How To Make Hair Conditioner At Home: இன்று பலரும் முடி பராமரிப்பைக் கருத்தில் கொள்வதில்லை. இதனால், முடி உதிர்வு, முடி பலவீனமடைதல், முடி வறட்சி என பல்வேறு முடி சார்ந்த பிரச்சனைகளைச் சந்தித்து வருகின்றனர். இந்த முடி சார்ந்த பிரச்சனைகளை நீக்க சிலர் சந்தைகளில் விற்பனை செய்யப்படும் விலையுயர்ந்த பராமரிப்புப் பொருள்களை வாங்கி பயன்படுத்துகின்றனர். ஆனால், இது போன்ற பொருள்களில் இரசாயனங்கள் கலந்திருக்க வாய்ப்புண்டு. இதனால் முடி ஆரோக்கியம் பாதிப்படையும் சூழலுக்கு உள்ளாகிறது.
இதனைத் தவிர்க்க, இன்னும் சிலர் வீட்டிலேயே இயற்கையான முறையில் முடி பராமரிப்புப் பொருள்களைத் தயாரித்து பயன்படுத்த விரும்புகின்றனர். இவ்வாறு வீட்டிலேயே இயற்கையான பொருள்களைக் கொண்டு தயார் செய்யப்படும் பராமரிப்புப் பொருள்களில் பெரும்பாலும் இரசாயனங்கள் கலப்பதில்லை. அந்த வகையில் முடி பராமரிப்புக்கு வீட்டிலேயே இயற்கையான முறையில் கண்டிஷனர்களைத் தயார் செய்யலாம். இதில் வீட்டிலேயே உள்ள பொருள்களைப் பயன்படுத்தி கண்டிஷனர் தயார் செய்யும் முறை குறித்து காணலாம்.
இந்த பதிவும் உதவலாம்: Healthy Hair Tips: கூந்தல் வளர்ச்சியை அதிகரிக்க உதவும் ஹென்னா ஹேர்டை செய்வது எப்படி?
வீட்டிலேயே கண்டிஷனர் தயார் செய்வது எப்படி?
வீட்டில் கண்டிஷனர் தயாரிக்க, சில அத்தியாவசிய பொருள்கள் தேவைப்படுகிறது. அந்த வகையில் தேங்காய் எண்ணெய், ஷியா வெண்ணெய், கற்றாழை ஜெல் போன்றவை சிறந்த ஈரப்பதமூட்டும் பண்புகளைக் கொண்டுள்ளதால், இவை சிறந்த ஹேர் கண்டிஷனர் தயார் செய்ய பயன்படுத்தப்படுகிறது. இதில் தேங்காய் எண்ணெய் முடிக்குத் தேவையான புரத இழப்பைக் குறைக்கவும், ஷியா வெண்ணெய் ஆழமான கண்டிஷனிங் மற்றும் பிரகாசத்தை வழங்குவதாகவும் அமைகிறது.
மேலும், கற்றாழை ஜெல் ஆனது நீரேற்றத்தைத் தரக்கூடியதாகவும், உச்சந்தலை பராமரிப்பிற்கும் மிகவும் ஏற்றதாகும். இதனுடன், தேன் ஒரு சிறந்த ஹேர் கண்டிஷனர் தயாரிப்பில் பயன்படுத்தப்படுகிறது. இது தவிர, லாவெண்டர், ரோஸ்மேரி அல்லது மிளகுக்கீரை போன்ற அத்தியாவசிய எண்ணெய்களும் வீட்டில் கண்டிஷனர் தயாரிக்கப் பயன்படுத்தப்படுகிறது. இவை உச்சந்தலையின் pH ஐ சமநிலைப்படுத்தவும், கூந்தலுக்கு பளபளப்பைச் சேர்க்கவும், முடி ஆரோக்கியத்தை மேம்படுத்தவும் உதவுகிறது.
ஹேர் கண்டிஷனர் தயார் செய்யும் முறை
தேங்காய் எண்ணெய் மற்றும் தேன் ஹேர் கண்டிஷனர்
இந்த ஹேர் கண்டிஷனர் தயார் செய்வதற்கு 2 டேபிள் ஸ்பூன் தேங்காய் எண்ணெய், 1 டேபிள் ஸ்பூன் தேன் மற்றும் 1 டேபிள் ஸ்பூன் கற்றாழை ஜெல் போன்றவற்றை நன்கு கலக்க வேண்டும். இதை ஈரமான முடிக்கு கலவையாகப் பயன்படுத்தலாம். இதில் முடி முனைகளில் நன்கு தடவ வேண்டும். இந்த ஹேர் கண்டிஷனர் அப்ளை செய்து 15-20 நிமிடங்கள் வைத்து பிறகு வெதுவெதுப்பான நீரில் கழுவி விடலாம்.
ஆப்பிள் சைடர் வினிகர் கண்டிஷனர்
ஒரு ஸ்ப்ரே பாட்டில் ஒன்றில் 2 தேக்கரண்டி அளவிலான ஆப்பிள் சைடர் வினிகர் மற்றும் 1 கப் தண்ணீர் சேர்த்து கலந்து கொள்ள வேண்டும். இதில் விரும்பினால் 5 சொட்டு ரோஸ்மேரி அத்தியாவசிய எண்ணெயைச் சேர்த்துக் கொள்ளலாம். இந்த கலவையை ஷாம்பு செய்த பிறகு, தலைமுடி மற்றும் உச்சந்தலையில் தெளிக்க வேண்டும். இதை 5-10 நிமிடங்கள் வைத்து பின்னர் குளிர்ந்த நீரில் கழுவி விடலாம்.
இந்த பதிவும் உதவலாம்: தலைமுடி அடர்த்தியாக வளர தயிருடன் இந்த ஒரு பொருள் சேர்த்து பயன்படுத்துங்க
அலோ வேரா மற்றும் ஷியா வெண்ணெய் கண்டிஷனர்
இந்த ஹேர் கண்டிஷனர் தயார் செய்வதற்கு 2 டேபிள் ஸ்பூன் ஷியா வெண்ணெய் முழுவதுமாக திரவமாக மாறும் வரை இரட்டை கொதிகலனில் உருக வைக்க வேண்டும். பின், இதை வெப்பத்திலிருந்து நீக்கி 5-10 சொட்டு லாவெண்டர் அத்தியாவசிய எண்ணெய் மற்றும் 1 தேக்கரண்டி கற்றாழை ஜெல் போன்றவற்றைக் கலக்க வேண்டும். இந்த கலவையை சிறிது குளிர விடலாம். அதன் பின் ஈரமான முடிக்கு இந்தக் கலவையை பயன்படுத்தி, 20-30 நிமிடங்கள் வைத்து பிறகு வெதுவெதுப்பான நீரில் அலசலாம்.
ஆலிவ் எண்ணெய் மற்றும் முட்டை ஹேர் கண்டிஷனர்
முட்டையை அடித்த மசித்த வாழைப்பழத்தைச் சேர்த்துக் கொள்ள வேண்டும். பின் அதில் 1 டீஸ்பூன் தேன், 2 டீஸ்பூன் ஆலிவ் எண்ணெய், 3 டீஸ்பூன் பால் போன்றவற்றைச் சேர்த்து நன்கு கலக்க வேண்டும். இதை கூந்தலின் மயிர்க்கால்கள் முதல் நுனி வரை அனைத்துப் பகுதிகளிலும் நன்றாக தடவ வேண்டும். அதன் பின், 30 நிமிடங்கள் கழித்து கூந்தலை அலசலாம்.
தயிர் மற்றும் முட்டை கண்டிஷனர்
இந்த கண்டிஷனர் தயார் செய்ய, முட்டையை அடித்து நன்றாக சேர்த்து தயிர் கலக்க வேண்டும். இவை இரண்டையும் நன்றாக பேஸ்ட் பதத்திற்கு வரும் வரை பின் இதை முடியின் மயிர்க்கால்கள் முதல் வேர்கள் வரை தடவ வேண்டும். பின் நுனி முடிக்கும் தடவி 30 நிமிடங்கள் வைக்க வேண்டும். அதன் பிறகு கூந்தலை மைல்டான ஷாம்பு கொண்டு அலசலாம்.
இந்த ஹேர் கண்டிஷனர்கள் அனைத்தும் வீட்டிலேயே இயற்கையான பொருள்களைக் கொண்டு தயார் செய்யப்படுகிறது. எனினும், இதில் பயன்படுத்தப்படும் பொருள்கள் அரிப்பு எரிச்சல் போன்ற ஒவ்வாமை பிரச்சனைகளை ஏற்படுத்தினால் உடனடியாக அதைப் பயன்படுத்துவதைத் தவிர்க்கலாம்.
இந்த பதிவும் உதவலாம்: Homemade Hair Conditioner: வறண்ட முடிக்கு இயற்கையான ஹேர் கண்டிஷனர் இதோ!
Image Source: Freepik