அடர்த்தியான, நீளமான மற்றும் கருப்பான கூந்தல், என்பது அனைவரின் கனவு. அத்தகைய முடியைப் பெற, உங்கள் உணவோடு உங்கள் தலைமுடியை கவனித்துக்கொள்வது மிகவும் முக்கியம். நீண்ட கூந்தலை பெற விரும்புவோர் தேங்காய் எண்ணெய் உடன் நாங்கள் சொல்லும் ஒரு வைட்டமினையும் கலந்து தடவினால் 10 நாட்களில் நல்ல பலன்களைப் பெறலாம்.
ஒவ்வொரு பெண்ணும் தனது தலைமுடி நீளமாகவும், கருப்பாகவும், அடர்த்தியாகவும் இருக்க வேண்டும் என்று ஆசைப்படுவார்கள். அதற்காக ஆயிரக்கணக்கில் செலவழித்து மார்க்கெட்டில் விற்கப்படும் கூந்தல் பராமரிப்பு சாதனங்களை வாங்குவதோடு, ஏராளமான வீட்டுவைத்தியங்களையும் பின்பற்றுவார்கள்.

ஆனால் என்ன தான் பல்வேறு வகையான முயற்சிகளை மேற்கொண்டாலும் பெரும்பாலான தருணங்களில் ரிசல்ட் ஜீரோவாக அமைவது உண்டு. சில சமயங்களில் கண்மூடித்தனமாக நம்பப்படும் சில வீட்டுவைத்தியங்கள் அல்லது ரசாயனம் கலந்த ஹேர் கேர் புரோடக்ட்ஸ் முடி உதிர்வு, பொடுகு, நிற மாற்றம், அரிப்பு போன்ற பிரச்சனைகளை உருவாக்கக்கூடும்.
எனவே அடர்த்தியான,கருமையான, நீளமான கூந்தலை பெற விரும்பினால் அதற்கு ஊட்டச்சத்து மிகவும் அவசியம். கூந்தல் ஆரோக்கியத்தை பராமரிக்க ஒமேகா-3 கொழுப்பு அமிலங்கள், வைட்டமின்கள் மற்றும் தாதுக்கள் நிறைந்த பொருட்களை உங்கள் உணவில் சேர்த்துக்கொள்ள வேண்டும். இதனுடன், உங்கள் தலைமுடியையும் கவனித்துக் கொள்ள வேண்டும். தேங்காய் எண்ணெய் மற்றும் வைட்டமின் ஈ காப்ஸ்யூல்களின் உதவியுடன் முடியை நீளமாகவும் அடர்த்தியாகவும் மாற்ற முடியும்.
முடிக்கு வைட்டமின் ஈ:

வைட்டமின் ஈ முடிக்கு மிகவும் நன்மை பயக்கும்.இதற்கு சோயாபீன் எண்ணெய், கடுகு, பாதாம், வேர்க்கடலை, வேர்க்கடலை வெண்ணெய், பீட்ரூட், கீரை, பூசணி மற்றும் சிவப்பு கேப்சிகம் ஆகியவற்றை உங்கள் உணவில் சேர்க்கலாம். இவை அனைத்திலும் ஆன்டிஆக்ஸிடன்ட்கள் நிறைந்துள்ளன, அவை முடி செல்கள் சேதமடைவதைத் தடுக்க உதவுகின்றன மற்றும் வளர்ச்சியை அதிகரிக்கின்றன.
வைட்டமின் ஈ + தேங்காய் எண்ணெய் நன்மைகள்:
உணவுடன், தேங்காய் எண்ணெய் மற்றும் வைட்டமின் ஈ காப்ஸ்யூல்களையும் கூந்தல் பராமரிப்புக்கு பயன்படுத்த வேண்டும்.
- தேங்காய் எண்ணெயை ஒரு பாத்திரத்தில் எடுத்து சிறிது வெதுவெதுப்பாகும் வரை சூடேற்றவும்.
- இப்போது வைட்டமின் ஈ கேப்ஸ்யூலை உடைத்து, இந்த எண்ணெயில் சேர்த்து, இரண்டையும் நன்கு கலக்கவும்.
- இந்த எண்ணெயை உங்கள் உச்சந்தலையில் இருந்து முடியின் முனை வரை நன்கு தடவி மெதுவாக மசாஜ் செய்யவும். இந்த எண்ணெயைத் தடவி 1 மணி நேரம் அப்படியே வைக்கவும்.
- அதன் பிறகு, லேசான ஷாம்பு கொண்டு தலைமுடியைக் கழுவி சுத்தம் செய்யவும்.
இதனைத் தொடர்ந்து செய்து வந்தால் அடர்த்தியான, நீளமான, கருமையான கூந்தலை விரைவிலேயே பெற முடியும் என நிபுணர்கள் பரிந்துரைக்கின்றனர்.
imageSource: Freepik