Fri Sep 11, 2026 | 10:47 PM IST

Knee Pain: தீராத மூட்டு வலியால் அவதியா? உடனே நிவாரணம் பெற சூப்பர் வீட்டு வைத்தியம்!

How do you use camphor and mustard oil: கடுகு எண்ணெய் மற்றும் கற்பூரத்தின் கலவையானது பல பிரச்சனைகளில் இருந்து நம்மை பாதுகாக்கும். ஏனென்றால், கடுகு எண்ணெயில் ஏராளமான ஆற்றல், கொழுப்பு அமிலங்கள், பாக்டீரியா எதிர்ப்பு, பூஞ்சை எதிர்ப்பு, அழற்சி எதிர்ப்பு பண்புகள் உள்ளது.

அதே போல கற்பூரத்தில், ஏராளமான ஆன்டி-பாக்டீரியல், பூஞ்சை எதிர்ப்பு, அழற்சி எதிர்ப்பு, ஆக்ஸிஜனேற்ற போன்ற பண்புகள் உள்ளன, இது பல சிக்கல்களைத் தடுக்கும். இந்நிலையில், இவை இரண்டையும் ஒன்றாக சேர்த்து பயன்படுத்தினால், பல ஆரோக்கிய நன்மைகளை பெறலாம். கடுகு எண்ணெய் மற்றும் பச்சை கற்பூரத்தை ஒன்றாக சேர்த்து சருமத்தில் தடவினால் என்னென்ன ஆரோக்கிய நன்மைகள் கிடைக்கும் என்பதை இந்த தொகுப்பில் பார்க்கலாம்.

இந்த பதிவும் உதவலாம் : Sore Throat Remedies: தீராத தொண்டை வழியா? உடனே நிவாரணம் பெற இதை ட்ரை பண்ணுங்க!

பல தோல் பிரச்சனைகள் நீங்கும்

கடுகு எண்ணெயில் பச்சை கற்பூரம் கலந்து சருமத்தில் தடவி வந்தால், பருக்கள் வராமல் இருப்பது மட்டுமின்றி, சரும சுருக்கங்களையும் போக்கும். இதுமட்டுமின்றி சிரங்கு, அரிப்பு, புழு போன்ற பிரச்சனைகளை நீக்கி முகத்திற்கு குளிர்ச்சியைத் தரும்.

கீல்வாதத்தில் இருந்து நிவாரணம்

மூட்டுவலியால் பாதிக்கப்பட்டவர்கள் கடுகு எண்ணெய் மற்றும் கற்பூரத்தை கலந்து மசாஜ் செய்யலாம். இவ்வாறு செய்வதால் மூட்டுவலியால் ஏற்படும் வலி மற்றும் வீக்கத்தில் இருந்து நிவாரணம் கிடைக்கும். கடுகு எண்ணெய் மற்றும் கற்பூரம் ஆகியவை நாள்பட்ட மூட்டுவலியைக் குணப்படுத்தவும் பயனுள்ளதாக இருக்கும்.

இந்த பதிவும் உதவலாம் : Home Remedies For Blocked Nose:மூக்கடைப்பா?… இந்த எளிய வீட்டு வைத்தியங்கள பாலோப் பண்ணுங்க!

முதுகு வலி நீங்கும்

குளிர்காலத்தில் ஒரே இடத்தில் அமர்வதால் முதுகு வலி ஏற்படுவதையோ அல்லது அவர்களின் முதுகு விறைப்பாக இருப்பதையோ நீங்கள் அடிக்கடி பார்த்திருப்பீர்கள். இந்நிலையில், இவர்கள் கடுகு எண்ணெயில் கற்பூரத்தை கலந்து பாதிக்கப்பட்ட இடத்தில் தடவலாம். இப்படிச் செய்வதால் முதுகுவலி நீங்குவது மட்டுமின்றி விறைப்புத்தன்மையும் நீங்கும்.

இதய பிரச்சனைகள் குறையும்

கடுகு எண்ணெய் மற்றும் கற்பூரம் ஆரோக்கியமான இதய ஆரோக்கியத்தை பராமரிக்க மிகவும் பயனுள்ளதாக இருக்கும். கடுகு எண்ணெய் மற்றும் கற்பூரம் கலந்த கலவையை கை, கால்களில் தடவி நன்றாக மசாஜ் செய்தால், இதய ஆரோக்கியம் பலப்படும்.

இந்த பதிவும் உதவலாம் : Immunity Booster Tea: பெண்களே! குளிர்காலத்தில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க இந்த கஷாயத்தை குடியுங்க!

முடி பிரச்சினைக்கு நல்லது

உங்கள் தலைமுடி நீளமாக வளர அல்லது முடி உதிர்வதை நிறுத்த விரும்பினால், கற்பூரத்துடன் கடுகு எண்ணெய் கலந்து நன்றாக மசாஜ் செய்யவும். இவ்வாறு செய்வதன் மூலம் முடியின் பிரச்சனை நீங்குவது மட்டுமின்றி உதிர்வதும் நின்று விடும்.

பார்வையை அதிகரிக்கும்

கடுகு எண்ணெய் மற்றும் கற்பூரம் ஆகியவை கண் பிரச்சனைகளை நீக்கவும் பயனுள்ளதாக இருக்கும். இரவில் உறங்குவதற்கு முன், கடுகு எண்ணெய் மற்றும் கற்பூரம் கலந்த கலவையை உங்கள் பாதங்களில் மசாஜ் செய்யுங்கள். இவ்வாறு செய்வதால் கண்களின் பலவீனம் நீங்குவது மட்டுமின்றி கண்பார்வை அதிகரிக்கும்.

ஆரோக்கியமான பற்கள்

கடுகு எண்ணெய் மற்றும் கற்பூரம் பல் பிரச்சனைகளை நீக்க மிகவும் பயனுள்ளதாக இருக்கும். இந்நிலையில், கடுகு எண்ணெய் மற்றும் கற்பூரத்தின் கலவையை தலைமுடியில் தடவி சிறிது நேரம் அப்படியே விடவு. அதன் பிறகு, வெற்று நீரில் நன்கு கழுவவும்.

இந்த பதிவும் உதவலாம் : Back Pain: தீராத முதுகு வலியால் அவதியா? உடனடியாக நிவாரணம் பெற இந்த ஒரு சமையல் பொருள் போதும்!

கடுகு எண்ணெய் மற்றும் கற்பூரத்தை எப்படி பயன்படுத்துவது?

கடுகு எண்ணெயில் பச்சை கற்பூரத்தை கலந்து பாதிக்கப்பட்ட இடத்தில் தடவ வேண்டும். இல்லையெனில், கடுகு எண்ணையை சற்று சூடாக்கி, அதில் கற்பூரத்தை சேர்த்து தோலில் தடவவும்.

Pic Courtesy: Freepik

Read Next

Immunity Booster Tea: பெண்களே! குளிர்காலத்தில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க இந்த கஷாயத்தை குடியுங்க!

Disclaimer

தகவலின் துல்லியம், நம்பகத்தன்மை, சரியான நேரத்தில் வழங்குதல் மற்றும் உண்மைத்தன்மையை உறுதி செய்ய அனைத்து சாத்தியமான நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளது. இருப்பினும், Onlymyhealth.com இதற்கு எந்தப் பொறுப்பையும் ஏற்காது. இந்த வலைதளத்தில் வழங்கப்படும் எந்தவொரு தகவலையும் பயன்படுத்துவது பார்வையாளர்களின் விருப்பத்திற்கு ஏற்ப மட்டுமே. ஏதேனும் மருத்துவத் தேவைகள்/தொடர்ச்சியான உடல்நலப் பிரச்சினைகள் ஏற்பட்டால், மேலே குறிப்பிடப்பட்டுள்ள வலைத்தளத்தில் எங்கள் குழு அல்லது மூன்றாம் தரப்பினரால் பதில்கள்/கருத்துகள் வடிவில் வழங்கப்படும் எந்தவொரு ஆலோசனை/குறிப்புகளையும் பயன்படுத்துவதற்கு முன்பாக, ஒரு தகுதிவாய்ந்த மருத்துவ பயிற்சியாளரை அணுகுமாறு நாங்கள் உங்களுக்கு அறிவுறுத்துகிறோம்.

Devaki Jeganathan

Devaki Jeganathan

Senior Sub Editor

நான் தேவகி ஜெகநாதன், டிஜிட்டல் மீடியாவில் 5 ஆண்டுகளுக்கும் மேலாக பணியாற்றி வருகிறேன். கல்வி, வேலைவாய்ப்பு, லைஃப்ஸ்டைல் மற்றும் ஜோதிடம் மீது அதீத ஆர்வம் கொண்டவர். தற்போது, குழந்தை நலன், வீட்டு வைத்தியம், அழகு குறிப்பு, உடற்பயிற்சி மற்றும் உணவு தொடர்பான தலைப்புகளில் கட்டுரைகளை எழுதி வருகிறேன். மக்களுக்கு தேவையான மற்றும் உண்மையான தகவல்களை வழங்குவதன் மூலம் அவர்களை விழிப்புணர்வுடன் வைத்திருப்பதே எனது நோக்கம். எனக்கு பயணம் செய்வதும், புகைப்படம் எடுப்பதும் பிடிக்கும்.

Read More..

How we keep this article up to date:

We work with experts and keep a close eye on the latest in health and wellness. Whenever there is a new research or helpful information, we update our articles with accurate and useful advice.


    Medically reviewed content
    200+ medical reviewers in network
    17 Years of Trusted Health Content
    Medically reviewed content
    200+ medical reviewers in network
    17 Years of Trusted Health Content
    Medically reviewed content
    200+ medical reviewers in network
    17 Years of Trusted Health Content