How To Get Rid Of Dry And Frizzy Hair In Monsoon Season: கோடை வெப்பத்திலிருந்து மீண்டு வரும் சூழ்நிலையில் மழைக்காலம் நம் மனதுக்கு இதமானதாக அமைகிறது. எனினும், மழைக்காலத்தில் நாம் சந்திக்கும் பல்வேறு பிரச்சனைகளில் முடி சார்ந்த பிரச்சனைகளும் ஒன்று. முடி ஆரோக்கியத்தைப் பொறுத்த வரை வறண்ட மற்றும் உலர்ந்த முடியானது கட்டுக்கடங்காததாக அமைகிறது. இதைக் கட்டுப்படுத்த முயற்சிக்கும் போது, அது மேலும் மோசமாகும் வாய்ப்பு அதிகமாகலாம்.
க்யூட்டிகல் எனப்படும் முடி தண்டின் வெளிப்புற அடுக்கு உயர்த்தப்பட்டு, அது ஈரப்பதத்தைக் கடந்து, இழைகளை வீக்க அனுமதிக்கும் போது முடி உதிர்வு ஏற்படுகிறது. இது ஒரு கடினமான அமைப்பாகவும், ஒழுங்கற்ற தோற்றத்திற்கு வழிவகுக்கலாம். மேலும், மழைக்காலத்தில் தோன்றும் அதிக ஈரப்பதம் காரணமாக இந்நிலை மேலும் மோசமாகலாம். காற்றில் தோன்றும் அதிகப்படியான ஈரப்பதம் முடியின் தண்டுக்குள் ஊடுருவி முடி உதிர்வு ஏற்படுகிறது. உதிர்ந்த முடியில் ஈரப்பதம் இல்லாமலும், வறண்டு இருக்கும். தலைமுடி உதிரும் போது முடி இழைகள் சீரற்றதாக மற்றும் கரடு முரடானதாக மாற்றலாம்.
இந்த பதிவும் உதவலாம்: Clove Oil for Hair: கூந்தல் வளர்ச்சிக்கு உதவும் மாயாஜால எண்ணெய்! வெறும் இரண்டே பொருள்கள் போதும்
முடி உதிர்வுக்கான காரணங்கள்
- மழைக்காலத்தில் தோன்றும் அதிக ஈரப்பதம் காரணமாக, முடியானது காற்றில் அதிக ஈரப்பதத்தை உறிஞ்சி வீக்கம் மற்றும் உதிர்தலுக்கு வழிவகுக்கிறது. கூந்தலில் போதுமான உள் ஈரப்பதம் இல்லாதபோது, ஈரப்பதமான சூழலில் இருந்து கூடுதல் ஈரப்பதத்தைத் தேடுகிறது. இந்த சூழ்நிலையில் முடி கட்டுங்கடங்காத சிக்கலான நிலைக்குத் தள்ளப்படுகிறது.
- இது தவிர கடுமையான ஷாம்புகள், ஹீட் ஸ்டைலிங் கருவிகள், ரசாயன சிகிச்சைகள் போன்றவற்றை அதிகம் பயன்படுத்துவதால் முடி உதிர்வு ஏற்படலாம். ஏனெனில், இது போன்ற சூழ்நிலையில் முடியின் இயற்கையான எண்ணெய்கள் குறைந்து, உதிர்தலுக்கான வாய்ப்பை அதிகரிக்கிறது.
- மேலும் மரபியல் காரணமாகவும் இயற்கையாகவே சுருள் அல்லது கூந்தல் வறண்டு போவதும் ஏற்படலாம். இது இயற்கையான முடி உதிர்வுக்குக் காரணமாகிறது.

மழைக்கால ஈரப்பதத்தைச் சமாளிக்க உதவும் வீட்டு வைத்தியங்கள்
மழைக்காலத்தில் ஏற்படும் ஈரப்பதத்தைச் சமாளிக்க சில வீட்டு வைத்தியங்களைப் பயன்படுத்தலாம்.
இயற்கை எண்ணெய்களைப் பயன்படுத்துதல்
ஆர்கான் எண்ணெய், தேங்காய் எண்ணெய் மற்றும் ஆலிவ் எண்ணெய் போன்ற இயற்கையான எண்ணெய்களை முயற்சிக்க வேண்டும். இவை காற்றில் இருந்து ஈரப்பதத்தை முடியின் தண்டுக்குள் நுழைவதைத் தடுக்கவும் உதவுகிறது. இதற்கு சிறிதளவு எண்ணெயை சூடாக்கி, முடி மற்றும் உச்சந்தலையில் மசாஜ் செய்ய வேண்டும். இதைக் கழுவுவதற்கு முன்னதாக ஒரு மணி நேரம் அல்லது ஓரிரவில் விட்டு விடுவது நல்லது.
இந்த பதிவும் உதவலாம்: Homemade Hair Conditioner: வீட்டிலேயே இயற்கையான முறையில் ஹேர் கண்டிஷனர் தயார் செய்வது எப்படி?
தலைமுடியை நீரேற்றமாக வைத்திருப்பது
மழைக்கால ஈரப்பதத்தை உறிஞ்சுவதற்குப் பதிலாக, இந்த ஈரப்பதத்தை நிரப்ப வாரத்திற்கு ஒரு முறை ஆழமான கண்டிஷனிங் சிகிச்சையைப் பயன்படுத்தலாம். தேன் மற்றும் தயிர் போன்ற பொருள்கள் தலைமுடியை நீரேற்றமாக வைத்திருக்க உதவுகிறது. இதற்கு தலைமுடியில் ஒரு தேக்கரண்டி தேனுடன், இரண்டு தேக்கரண்டி அளவிலான தயிரைக் கலந்து, தலைமுடிக்குத் தடவலாம். அதை 30 நிமிடங்கள் வைத்து பிறகு கழுவ வேண்டும்.
வாழைப்பழ ஹேர் மாஸ்க்
தலைமுடிக்கு வாழைப்பழத்தைப் பயன்படுத்துவது, முடி உடைவதைத் தடுக்கவும் மற்றும் முடியின் நெகிழ்ச்சித்தன்மையை மேம்படுத்தவும் உதவுகிறது. இந்த வாழைப்பழ ஹேர் மாஸ்க் தயார் செய்வதற்கு ஒரு தேக்கரண்டி அளவிலான ஆலிவ் எண்ணெய் அல்லது தேங்காய் எண்ணெயுடன் பழுத்த வாழைப்பழத்தைக் கலக்க வேண்டும். இந்த ஹேர்மாஸ்க்கைத் தலைமுடியில் தடவி 20 முதல் 30 நிமிடங்கள் வைத்து பிறகு கழுவி விடலாம்.
அவகேடோ ஹேர் மாஸ்க்
முடிக்கு இயற்கையான ஈரப்பதத்தை அளிக்க அவகேடோ ஹேர் மாஸ்க் உதவுகிறது. இதில் வைட்டமின்கள் மற்றும் கொழுப்பு அமிலங்கள் போன்றவை நிறைந்து காணப்படுகிறது. மேலும், இது உதிர்ந்த முடிக்கு ஆழமான ஊட்டச்சத்தை வழங்குகிறது. இந்த ஹேர் மாஸ்க்கிற்கு ஒரு பழுத்த வெண்ணெய் பழத்தை மசித்து, அதனுடன் ஒரு தேக்கரண்டி ஆலிவ் எண்ணெயைக் கலக்க வேண்டும். இந்தக் கலவையைத் தலைமுடியில் தடவி அரை மணி நேரம் வைத்து பிறகு கழுவி விடலாம்.
இந்த பதிவும் உதவலாம்: Oiling Hair Overnight: தூங்கும் முன் தலைக்கு எண்ணெய் வைக்கும் பழக்கம் உள்ளதா? இதன் தீமைகள் இங்கே!
ஆப்பிள் சைடர் வினிகர்
தலைமுடிக்கு ஆப்பிள் சைடர் வினிகரைப் பயன்படுத்துவது முடியின் மேற்புறத்தை மென்மையாக வைக்கவும், உச்சந்தலையின் pH அளவை சமநிலைப்படுத்தவும் உதவுகிறது. இந்த ஹேர் மாஸ்க்கிற்கு ஒரு பங்கு ஆப்பிள் சைடர் வினிகரை இரண்டு பங்கு தண்ணீருடன் கலக்க வேண்டும். பின் இதை ஷாம்பு மற்றும் கண்டிஷனிங் செய்த பிறகு இறுதியாக தலைமுடியைக் கழுவ பயன்படுத்தலாம்.
முட்டை ஹேர் மாஸ்க்
முட்டையில் புரோட்டீன்கள் மற்றும் பல்வேறு ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளது. இவை முடியை வலுவாக வைப்பதுடன், மென்மையாக்கவும் உதவுகிறது. இந்த ஹேர்மாஸ்க் தயார் செய்வதற்கு ஒரு முட்டையை அடித்து, ஒரு தேக்கரண்டி ஆலிவ் எண்ணெயுடன் கலக்க வேண்டும். பிறகு இந்தக் கலவையை முடி மற்றும் உச்சந்தலையில் தடவி, 20 நிமிடங்கள் வைத்து, அதன் பின் குளிர்ந்த நீரில் கழுவி விடலாம்.
கற்றாழை பயன்பாடு
தலைமுடிக்கு இயற்கையான ஈரப்பதத்தை அளிக்கும் விதமாக கற்றாழை அமைகிறது. இது ஈரப்பதத்தைத் தக்கவைத்துக் கொள்ள உதவுகிறது. இதற்கு புதிய கற்றாழை ஜெல்லை நேரடியாக தலைமுடியில் தடவி, முடி முனைகள் வரை தடவ வேண்டும். பிறகு 20-30 நிமிடங்கள் வைத்து, வெதுவெதுப்பான நீரில் கழுவ வேண்டும்.
இது போன்ற இயற்கையான வழிமுறைகளின் உதவியுடன், வறண்ட மற்றும் கட்டுக்கடங்காத முடிக்குத் தீர்வு காண முடியும்.
இந்த பதிவும் உதவலாம்: Hair Fall in Monsoon: மான்சூன் சீசனில் முடி உதிர்வால் அவதியா? நல்ல ரிசல்ட் கிடைக்க இத செய்யுங்க
Image Source: Freepik