Hair moisturizing tips: வறண்ட, சுருண்ட முடியை மென்மையாக மாற்ற நீங்க செய்ய வேண்டியவை

How to moisturize dry hair naturally at home: வறண்ட, சுருள் முடியால் இன்று பலரும் அவதியுறுகின்றனர். இதற்கு சிறந்த வீட்டு வைத்தியமாக பல்வேறு வழிமுறைகளைக் கையாளலாம். இதில் குளிர்கால சுருண்ட முடிக்கு பயன்படுத்த வேண்டிய வீட்டு வைத்திய முறைகளைக் காணலாம்.
  • SHARE
  • FOLLOW
Hair moisturizing tips: வறண்ட, சுருண்ட முடியை மென்மையாக மாற்ற நீங்க செய்ய வேண்டியவை

How to hydrate hair naturally: இன்றைய காலத்தில் மோசமான வாழ்க்கை முறை, ஆரோக்கியமற்ற உணவுமுறை காரணமாக பலரும் பலதரப்பட்ட பிரச்சனைகளைச் சந்திக்கின்றனர். இதில் முடி சார்ந்த பிரச்சனைகளும் அடங்கும். இதனால் முடி உதிர்வு, முடி வறட்சியடைதல், சுருள் முடி மற்றும் இன்னும் பல்வேறு பிரச்சனைகள் எழலாம். குறிப்பாக, குளிர்ந்த காலநிலையில் முடி வறட்சியடையச் செய்யலாம். இந்நிலையில் முடியை நீரேற்றமாக செய்வது எப்படி என்று பலருக்கும் தெரிவதில்லை. இதற்கு பலரும் சந்தைகளில் விற்பனை செய்யப்படும் பொருள்களை வாங்கி பயன்படுத்துகின்றனர்.

ஆனால் தலைமுடியை மென்மையாகவும், பளபளப்பாகவும், ஆரோக்கியமாகவும் வைக்க தேவையான ஈரப்பதத்தை அளிக்க வேண்டும். இது குளிர்கால வறட்சி அல்லது ஹீட் ஸ்டைலிங் விளைவுகளைக் கையாள்பவராக இருப்பின், சரியான நீரேற்றத்தைத் தருவது அவசியமாகும். இதன் மூலம் தலைமுடியை மென்மையாக, பளபளப்பாகவும் மாற்றலாம். இதில் முடியை நீரேற்றமாக வைக்கவும், வறட்சியைப் போக்கவும் உதவும் குறிப்புகளைக் காணலாம்.

இந்த பதிவும் உதவலாம்: Healthy hair remedies: எந்த பிரச்சனையும் இல்லாத ஹெல்த்தியான ஹேர் வேணுமா? இந்த ரெமிடிஸ் டிரை பண்ணுங்க

முடிக்கு ஏன் நீரேற்றம் செய்ய வேண்டும்?

தலைமுடியை மென்மையாகவும், பளபளப்பாகவும், ஆரோக்கியமாகவும் வைக்க அதை ஈரப்பதமாக வைப்பது அவசியமாகும். கூந்தலில் ஈரப்பதம் இல்லாத போது, அது வறட்சியடைந்து, சுருண்டு உடைந்து போகும் அபாயம் உண்டாகலாம். இந்நிலையில் முடியை நீரேற்றமாக வைப்பது இயற்கையான நெகிழ்ச்சித்தன்மையை பராமரிக்க உதவுகிறது. இது முடி பிளவு முனைகளைக் குறைக்கிறது. மேலும் இது முடி அமைப்பை மேம்படுத்துகிறது. ஏனெனில் ஒழுங்காக நீரேற்றப்பட்ட முடி வறட்சி, சுற்றுச்சூழல் பாதிப்பு, ஸ்டைலிங்கு வழிவகுக்கும் பிற காரணிகளுக்கு எதிராக சமாளிக்கக் கூடியதாக அமைகிறது.

வறட்சியான முடியை நீரேற்றமாக வைப்பது எப்படி?

ஆழமான கண்டிஷனிங்

முடியின் நீரேற்றத்தை அதிகரிக்க, வாரத்திற்கு ஒரு முறை டீப் கண்டிஷனிங் ஹேர் மாஸ்க்கைப் பயன்படுத்தலாம். இது முடியின் தண்டுக்குள் ஆழமாக ஊடுருவி, தீவிர ஈரப்பதம் மற்றும் ஊட்டச்சத்தைத் தருகிறது. ஹேர் மாஸ்க்கில் பெரும்பாலும் கெரட்டின், ஹைலூரோனிக் அமிலம், புரதங்கள் போன்றவை நிறைந்திருக்கும். இது உலர்ந்த மற்றும் சேதமடைந்த முடியின் ஈரப்பதத்தை மீட்டெடுக்க உதவுகிறது.

ஆய்வு ஒன்றில், ஹைலூரோனிக் அமிலம் முடி உதிர்வைக் குறைத்து அதன் நெகிழ்ச்சித்தன்மையை மேம்படுத்துகிறது. இதன் மூலம் தலைமுடி ஆரோக்கியத்தை மேம்படுத்தலாம். இதற்கு தலைமுடியைக் கழுவிய பிறகு ஹேர் மாஸ்க்கைப் பயன்படுத்தலாம். இதை 20 முதல் 30 நிமிடங்கள் வரை வைத்து பிறகு நன்கு கழுவிக் கொள்ளலாம்.

வெதுவெதுப்பான நீர் பயன்பாடு

சிலர் தலைமுடியைக் கழுவ வெந்நீரைப் பயன்படுத்துவர். சிலர் குளிர்ந்த நீரைப் பயன்படுத்துவர். ஆனால், இவை இரண்டுமே தலைமுடி ஆரோக்கியத்தைப் பாதிக்கலாம். எனவே முடியை நீரேற்றம் செய்வதற்கு சூடான நீருக்குப் பதிலாக வெதுவெதுப்பான நீரைப் பயன்படுத்தலாம். இதன் மூலம் சூடான நீரினால் ஏற்படும் வறட்சி, சேதத்தைத் தடுக்கலாம்.

ஏனெனில், வெதுவெதுப்பான நீரின் பயன்பாடு தலைமுடியின் ஈரப்பதத்தைத் தக்க வைக்கிறது. மேலும், வெதுவெதுப்பான நீர் தலைமுடியில் ஈரப்பதத்தை பராமரிக்கும் போது உச்சந்தலையை மெதுவாக சுத்தம் செய்ய உதவுகிறது. எனினும் தினமும் தலைமுடியைக் கழுவுவதைத் தவிர்க்க வேண்டும். ஏனெனில் அடிக்கடி தலைமுடியைக் கழுவுவது முடிக்கு நீரேற்றமாக இருக்க உதவும் இயற்கை எண்ணெய்களை நீக்கி விடலாம்.

இந்த பதிவும் உதவலாம்: Honey hair mask: முடி மென்மையா, பளபளபனு இருக்கணுமா? தேனுடன் இந்த பொருளைக் கலந்து யூஸ் பண்ணுங்க

ஹீட் ஸ்டைலிங் கருவியைத் தவிர்ப்பது

முடியை நீரேற்றமாக வைப்பதற்கான சிறந்த குறிப்புகளில் ஒன்று ஹீட் ஸ்டைலிங் கருவிகளின் பயன்பாட்டைக் குறைப்பதாகும். அதன் படி அயர்ன்கள், கர்லிங் செய்ய உதவும் கருவி, ப்ளோ ட்ரையர் போன்ற ஹீட் ஸ்டைலிங் கருவிகளின் பயன்பாடு முடியின் ஈரப்பதத்தை இழக்க நேரிடலாம். இது முடியை வறட்சி மற்றும் உடையக்கூடியதாக மாற்றுகிறது.

முடிந்தவரை இந்தக் கருவிகளைத் தவிர்ப்பதன் மூலம் முடி வறட்சி அபாயங்களைத் தவிர்க்கலாம். மாற்றாக தலைமுடியை காற்றில் உலர வைக்க முயற்சிக்க வேண்டும். மேலும், வெப்ப பாதுகாப்பு தெளிப்பு அல்லது சீரம் போன்றவற்றைப் பயன்படுத்தலாம். இது வெப்பத்திற்கும், தலைமுடிக்கும் இடையில் ஒரு தடையை உருவாக்க உதவுகிறது. இது முடியின் ஈரப்பதத்தைத் தக்கவைப்பதுடன், சேதத்தைத் தடுக்கிறது.

மாய்ஸ்சரைசிங் ஷாம்பு மற்றும் கண்டிஷனர் பயன்பாடு

முடிக்கு தீங்கு விளைவிக்கும் பொருட்களைக் கொண்ட முடி பராமரிப்புப் பொருட்களைப் பயன்படுத்துவதால், உலர்ந்த மற்றும் சேதமடைந்த முடியைப் பெற அதிக வாய்ப்புண்டு. இதைத் தவிர்க்க ஈரப்பதத்தைத் தக்கவைக்க உதவும் இயற்கை எண்ணெய்கள், ஹைலூரோனிக் அமிலம் மற்றும் ஷியா வெண்ணெய் போன்ற பொருள்களைக் கொண்ட ஷாம்பு, கண்டிஷனர்களைப் பயன்படுத்தலாம்.

இந்த ஈரப்பதமூட்டும் பொருட்களைப் பயன்படுத்துவது தலைமுடியை மென்மையாகவும், ஊட்டமளிக்கவும் உதவுகிறது. இதற்கு முடியைக் கழுவிய பிறகு கண்டிஷனரைப் பயன்படுத்துவதை உறுதி செய்து கொள்ள வேண்டும். குறிப்பாக தலைமுடியின் நடுப்பகுதி மற்றும் முனைகளில் கவனம் செலுத்த வேண்டும். ஏனெனில் இதுவே வறட்சிக்குக் காரணமாகலாம்.

இந்த பதிவும் உதவலாம்: Onion hair mask: முடி அடர்த்தியா, பொசுபொசுனு வளர வெங்காயத்தை தலைக்கு இப்படி யூஸ் பண்ணுங்க

ஒமேகா-3 மற்றும் ஆன்டிஆக்ஸிடன்ட்கள் உணவை சேர்ப்பது

முடி பராமரிப்பு வழக்கத்தைத் தவிர, முடியை நீரேற்றம் செய்ய உதவும் பட்டியலில் அன்றாட உணவில் கவனம் செலுத்த வேண்டும். அதன் படி, ஒமேகா-3 போன்ற அத்தியாவசிய ஊட்டச்சத்துக்கள் நிறைந்த சால்மன், அக்ரூட் பருப்புகள் மற்றும் ஆளிவிதை போன்ற உணவுகளை எடுத்துக் கொள்ள வேண்டும். இது உச்சந்தலையில் ஊட்டமளிக்கவும், நீரேற்றத்தைத் தரவும் உதவுகிறது.

மேலும் கீரை, பெர்ரி போன்ற ஆன்டி-ஆக்ஸிடன்ட் நிறைந்த உணவுகளை எடுத்துக் கொள்வது முடியை சேதத்திலிருந்து பாதுகாக்கிறது. மேலும், இது ஒட்டுமொத்த உச்சந்தலையின் ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது. இது தவிர, தலைமுடியின் ஈரப்பதத்தைத் தக்க வைக்க குறைந்தது 7 முதல் 8 கிளாஸ் தண்ணீரைக் குடிப்பது உடலை நன்கு நீரேற்றமாக வைத்திருக்க உதவுகிறது. இது முடி ஆரோக்கியத்தைப் பராமரிக்கிறது.

இந்த தகவல் உங்களுக்கு பிடித்திருக்கும் என நம்புகிறோம். இந்த கட்டுரையை உங்கள் நண்பர்களுக்கும், உறவினர்களுக்கும் பகிருங்கள். ஆரோக்கியம் தொடர்பான இதுபோன்ற பல சுவாரஸ்ய தகவல்களுக்கு தொடர்ந்து ஒன்லி மை ஹெல்த் உடன் இணைந்திருங்கள், மேலும் OnlyMyHealth பேஸ்புக் மற்றும் இன்ஸ்டா பக்கத்தை பின்தொடர இந்த இணைப்பை கிளிக் செய்யுங்கள்- Onlymyhealth Tamil FacebookOnlymyhealth Tamil Instagram

இந்த பதிவும் உதவலாம்: Hair Growth Tips: வெறும் இரண்டே வாரத்தில் கருகருன்னு அடர்த்தியான கூந்தல் வேண்டுமா? அப்போ இதை ட்ரை பண்ணுங்க!

Image Source: Freepik

Read Next

Hair Growth Tips: வெறும் இரண்டே வாரத்தில் கருகருன்னு அடர்த்தியான கூந்தல் வேண்டுமா? அப்போ இதை ட்ரை பண்ணுங்க!

Disclaimer