மழைக்காலத்தில் காற்றில் ஈரப்பதம் அதிகமாக இருக்கும். எனவே இதற்கிடையில் உங்கள் தலைமுடியை நன்றாக பராமரிக்க உதவக்கூடிய சில குறிப்புகள் இதோ…
வெங்காயச் சாறு:
வெங்காயச் சாறு முடியின் வேர்களை வலுவாக வைத்திருக்கும். வெங்காயத்தை நறுக்கி சாறு எடுக்கவும். இந்த சாற்றை உச்சந்தலையில் தடவி 30 நிமிடம் கழித்து கழுவவும்.

சின்ன வெங்காயத்தில் உள்ள சல்பர் எனும் வேதிப்பொருள் முடி வளர்ச்சிக்கு உதவும் அவசியமான புரதம் ஆன கொலாஜன் உற்பத்தியை அதிகரிக்க உதவுகிறது. மேலும் சின்ன வெங்காய சாற்றில் பாக்டீரியா எதிர்ப்பு மற்றும் பூஞ்சை எதிர்ப்பு பண்புகள் அதிகம் உள்ளதால் பொடுகு போன்ற தொற்றுக்களை நீக்கவும் உதவுகிறது.
கற்றாழை:
முடி பராமரிப்புக்கும் கற்றாழை மிகவும் உதவியாக இருக்கும். கற்றாழை ஜெல்லை எடுத்து உங்கள் உச்சந்தலையில் ஒரு மணி நேரம் தடவவும். பிறகு நன்றாக கழுவவும். கற்றாழையில் உள்ள வைட்டமின்கள், ஆக்ஸினேற்றங்கள் மற்றும் தாதுக்கள் கூந்தல் வளர்ச்சியைத் தூண்டுவதோடு, வறட்சியையும் தடுக்கிறது.
வாழைப்பழம்-தேன் மாஸ்க்:
வாழைப்பழம் மற்றும் தேன் மாஸ்க் முடியை ஆரோக்கியமாக வைத்திருக்க உதவுகிறது. இரண்டு வாழைப்பழங்களுக்கு இரண்டு ஸ்பூன் தேன் சேர்க்கவும். இப்போது அதை உங்கள் உச்சந்தலையில் தடவி 30 நிமிடங்களுக்குப் பிறகு கழுவவும்.
செம்பருத்தி ஹேர் மாஸ்க்:
முதலில் செம்பருத்தி பூ இதழ்களை பேஸ்ட் செய்து கொள்ளவும். அதில் தயிர் கலந்து தலையில் தடவவும். இந்த கலவையை உங்கள் உச்சந்தலையில் ஒரு மணி நேரம் விட்டு, பின்னர் கழுவவும்.
செம்பருத்தி எண்ணெய்யை தலைக்கு தேய்த்து குளித்தாலும், வறட்சி, ஈறு, பேன், பொடுகு போன்ற முடி சம்பந்தமான பிரச்சனைகளில் இருந்து நிவாரணம் பெறலாம்.
Image Source: Freepik