Fri Sep 11, 2026 | 11:15 PM IST

Rosemary Hair Benefits: முடி வளர்ச்சிக்கு ரோஸ்மேரி தரும் ஆரோக்கிய நன்மைகள்

Rosemary Benefits For Hair: இன்று ஆண் மற்றும் பெண் இருபாலரும் சந்திக்கும் பிரச்சனைகளில் ஒன்றாக தலைமுடி பிரச்சனை உள்ளது. கூந்தல் பராமரிப்புக்கு பலரும் பல்வேறு முயற்சிகளைச் செய்து வருகின்றனர். அதன் படி இயற்கையான வழியாக ரோஸ்மேரி சரும பராமரிப்புக்கு பெரிதும் பங்கு வகிக்கிறது. சமையல் பயன்பாடுகளுக்கு அறியப்பட்ட இந்த நறுமண மூலிகை, முடி வளர்ச்சியை ஊக்குவிப்பதற்கான சக்தியைக் கொண்டுள்ளது. இதன் மருத்துவ குணங்கள், முடி ஆரோக்கியத்திற்கு நேர்மறையான தாக்கங்களை ஏற்படுத்துகின்றன.

முடி வளர்ச்சிக்கு ரோஸ்மேரி தரும் ஆரோக்கிய நன்மைகள்

ரோஸ்மேரியைப் பயன்படுத்துவது முடி வளர்ச்சிக்கு பல்வேறு விதமான நன்மைகளைத் தருகிறது.

முடியை பலப்படுத்த

ரோஸ்மேரி ஆன்டி ஆக்ஸிடன்ட்கள் மற்றும் வைட்டமின்கள் நிறைந்த மூலிகையாகும். இது முடியின் மயிர்க்கால்களை வலுப்படுத்த உதவுகிறது. முடி உதிர்வைத் தடுத்து, முடியின் ஒட்டுமொத்த ஆரோக்கியத்தையும் மேம்படுத்துகிறது.

இந்த பதிவும் உதவலாம்: Natural Hair Oil: முடி கொட்டும் கவலை இனி வேண்டாம்.. இயற்கை முறை தீர்வு இதோ!

வேர்க்கால்களுக்கு உறுதியளிக்க

ரோஸ்மேரி எண்ணெயில் உர்சோலிக் அமிலம் மற்றும் ரோஸ்மரினிக் அமிலம் போன்றவை உள்ளது. இவை உச்சந்தலையின் இரத்த ஓட்டத்தை அதிகரிக்க உதவுகிறது. இந்த மேம்பட்ட சுழற்சி முடியின் மயிர்க்கால்களைத் தூண்டுகிறது. முடி உதிர்வைத் தடுத்து, முடி வளர்ச்சியை ஊக்குவிக்கிறது.

பொடுகு மற்றும் எரிச்சலைக் குறைக்க

உச்சந்தலையில் எரிச்சல் மற்றும் பொடுகு போன்ற பிரச்சனைகள் ஏற்படலாம். ரோஸ்மேரியில் உள்ள அழற்சி எதிர்ப்பு மற்றும் பூஞ்சை காளான் பண்புகள் உச்சந்தலையில் ஏற்படும் எரிச்சலை அகற்றவும், பொடுகைக் குறைக்கவும் உதவுகிறது. உச்சந்தலையின் பாதுகாப்பானது முடி வளர்ச்சிக்கு உதவக்கூடியதாகும். இது புதிய முடி செழித்து வளர்வதற்கான சூழலை ஏற்படுத்துகிறது.

முடி அமைப்பை மேம்படுத்த

ரோஸ்மேரியால் தயாரிப்புகளின் வழக்கமான பயன்பாடு, தலைமுடியை மென்மையாக மற்றும் பளபளப்பாக வைக்க உதவுகிறது. இவை முடியின் இயற்கையான நிறத்தை அதிகரிக்கலாம்.

DHT தடுப்பான்

முடி இழப்பு மற்றும் முடி உதிர்தலை ஏற்படுத்துவதற்குக் காரணமான ஹார்மோன் டைஹைட்ரோடெஸ்டோஸ்டிரோன் (DHT) ஆகும். ரோஸ்மேரியில் உள்ள உர்சோலிக் அமிலம், DHT உற்பத்தியைத் தடுக்க உதவுகிறது. இது முடியைப் பாதுகாப்பதுடன், வளர்ச்சியை ஊக்குவிக்கிறது.

இந்த பதிவும் உதவலாம்: Hair Growth Oil: அடர்த்தியா, நீளமா முடி வளர இந்த எண்ணெய்களை முயற்சி செஞ்சி பாருங்க!

முடி வளர்ச்சிக்கு ரோஸ்மேரி எண்ணெயைப் பயன்படுத்துவது எப்படி?

தலைமுடிக்கு ரோஸ்மேரி எண்ணெயைப் பல்வேறு வழிகளில் பயன்படுத்தலாம்.

ரோஸ்மேரி கலந்த ஷாம்பு

வழக்கமான முடி பராமரிப்புக்கு ரோஸ்மேரி கலந்த முடி தயாரிப்புகளைப் பயன்படுத்தலாம். அதன் படி ரோஸ்மேரி கலந்த ஷாம்பு மற்றும் கண்டிஷனரைப் பயன்படுத்தலாம்.

ரோஸ்மேரி ஹேர் மாஸ்க்

ரோஸ்மேரி எண்ணெயை முட்டை, தயிர் அல்லது தேன் போன்ற பிற இயற்கை பொருள்களுடன் கலந்து ஹேர் மாஸ்க் ஆக பயன்படுத்தலாம்.

கடைசியாக சேர்க்க

ரோஸ்மேரி இலைகளைத் தண்ணீரில் வேகவைத்து, பின் ஆறவைத்து ஷாம்பு செய்த பின் இறுதியாக முடிக்குப் பயன்படுத்தலாம். இது தலைமுடிக்கு பிரகாசத்தையும், முடி அமைப்பையும் மேம்படுத்தலாம்.

ரோஸ்மேரி எண்ணெய் மசாஜ்

ரோஸ்மேரி எண்ணெயின் சில துளிகளை ஜோஜோபா அல்லது தேங்காய் எண்ணெய் போன்ற பிற எண்ணெயுடன் கலந்து உச்சந்தலையில் மசாஜ் செய்யலாம். ஷாம்பு போடுவதற்கு முன் குறைந்தது 30 நிமிடங்கள் அப்படியே விட்டு விடலாம்.

ரோஸ்மேரியை முடி பராமரிப்பு முறைகளில் சேர்த்துக் கொள்வது முடி வளர்ச்சியை ஊக்குவிக்கவும், முடியை வலுப்படுத்தவும் உதவுகிறது. மேலும், ஆரோக்கியமான கூந்தலைப் பராமரிக்க இது இயற்கையான மற்றும் மலிவான வழியாகும்.

இந்த பதிவும் உதவலாம்: Cinnamon for hair : அடர்த்தியான கூந்தலை பெற இலவங்கப்பட்டையை இப்படி யூஸ் பண்ணுங்க!

Image Source: Freepik

Read Next

Hair Growth oil: போதும் போதும் என கூறும் அளவுக்கு முடி அடர்த்தியாகவும் நீளமாகவும் வளர இந்த எண்ணெயை பயன்படுத்துங்க!

Disclaimer

தகவலின் துல்லியம், நம்பகத்தன்மை, சரியான நேரத்தில் வழங்குதல் மற்றும் உண்மைத்தன்மையை உறுதி செய்ய அனைத்து சாத்தியமான நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளது. இருப்பினும், Onlymyhealth.com இதற்கு எந்தப் பொறுப்பையும் ஏற்காது. இந்த வலைதளத்தில் வழங்கப்படும் எந்தவொரு தகவலையும் பயன்படுத்துவது பார்வையாளர்களின் விருப்பத்திற்கு ஏற்ப மட்டுமே. ஏதேனும் மருத்துவத் தேவைகள்/தொடர்ச்சியான உடல்நலப் பிரச்சினைகள் ஏற்பட்டால், மேலே குறிப்பிடப்பட்டுள்ள வலைத்தளத்தில் எங்கள் குழு அல்லது மூன்றாம் தரப்பினரால் பதில்கள்/கருத்துகள் வடிவில் வழங்கப்படும் எந்தவொரு ஆலோசனை/குறிப்புகளையும் பயன்படுத்துவதற்கு முன்பாக, ஒரு தகுதிவாய்ந்த மருத்துவ பயிற்சியாளரை அணுகுமாறு நாங்கள் உங்களுக்கு அறிவுறுத்துகிறோம்.

கௌதமி சுப்ரமணி

கௌதமி சுப்ரமணி

இளைய உள்ளடக்க எழுத்தாளர்

நான் கௌதமி சுப்ரமணியம், டிஜிட்டல் மீடியாவில் ஐந்து ஆண்டுகளுக்கு மேலாக பணியாற்றி வருகிறேன். ஆரோக்கியம், உணவு, உடற்பயிற்சி, உடல் நலம், அழகு குறிப்பு போன்றவை தொடர்பான விவரங்களை ஆராய்ந்து கட்டுரைகளை எழுதி வருகிறேன். நான் எழுதும் ஒவ்வொரு பகுதியும் ஈர்க்கக்கூடியதாக இருப்பதை உறுதிசெய்து, விவரங்களுக்கு ஒரு தீவிரமான பார்வையை வளர்த்துக்கொண்டேன். மக்களுக்குத் தேவையான மற்றும் உண்மையான தகவல்களை வழங்குவதன் மூலம் நல்ல ஆரோக்கியம் மற்றும் நல்வாழ்வுக்கான இலக்கை மேம்படுத்துவது எனது நோக்கம் ஆகும்.

Read More..

How we keep this article up to date:

We work with experts and keep a close eye on the latest in health and wellness. Whenever there is a new research or helpful information, we update our articles with accurate and useful advice.


    Medically reviewed content
    200+ medical reviewers in network
    17 Years of Trusted Health Content
    Medically reviewed content
    200+ medical reviewers in network
    17 Years of Trusted Health Content
    Medically reviewed content
    200+ medical reviewers in network
    17 Years of Trusted Health Content