Way To Use Fenugreek For Hair Growth: பெண்கள் தங்களை அழகாக வெளிப்படுத்த நினைப்பார்கள். இதற்காக சந்தையில் கிடைக்கும் பல பொருட்களை பயன்படுத்துவர். அதுவும் முடி என்று வரும்போது, சொல்லவே தேவை இல்லை. பல விஷயங்களை பயன்படுத்துகிறார்கள்.
ஆனால், சந்தையில் கிடைக்கும் சில பொருட்கள் உங்கள் முடியை மேலும் உதிரச் செய்யலாம். இது உங்களை மன உளைச்சளுக்கு தள்ளும். ஆனால், முடி வளர்ச்சியை ஊக்குவிக்க வீட்டு வைத்தியமே சிறப்பாக இருக்கும். உங்களுக்கு முடி கிடுகிடுன்னு அடர்த்தியாக வளர வேண்டும் என்றால் வெந்தயம் இருந்தாலே போதும். இது கூந்த வளர்ச்சிக்கு ஒரு வரப்பிரசாதமாக திகழ்கிறது.
வெந்தயத்தை முடி பராமரிப்பில் இணைப்பது மூலம் முடி கருப்பாகவும், பளபளப்பாகவும், அடத்தியாகவும் வளர உதவும். முடி வளர்ச்சிக்கு வெந்தயத்தை எப்படி பயன்படுத்தலாம் என்று இங்கே காண்போம்.
வெந்தயம் ஹேர் மாஸ்க்

வெந்தயத்தை இரவு முழுவதும் ஊற வைத்து, அதனை காலையில் அரைத்து எடுத்துக்கொள்ளவும். இந்த போஸ்ட்டை முடியில் மாஸ்க் போட்டுக்கொள்ளவும். சுமார் 30 நிமிடங்களுக்கு அப்படியே விடவும். பின் வெதுவெதுப்பான நீரை கொண்டு, மென்மையான ஷாம்பூ பயன்படுத்தி முடியை அலசவும். இது உங்கள் முடியை கருமையாக்கவும், பளபளப்பாக்கவும் உதவும். மேலும் முடி வளர்ச்சியை ஊக்குவிக்கும். வாரம் ஒரு முறை இதனை செய்து பார்க்கவும்.
வெந்தயம் தயிர் ஹேர் மாஸ்க்
வெந்தயத்தை இரவு முழுவதும் ஊற வைத்து, அதனை காலையில் அரைத்து எடுத்துக்கொள்ளவும். இதனுடன் தயிரை கலந்து ஒரு பேஸ்டாக எடுத்துக்கொள்ளவும். இந்த கலவையை உங்கள் முடியில் மாஸ்க் போல் தடவிக்கொள்ளவும். இதனை 40 நிமிடங்களுக்கு அப்படியே விடவும். பின் வெதுவெதுப்பான நீரை கொண்டு, மென்மையான ஷாம்பூ அல்லது சீயக்காய் பயன்படுத்தி முடியை அலசவும்.
வெந்தய எண்ணெய்
தேங்காய் எண்ணெயுடன், 2 டேபிள் ஸ்பூன் வெந்தயத்தை சேர்த்து சூடுபடுத்தவும். இது குளிர்ந்த பின், ஒரு பாட்டிலில் போட்டு வைக்கவும். இந்த எண்ணெயை தலையில் தடவி நன்கு மசாஜ் செய்து, ஒரு மணி நேரம் ஊற விடவும். பின் கதகதப்பான நீரில் முடியை அளசவும். இது முடி வளர்ச்சியை தூண்டும். வாரம் இரு முறை இதனை செய்ய வேண்டும். உங்கள் உடல் இயற்கையாகவே குளிர்ச்சியாக இருந்தால், இரண்டு வாரத்திற்கு இரு முறை இதை பயன்படுத்தனேலே போதும்.
Image Source: Freepik