How to make homemade henna for hair growth: மருதாணி முடி வளர்ச்சிக்கு உதவும் ஒரு ஆயுர்வேத மூலிகை என்பது நம்மில் பலருக்கு தெரியும். நம்மில் பலர், முடியை பராமரிக்க தலைமுடிக்கு ஹென்னா பயன்படுத்துவோம். சந்தைகளில் இவை பல்வேறு வகைகளில் கிடைக்கிறது. இவற்றை வாங்கி பயன்படுத்தினால், முடி சில நாட்களுக்கு நன்றாக இருக்கும். ஆனால், சிறிது நாள் கழித்து முடி சம்மந்தமான பல்வேறு பிரச்சினைகளை சந்திக்க நேரிடும்.
சருமமாக இருந்தாலும் சரி.. தலைமுடியாக இருந்தாலும் சரி.. எப்போதும் இயற்கையான பொருட்களை பயன்படுத்த முயற்சி செய்யுங்கள். அந்தவகையில், தலைமுடி வளர்ச்சிக்கு உதவும் மருதாணி பொடியை வீட்டிலேயே எப்படி தயாரிப்பது என இந்த தொகுப்பில் பார்க்கலாம். இது உங்கள் முடியை மிருதுவாக வைப்பதுடன், நீளமாக வளரவும் உதவும்.
இந்த பதிவும் உதவலாம் : Thick Hair Tips : மெலிந்த தலைமுடியை அடர்த்தியாக்க இதை ஃபாலோ பண்ணுங்க!!
வீட்டிலேயே ஹென்னா செய்வது எப்படி?

பொதுவாக நம்மில் பெரும்பாலானோர் சந்தையில் ஹென்னா பாக்கெட்டுகளை வாங்கி உபயோகிப்போம். ஆனால், வீட்டிலேயே தயாரிப்பது இன்னும் பாதுகாப்பானது. இதற்கு, நீங்கள் முதலில் மருதாணி இலைகளை எடுத்துக்கொள்ள வேண்டும். அவற்றை மிக்ஸி ஜாரில் இட்டு சிறிது தண்ணீர் சேர்த்து நன்றாக அரைத்தால், ஹென்னா பேஸ்ட் தயார்.
மருதாணியில் என்ன கலக்க வேண்டும்?

இப்போது அரைத்து வைத்த மருதாணி பொடியில் பீட்ரூட் ஜூஸ், காபி, ஆலிவ் ஆயில், வைட்டமின் ஈ கேப்ஸ்யூல், முட்டையின் வெள்ளைக்கரு மற்றும் தயிர் போன்றவற்றை சேர்த்து நன்கு கலக்கவும். இவை அனைத்திலும், வெவ்வேறு ஊட்டச்சத்துக்கள் உள்ளன, அவை முடி வளர்ச்சிக்கு மிகவும் உதவியாக இருக்கும்.
இந்த பதிவும் உதவலாம் : Hair Growth Oil: அடர்த்தியா, நீளமா முடி வளர இந்த எண்ணெய்களை முயற்சி செஞ்சி பாருங்க!
ஹென்னாவை தலைமுடியில் எப்படி பயன்படுத்துவது?

முதலில் உங்கள் தலைமுடியை இரண்டு பகுதியாக பிரிக்கவும். இப்போது தயார் செய்து வைத்த மருதாணி பேஸ்ட்டை ஹேர்லைனில் தடவவும். மருதாணியை முடியின் மீது தடவாமல் அதன் மயிர்க்கால்களில் தடவ வேண்டும். இதே போல முடியை சிறு சிறு பகுதிகளாக பிரித்து தடவவும். பின்னர், மருதாணியை 2-3 மணி நேரம் தலையில் அப்படியே வைக்கவும். பின்னர் தண்ணீரின் உதவியுடன் முடியை சுத்தம் செய்யவும். மாதம் இரண்டு முறை இந்த் மருதாணி பேஸ்ட்டை தலைமுடியில் தடவி வந்தால் நல்ல பலன் கிடைக்கும்.
Pic Courtesy: Freepik