப் பயன்படுத்துவதைப் போலவே முடிக்கும் ஊட்டச்சத்து தேவை.
குளிர்காலத்தில் கூந்தலை ஆரோக்கியமாக வைத்திருக்க, சில எண்ணெய்கள் உங்களுக்கு உதவலாம். முடியின் வறட்சியை நீக்க, நீங்கள் எந்த எண்ணெயை பயன்படுத்த வேண்டும் என்று இங்கே காண்போம்.

அவகேடோ எண்ணெய்
அவகேடோவில் வைட்டமின் ஈ உள்ளது. இது ஆன்டிஆக்ஸிடன்ட் போல் செயல்பட்டு, உலர்ந்த முடி பிரச்னையில் இருந்து முடியை பாதுகாக்கிறது. அவகேடோ எண்ணெயில் கொழுப்பு அமிலங்கள் மற்றும் தாதுக்கள் உள்ளன. இதனை கூந்தலில் தடவினால், முடி உடைவது குறைந்து, முடி வலுவடையும். அவகேடோ எண்ணெயை பாதாம் அல்லது தேங்காய் எண்ணெய்யுடன் கலந்து அவகேடோ எண்ணெயை தடவலாம்.
இதையும் படிங்க: Hair Growth Oil: அடர்த்தியா, நீளமா முடி வளர இந்த எண்ணெய்களை முயற்சி செஞ்சி பாருங்க!
வெங்காய எண்ணெய்
வறண்ட கூந்தல் பிரச்னையை போக்க வெங்காய எண்ணெய் பயன்படுத்தவும். வெங்காய எண்ணெய் முடிக்கு இயற்கையான கண்டிஷனராக செயல்படுகிறது. வெங்காய எண்ணெயைப் பயன்படுத்துவதன் மூலம் முடி அமைப்பும் மேம்படும். வெங்காய எண்ணெயில் உள்ள ஊட்டச்சத்துக்களின் உதவியுடன், முடி உதிர்தல், முடி மெலிதல் மற்றும் பொடுகு போன்ற பிரச்னைகள் தீர்க்கப்படுகின்றன. வெங்காய எண்ணெய் உச்சந்தலையின் pH அளவை பராமரிக்கவும் உதவுகிறது. சில துளிகள் வெங்காய எண்ணெயை உங்கள் முடியில் தடவி மாசாஜ் செய்து, 3 முதல் 4 மணி நேரம் கழித்து வெதுவெதுப்பான நீரில் முடியை அலசவும்.
ஜோஜோபா எண்ணெய்
வறண்ட கூந்தல் பிரச்னையை போக்க ஜோஜோபா எண்ணெய் பயன்படுத்தவும். ஜொஜோபா எண்ணெய் முடி உதிர்வை கட்டுப்படுத்த உதவுகிறது. ஜோஜோபா எண்ணெயின் உதவியுடன், உச்சந்தலையை தொற்றுநோயிலிருந்து பாதுகாக்கலாம். இது முடி வளர்ச்சியை ஊக்குவிக்க உதவுகிறது. ஜொஜோபா எண்ணெயை கூந்தலில் தடவி 20 நிமிடம் விட்டு பின் ஷாம்பு மற்றும் தண்ணீரில் தலையை சுத்தம் செய்யவும். ஜோஜோபா எண்ணெயில் கொழுப்புகள் மற்றும் தாதுக்கள் இருப்பதால் முடியை மென்மையாக்கும்.
ஆமணக்கு எண்ணெய்
வறண்ட முடி பிரச்சனையை தீர்க்க ஆமணக்கு எண்ணெய் பயன்படுத்தவும். ஆமணக்கு எண்ணெய் உச்சந்தலை மற்றும் முடியை நீரேற்றமாக வைத்திருக்க உதவும். இதில் உள்ள வைட்டமின்-ஈ முடிக்கு ஊட்டச்சத்தை அளிக்கிறது மற்றும் உச்சந்தலையை ஆரோக்கியமாக வைத்திருக்க உதவுகிறது. உச்சந்தலையில் pH அளவை பராமரிக்க ஆமணக்கு எண்ணெயைப் பயன்படுத்துவது நன்மை பயக்கும் என்று கருதப்படுகிறது. சில துளிகள் ஆமணக்கு எண்ணெயை தலைமுடியில் தடவி 2 முதல் 3 மணி நேரம் கழித்து ஷாம்பு கொண்டு தலையை அலசவும்.
ஆர்கான் ஆயில்
வறண்ட கூந்தல் பிரச்னையை போக்க ஆர்கான் ஆயிலை பயன்படுத்தவும். இது உங்கள் தலைமுடியில் பொலிவை அதிகரித்து, முடி உதிர்தல் பிரச்னையில் இருந்து விடுபடும். ஆர்கான் எண்ணெய், முடி வளர்ச்சிக்கு உதவும். ஆர்கன் எண்ணெயில் வைட்டமின் ஈ உள்ளது. இது உச்சந்தலையில் தொற்று மற்றும் உலர்ந்த முடி பிரச்னையை நீக்கும்.
இந்த பதிவில் குறிப்பிடப்பட்டுள்ள எண்ணெய்கள், உங்கள் முடி வறட்சியை நீக்கு, முது வளர்ச்சிக்கு உதவுகிறது. இருப்பினும், உங்களுக்கு ஏதேனும் ஒவ்வாமை இருந்தால் இதனை பயன்படுத்துவதற்கு முன் தோல் மருத்துவரிடன் ஆலோசனை பெறவும்.
Image Source: Freepik