How To Use Sesame Seeds For Hair: முடி உதிர்வு, மெல்லிய முடி, முடி வறட்சி போன்ற பல்வேறு பிரச்சனைகளைப் பலரும் சந்தித்து வருகின்றனர். இந்த பிரச்சனைகளில் இருந்து விடுபட சந்தையில் கிடைக்கும் வேதிப்பொருள்களைப் பயன்படுத்துகின்றனர். ஆனால், இவை பல்வேறு பக்க விளைவுகளை ஏற்படுத்தலாம். இதற்கு இயற்கை முறையைக் கையாள்வது அவசியமாகும். அந்த வகையில் உணவுப் பொருளான எள் கூந்தலுக்கு மிகவும் நன்மை பயக்கும்.
இந்த எள் விதைகள் பல்வேறு முடி பிரச்சனைகளை நீக்குகிறது. எள்ளில் ஒமேகா-3 கொழுப்பு அமிலங்கள் நிறைந்துள்ளன. இவை முடிக்கு ஊட்டமளிப்பதுடன், முடி வளர்ச்சியை ஊக்குவிக்கிறது. மேலும் நரைமுடி பிரச்சனையிலிருந்து விடுபட உதவுகிறது. எள் விதைகள் முடியை ஆரோக்கியமாக வைக்க உதவுகிறது. இதை உட்கொள்வது முடி உதிர்வைக் கட்டுப்படுத்துகிறது.
இந்த பதிவும் உதவலாம்: Homemade Hibiscus Shampoo: நீளமா, அடர்த்தியா, மொத்தமா முடி வேணுமா? செம்பருத்தி ஷாம்பு யூஸ் பண்ணுங்க
தலைமுடிக்கு எள் விதைகள்
எள் விதைகளில் வைட்டமின்கள், தாதுக்கள் மற்றும் ஆன்டி ஆக்ஸிடன்ட்டுகள் போன்றவை காணப்படுகின்றன. இவை முடியை பளபளப்பாக வைக்க உதவுகிறது. எள் விதைகளைக் கொண்டு தயாரிக்கப்படும் ஹேர் பேக் அல்லது எண்ணெயைப் பயன்படுத்தி முடியை மசாஜ் செய்வது முடியை வலுப்படுத்துவதுடன், அவற்றின் பொலிவை அதிகரிக்கிறது. இதில் முடியை வலுப்படுத்த வீட்டில் எள் ஹேர் பேக் செய்யும் முறை குறித்து காணலாம்.
முடி வலுவடைய எள் விதைகள் ஹேர் பேக்
எள் விதைகளுடன் சில முடி ஆரோக்கியத்திற்குத் தேவையான பொருள்களைப் பயன்படுத்தி முடியை வலுவாக்க ஹேர் பேக் செய்யலாம். இதில் எள் விதை ஹேர் பேக் செய்யும் முறைகள் குறித்து காணலாம்.
தேங்காய் எண்ணெய் மற்றும் எள் ஹேர் பேக்
தேவையானவை
- லேசாக அரைத்த எள் - 2 டீஸ்பூன்
- தேங்காய் எண்ணெய் - 3 தேக்கரண்டி
செய்யும் முறை
தேங்காய் எண்ணெய் மற்றும் எள் ஹேர் பேக் செய்ய, இந்த பொருள்களைக் கலந்து பேஸ்ட் தயார் செய்ய வேண்டும். பின், இந்த கலவையை முடியின் வேர்களில் 30 நிமிடங்களுக்கு முடியில் நன்கு தடவ வேண்டும். அதன் பிறகு ஷாம்பு பயன்படுத்தி தலையை அலச வேண்டும். இந்த ஹேர் பேக் பயன்படுத்துவது முடியை வலுவாக்குவதுடன், முடி வேகமாக வளர உதவுகிறது.
இந்த பதிவும் உதவலாம்: Hair Loss Prevention: முடி உதிர்வை இயற்கையாக கட்டுப்படுத்த இதை மட்டும் செய்யுங்க!
எள் மற்றும் வெந்தய விதைகள் ஹேர் பேக்
தேவையானவை
- வெந்தய விதை பவுடர் - 2 தேக்கரண்டி
- கருப்பு எள் விதைகள் - 1/4 தேக்கரண்டி
- கற்றாழை ஜெல் - 2 தேக்கரண்டி
வெந்தய விதை மற்றும் எள் ஹேர் பேக் செய்முறை
இந்த ஹேர் பேக் செய்ய, மேலே கூறப்பட்ட பொருள்கள் அனைத்தையும் கலந்து பேஸ்ட்டைத் தயார் செய்ய வேண்டும். பின், இந்த பேஸ்ட்டை உச்சந்தலையில் தடவி 15 முதல் 20 நிமிடங்கள் வரை வைக்க வேண்டும். அதன் பிறகு, தலைமுடியை தண்ணீரில் கழுவ வேண்டும். இந்த ஹேர் பேக் தடவுவது முடியை வலுப்படுத்துவதுடன், பளபளப்பாக வைக்க உதவுகிறது.
தயிர் மற்றும் எள் ஹேர் பேக்
தேவையானவை
- எள் விதைகள் - 2 ஸ்பூன்
- தேன் - 1 தேக்கரண்டி
- தயிர் - 1 ஸ்பூன்
செய்முறை
தயிருடன் எள் தயாரிக்கப்படும் இந்த ஹேர் பேக்கிற்கு, கொடுக்கப்பட்ட பொருள்களை நன்கு கலக்க வேண்டும். இதற்கு கருப்பு அல்லது வெள்ளை எள்ளை எடுத்துக் கொள்ளலாம். இந்த கலவையை உச்சந்தலையில் 15 நிமிடங்கள் தடவி, பிறகு தண்ணீரில் கழுவ வேண்டும். இந்த ஹேர் பேக்கைப் பயன்படுத்தி முடி பிளவு பிரச்சனையை நீக்குவதுடன், முடி வளர்ச்சியை அதிகரிக்கிறது.
எள்ளைக் கொண்டு தயாரிக்கப்படும் ஹேர் பேக் முடியை நீளமாக மற்றும் வலுவாக மாற்றுகிறது. எனினும், தலைமுடிக்கு ஏதேனும் சிகிச்சை செய்திருப்பின், நிபுணர்களின் ஆலோசனையின் பின்னரே ஹேர் பேக்குகளைப் பயன்படுத்த வேண்டும்.
இந்த பதிவும் உதவலாம்: Hair Mask For Straighten: தலைமுடி நேராக வளர இந்த ஹேர் மாஸ்க் யூஸ் பண்ணுங்க
Image Source: Freepik