சம்மரில் வயிற்று வலியால் அவதியா? உடனே விடுபட நீங்க செய்ய வேண்டியவை இதோ

Tips to avoid stomach issues in the summer: கோடைக்காலத்தில் பலரும் வயிறு வலி தொடர்பான பிரச்சனைகளைச் சந்திக்கின்றனர். மேலும் அஜீரணம், தொற்று போன்றவை ஏற்படலாம். கோடையில் வயிற்று வலியைக் குறைப்பதற்கான சில உதவிக் குறிப்புகளைக் காணலாம்.
  • SHARE
  • FOLLOW
சம்மரில் வயிற்று வலியால் அவதியா? உடனே விடுபட நீங்க செய்ய வேண்டியவை இதோ


How to stop stomach pain due to heat: கோடைக்காலத்தில் பலரும் பல்வேறு உடல்நல பிரச்சனைகளைச் சந்திக்கின்றனர். இதில் வயிற்று வலி மிகவும் பொதுவானதாகும். பொதுவாக வெப்பமான வானிலை காரணமாக செரிமான பிரச்சனைகள் இன்னும் சங்கடமாக உணர வைக்கலாம். அதிக வெப்பநிலையானது உடலில் நீரிழப்பு, உணவு விரைவாக கெட்டுப்போதல் மற்றும் உணவுமுறையில் ஏற்படும் மாற்றங்கள் போன்றவற்றிற்கு வழிவகுக்கலாம். இவை அனைத்துமே செரிமான அமைப்பைப் பாதிக்கலாம்.

மேலும் இந்த காலகட்டத்தில், மக்கள் அதிக குளிர் பானங்கள், தெரு உணவகள் போன்றவற்றை அதிகம் உட்கொள்வார்கள். ஆனால், இவை உடல் ஆரோக்கியத்திற்கு பாதிப்பை ஏற்படுத்துவதாக இருக்கலாம். இதன் விளைவாக உணவு விஷம், அஜீரணம் அல்லது தொற்றுகள் போன்றவை அடிக்கடி ஏற்பட வாய்ப்புள்ளது. எனினும் உணவு, நீரேற்றம் மற்றும் சுகாதாரத்தில் சில மாற்றங்களைக் கையாள்வதன் மூலம் கோடை தொடர்பான வயிற்றுப் பிரச்சனைகள் பெரும்பாலும் தடுக்கப்படலாம். இதில் கோடையில் வயிற்று வலியைக் குறைக்க உதவும் வழிகளைக் காணலாம்.

இந்த பதிவும் உதவலாம்: வயிற்றுப் பிரச்சனையால் அவதியா? விரைவில் குணமடைய இதை ஃபாலோ பண்ணுங்க போதும்

கோடைக்காலத்தில் வயிற்று வலியைக் குறைக்க உதவும் குறிப்புகள்

லேசான மற்றும் சமைத்த உணவுகளை உண்ணுவது

கோடையில் வயிற்றுக்கு எளிதான சிறிய, இலகுவான உணவுகளைத் தேர்வு செய்ய வேண்டும். வேகவைத்த அரிசி, லேசான பருப்பு வகைகள், கிச்சடி அல்லது லேசாக சமைத்த சப்ஜிகள் கோடைக்காலத்தில் சிறந்த உணவு வகையாக மாறுகிறது. இவை சத்தானதாகவும், செரிமானம் எளிதானவையாகவும் மற்றும் அசௌகரியத்தை ஏற்படுத்தும் வாய்ப்பைக் குறைக்கவும் உதவுகிறது.

நன்கு நீரேற்றமாக இருப்பது

நாள் முழுவதும் பாதுகாப்பான, சுத்தமான தண்ணீரை நிறைய குடிக்க வேண்டும். இது உடலுக்கு நீரேற்றத்தை அளிப்பதுடன், செரிமான அமைப்பை திறமையாக செயல்படவும் உதவுகிறது. இது வீக்கம், மலச்சிக்கல் மற்றும் தசைப்பிடிப்பைத் தடுக்க உதவுகிறது. எனவே கோடைக்காலத்தில் 2–3 லிட்டர் குடிப்பதை இலக்காக வைத்துக் கொள்ள வேண்டும். குறிப்பாக, அதிகமாக வியர்வை வந்தால் நீர் உட்கொள்ளலை அதிகரிக்க வேண்டும்.

image

what-happens-if-you-drink-too-little-water-in-winter-main-1748185501304.jpg

பழங்கள் மற்றும் காய்கறிகளை நன்கு கழுவுவது

பச்சை உணவுகளை சுத்தமான தண்ணீர் அல்லது லேசான பேக்கிங் சோடா கரைசலில் சரியாகக் கழுவ வேண்டும். இவ்வாறு செய்வது பாக்டீரியா மற்றும் பூச்சிக்கொல்லிகளை அகற்ற உதவுகிறது. இதன் மூலத்தைப் பற்றி, தெரியாவிட்டால் பழங்களை உரிக்க வேண்டும்.

காலை உணவை சாப்பிடுவது

நாளை லேசான ஆனால் ஊட்டமளிக்கும் உணவோடு தொடங்க வேண்டும். காலை உணவைத் தவிர்ப்பதால் அமிலத்தன்மை ஏற்பட வாய்ப்புள்ளது. இது பிற்பகுதியில் அதிகம் சாப்பிடுவதற்கு வழிவகுக்கலாம். இதனால் வயிற்று வலி ஏற்படும் அபாயம் அதிகரிக்கலாம்.

கவனத்துடன் சாப்பிடுவதைப் பயிற்சி செய்வது

உணவு உட்கொள்ளும் போது மெதுவாக சாப்பிடுவது மற்றும் நன்கு மென்று சாப்பிடுவதை வழக்கமாக்கிக் கொள்ள வேண்டும். மேலும், சாப்பிடும் போது கவனச்சிதறல்களைத் தவிர்க்க வேண்டும். இது செரிமானத்தை மேம்படுத்துவதுடன், அஜீரணத்திற்கான வாய்ப்புகளைக் குறைக்க உதவுகிறது. குறிப்பாக வெப்பத்தின் போது, செரிமான செயல்முறை ஏற்கனவே சற்று மெதுவாக இருக்கும் போது இந்த முறையைக் கையாள வேண்டும்.

குளிர்ந்த மூலிகைகள், மசாலாப் பொருள்களைப் பயன்படுத்துவது

புதினா, கொத்தமல்லி, வெந்தயம் மற்றும் சீரகம் போன்ற குளிர்ந்த மூலிகை, மசாலா பொருள்களை ஒருவர் தங்களது அன்றாட உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும்.ஏனெனில், இவை வயிற்றை ஆற்றவும், வீக்கத்தைக் குறைக்கவும், உடலை இயற்கையாகவே குளிர்விக்கவும் உதவுகின்றன.

இந்த பதிவும் உதவலாம்: வாயு தொல்லை இனி இல்லை.! வீட்டில் இருந்தே தட்டிவிடலாம்..

மீதமுள்ளவற்றை உடனடியாக குளிர்சாதன பெட்டியில் வைப்பது

சமைத்த உணவை அறை வெப்பநிலையில் அதிக நேரம் வைத்திருக்க வேண்டும். ஏனெனில், வெப்பத்தில் பாக்டீரியாக்கள் வேகமாகப் பெருகலாம். எனவே மீதமுள்ளவற்றை காற்று புகாத கொள்கலன்களில் சேமித்து வைத்து, 24 மணி நேரத்திற்குள் உட்கொள்ளலாம்.

சர்க்கரை பானங்களைத் தவிர்ப்பது

பேக்கேஜ் செய்யப்பட்ட பானங்கள், சோடாக்கள் போன்ற கடைகளில் விற்பனை செய்யப்படும் பானங்களைத் தவிர்க்க வேண்டும். மாற்றாக, வீட்டில் தயாரிக்கப்பட்ட எலுமிச்சை நீர், தேங்காய் நீர் அல்லது மூலிகை தேநீர் வகைகளை எடுத்துக் கொள்ளலாம். இவை அதிக நீரேற்றத்தை வழங்குவதாகவும், வாயு மற்றும் சர்க்கரை அதிகமாக இல்லாமல் குடல் ஆரோக்கியத்தை பாதுகாப்பதாகவும் அமைகிறது.

கோடைக்காலத்தில், இந்த குறிப்புகளைப் பின்பற்றுவதன் மூலம் வெப்பத்தால் ஏற்படும் வயிற்று வலி குறைக்கப்பட்டு கட்டுப்படுத்தப்படுவதை உறுதிசெய்யலாம்.

இந்த பதிவும் உதவலாம்: Stomach Cleaning Tips: இரவில் இந்த உணவு சாப்பிட்டால் அடுத்தநாள் காலை வயிறு அப்படியே சுத்தமாகும்!

Image Source: Freepik

Read Next

வெறும் இரண்டு பொருள்கள் போதும்.. நிற்காமல் வரும் இருமலை நிறுத்த வீட்டிலேயே மருந்து தயாரிக்கலாம்

Disclaimer