How to use cinnamon for hair growth : ஆண்/பெண் என்ற பாகுபாடு இல்லாமல் அனைவரும் கரு கரு என்ற அடர்த்தியான தலைமுடியை பெற விரும்புவார்கள். இதற்காக நம்மில் பலர் சந்தைகளில் விற்கப்படும் விலை உயர்ந்த பல எண்ணெய்கள் அல்லது ஷாம்புக்களை வாங்கி பயன்படுத்துவோம். ஆனால், இதனால் நமக்கு எந்த பலனும் கிடைத்திருக்காது. ஏனென்றால், அதில் உபயோகப்படுத்தப்படும் கெமிக்கல் நமது தலைமுடிக்கு தீங்கு விளைவிக்கும்.
ஆனால், பல நூற்றாண்டுகளாக நாம் அனைவரும் சமையலுக்கு பயன்படுத்தப்படும் ஒரு மாசாலாப்பொருள் தனது தலைமுடி வளர்ச்சிக்கு உதவும் என்பது உங்களுக்கு தெரியுமா? இந்திய உணவுகளில் பயன்படுத்தப்படும், ஒரு தனித்துவமான சுவை மற்றும் நறுமணத்தைக் கொண்ட ஒரு மசாலா இலவங்கப்பட்டை. இது சமையலுக்கு மட்டும் அல்ல, நமது உடலுக்கும் பல்வேறு ஆரோக்கிய நன்மையை தருகிறது. ஒருவேளை, உங்கள் தலைமுடியை இயற்கையான முறையில் பராமரிக்க விரும்பினால், இலவங்கப்பட்டை உங்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.
முக்கிய கட்டுரைகள்

உண்மையில், இலவங்கப்பட்டை ஆன்டி-ஆக்ஸிடன்ட், அழற்சி எதிர்ப்பு பண்புகளைக் கொண்டுள்ளது. எனவே, இது இயற்கையாகவே முடியை பராமரிக்க உதவியாக இருக்கும். பொடுகுத் தொல்லை மற்றும் முடி உதிர்வால் நீங்கள் அவதிப்பட்டு வந்தால், இலவங்கப்பட்டை நிச்சயமாக உங்களுக்கு உதவும். ஆரோக்கியமான கூந்தலை பெற உதவும் இலவங்கப்பட்டையின் ஆரோக்கிய நன்மைகள் பற்றி இந்த தொகுப்பில் பார்க்கலாம்.
இந்த பதிவும் உதவலாம்: முடி உதிர்வதை தடுக்கும் இயற்கையான மூலிகை எண்ணெயை இனி வீட்டிலேயே செய்யலாம்!!!
முடி வளர்ச்சிக்கு உதவுகிறது
இலவங்கப்பட்டையில் முடி வளர்ச்சிக்கு உதவும் சில அமிலங்கள் உள்ளது. இதை தலையில் பயன்படுத்தும் போது, உச்சந்தலையில் இரத்த ஓட்டத்தை மேம்படுத்தும். உச்சந்தலையில் இரத்த ஓட்டம் சிறப்பாக இருக்கும் போது, மயிர்க்கால்களுக்கு தேவையான ஆக்ஸிஜன் மற்றும் ஊட்டச்சத்துக்கள் வழங்கப்படும். இதனால், முடி வேகமாக வளர மிகவும் உதவியாக இருக்கும்.
உச்சந்தலை தொற்றில் இருந்து விடுபட

பெரும்பாலான முடி பிரச்சனைகளுக்கு உச்சந்தலையில் தொற்றும் முக்கிய காரணங்களில் ஒன்றாக இருக்கலாம். நுண்ணுயிர் எதிர்ப்பு பண்புகள் இலவங்கப்பட்டையில் காணப்படுகின்றது. எனவே, பாக்டீரியா மற்றும் பூஞ்சை போன்ற உச்சந்தலையில் ஏற்படும் தொற்றுகளை இது அகற்றுகிறது. உச்சந்தலையில் தொற்று இல்லாத போது, பொடுகு உட்பட பல முடி பிரச்சனைகளை சமாளிக்க இது உதவும்.
இந்த பதிவும் உதவலாம்: அடர்த்தியான முடியை கட்டுப்படுத்த சில வழிகள்!
முடியை ஷைனிங் ஆக்கும்
இலவங்கப்பட்டை முடியை ஷைனிங் ஆக வைக்க உதவும். எனவே, உங்கள் தலைமுடியை இயற்கையாகவே ஒளிரச் செய்ய விரும்பினால் இலவங்கப்பட்டையைப் பயன்படுத்துங்கள். இலவங்கப்பட்டையைப் பயன்படுத்துவதன் மூலம், உங்கள் தலைமுடி கடுமையான இரசாயனங்களிலிருந்து பாதுகாக்கப்படும். இலவங்கப்பட்டையுடன் தேனைக் கலந்து, உங்கள் தலைமுடிக்கு தேய்த்து குளித்தால் நல்ல மற்றம் தெரியும்.
முடி உதிர்வு குறையும்

முடி உதிர்தல் பிரச்சனையால் நீங்கள் தொடர்ந்து கவலைப்படுகிறீர்கள் என்றால், இலவங்கப்பட்டையை உங்கள் முடி பராமரிப்பு வழக்கத்தில் சேர்த்துக்கொள்ளுங்கள். இதில் உள்ள அமிலங்கள் மயிர்க்கால்களை பலப்படுத்துகிறது. இதன் காரணமாக முடி உடைவது வெகுவாகக் குறைக்கப்படுகிறது. அதே நேரத்தில், உங்கள் தலைமுடியின் ஆரோக்கியமும் கணிசமாக மேம்படும்.
இயல்பாக நாம் அனைவரும் முடியை சுத்தம் செய்ய ஷாம்பூ பயன்படுத்துகிறோம். ஆனால் அது உச்சந்தலையை ஆழமாக சுத்தம் செய்யாது. ஆனால், இலவங்கப்பட்டை மிகவும் பயனுள்ளதாக இருக்கும். இது உங்கள் சருமத்தை மென்மையாக பீல் செய்ய உதவுகிறது. ஆனால் இலவங்கப்பட்டை சிலருக்கு உச்சந்தலையில் எரிச்சல் அல்லது ஒவ்வாமையை ஏற்படுத்தலாம். எனவே, மருத்துவரின் ஆலோசனையை எடுப்பது நல்லது.
இந்த பதிவும் உதவலாம்: இந்த 9 பழக்கங்கள் முடி ஆரோக்கியத்தை பாதிக்கும்!
இலவங்கப்பட்டையை எப்படி பயன்படுத்துவது?
- குறைந்த வெப்பத்தில் ஒரு சிறிய பாத்திரத்தில், 1/4 கப் தேங்காய் எண்ணெய் அல்லது ஆலிவ் எண்ணெயை சூடாக்கவும்.
- எண்ணெய் நன்கு சூடானதும், (கொதிக்க விடாதீர்கள்) அதில் 3 முதல் 5 சொட்டு இலவங்கப்பட்டை எண்ணெய் அல்லது 1 தேக்கரண்டி இலவங்கப்பட்டை சேர்க்கவும்.
- இப்போது உங்கள் தலைமுடியை இரண்டாக பிரித்து, கலவையை உங்கள் உச்சந்தலையில் ஒரு தூரிகை அல்லது சுத்தமான விரல்களால் தடவவும்.
- மீதமுள்ள கலவையை உங்கள் முடியின் முனைகளில் பரப்பவும். 15 நிமிடங்கள் அப்படியே விடவும். பின்னர், வழக்கம் போல் உங்கள் தலைமுடியை தண்ணீர் கொண்டு கழுவவும்.
குறிப்பு : உங்களுக்கு எண்ணெய் பசையுள்ள உச்சந்தலை என்றால், எண்ணெய்க்கு பதில் தயிர் அல்லது தேனை பயன்படுத்தலாம்.