Expert

Winter Stomach Problems: இந்த குளிருல வர வயிற்று வலி நீங்க இந்த ஆயுர்வேத வைத்தியங்களை ஃபாலோப் பண்ணுங்க.

  • SHARE
  • FOLLOW
Winter Stomach Problems: இந்த குளிருல வர வயிற்று வலி நீங்க இந்த ஆயுர்வேத வைத்தியங்களை ஃபாலோப் பண்ணுங்க.

குளிர்காலத்தில் சாதாரணமாகவே பலருக்கும் சளி, காய்ச்சல் போன்றவை ஏற்படலாம். இது தவிர, குளிர் அலைக்கு வயிற்று வலி, வயிற்று பிடிப்புகள் மற்றும் தளர்வான மலம் போன்றவை ஏற்படலாம். வயிற்று வலியை நீக்க இயற்கையான முறையாக ஆயுர்வேத சிகிச்சையினைத் தேர்ந்தெடுக்கலாம்.

இந்த பதிவும் உதவலாம்: Herbal Bath Powder: சருமத்தை மென்மையாக்க உதவும் மூலிகை குளியல் பொடியை வீட்டிலேயே இப்படி தயாரிக்கலாம்

நிபுணர் கூறும் கருத்து

சிர்சாவின் ஆயுர்வேதாச்சார்யா மருத்துவர் ஷ்ரே ஷர்மா அவர்கள் கூறுகையில், “குளிர்காலத்தில் உடலில் பல்வேறு பிரச்சனைகள் ஏற்படலாம். இதில் வயிற்று வலியும் அடங்கும். குறிப்பாக, குளிர்காலத்தில் நாம் எடுத்துக் கொள்ளும் உணவுப்பழக்கம் சரியில்லாத போது, வயிறு தொடர்பான பிரச்சனைகளைச் சந்திக்க நேரிடும்.

இது தவிர, நோயெதிர்ப்புச் சக்தி குறைவாக இருப்பதால், இந்த பிரச்சனை மேலும் அதிகரிக்கலாம். எனவே இந்த காலகட்டத்தில் குளிர்ச்சியான தன்மை கொண்ட பொருள்கள் சாப்பிடுவதைத் தவிர்க்க வேண்டும். அதே சமயம், சூடான தன்மை கொண்ட பொருள்களை உட்கொள்ளலாம்” என்று கூறியுள்ளார்.

ஆயுர்வேதத்தில் வயிற்று வலி நீங்க உதவும் வழிகள்

நிபுணர் கூற்றுப்படி, ஆயுர்வேதத்தில் வயிற்று வலி நீங்க சில ஆயுர்வேத முறைகளைக் கையாளலாம்.

வெதுவெதுப்பான நீர்

குளிர்ந்த காலநிலையில் வயிற்று வலி பிரச்சனையை அனுபவித்தால், வெதுவெதுப்பான நீரை அருந்தலாம். இது உங்களுக்கு மிகுந்த நிம்மதியைத் தரலாம். வெதுவெதுப்பான நீரை பை அல்லது பாட்டிலில் சேர்த்து அவ்வப்போது அருந்தலாம். இதன் மூலம் நிம்மதியாக உணர முடியும்.

இந்த பதிவும் உதவலாம்: இந்த குளிருல தாங்க முடியாத மூட்டு வலியா? இந்த ஒரு ஆயுர்வேத வைத்தியம் போதும்.

செலரி மற்றும் பெருங்காயம்

குளிர்காலத்தில் ஏற்படும் வயிற்றுப்பிடிப்பு மற்றும் வலியிலிருந்து நிவாரணம் பெற, பெருங்காயம் மற்றும் செலரியை உட்கொள்ளலாம். இதில் சிறிது பெருங்காயத்துடன், அரை தேக்கரண்டி செலரி சேர்த்துக் கொள்ளவும். அதனுடன் அரை ஸ்பூன் கருப்பு உப்பு சேர்த்து தூள் தயார் செய்யலாம். இந்த பொடியை வெதுவெதுப்பான நீருடன் கலந்து எடுத்துக் கொள்வது வயிற்று வலியிலிருந்து நிவாரனம் தருகிறது. இந்த பொடியை சேமித்து வைத்து தொடர்ந்து சாப்பிடுவது செரிமானத்தை மேம்படுத்த உதவுகிறது

துளசி மற்றும் கருமிளகு

குளிர்ந்த உடல் வெப்பநிலையை சமநிலைப்படுத்த துளசி மற்றும் கருப்பு மிளகு சேர்த்து தயாரிக்கப்பட்ட கஷாயத்தை எடுத்துக் கொள்ளலாம். இதற்கு துளசி, கருமிளகு, இஞ்சி, மஞ்சள் மற்றும் கிராம்பு போன்றவற்றைத் தண்ணீரில் சேர்த்துக் கொதிக்க வைக்க வேண்டும். இப்போது இதை வடிகட்டி குடித்து வர, வயிற்று வலி நீங்குவதுடன், உடல் வெப்பநிலையை சீராக வைக்கலாம்.

குங்குமப்பூ மற்றும் ஷிலாஜித்

குளிர்காலத்தில் வயிற்று வலியிலிருந்து நிவாரணம் பெற குங்குமப்பூ மற்றூம் ஷிலாஜித் எடுத்துக் கொள்ளலாம். இதற்கு பாத்திரம் ஒன்றில் 4 முதல் 5 குங்குமப்பூ இழைகள் மற்றும் 1 ஸ்பூன் ஷிலாஜித் சேர்த்து அதில் 1 கிளாஸ் தண்ணீர் ஊற்றி நன்கு கொதிக்க வைக்க வேண்டும். பிறகு இதை வடிகட்டி, அதில் 1 ஸ்பூன் தேன் கலந்து குடிக்கலாம். இந்த பானத்தை ஒரு நாளைக்கு 2 முதல் 3 முறை குடித்து வர வயிற்றுவலியிலிருந்து நிவாரணம் பெறலாம்.

இந்த பதிவும் உதவலாம்: Ashwagandha For Stress: அஸ்வகந்தாவை இப்படி சாப்பிடுங்க. ஸ்ட்ரெஸ் எல்லாம் பறந்து போய்டும்.

கொத்தமல்லி மற்றும் வெந்தய விதைகள்

சமையலறையில் வைக்கப்படும் சில மசாலாப் பொருள்கள் வயிற்று வலியை குணமாக்க உதவுகிறது. இதற்கு வறுத்த கொத்தமல்லி விதைகளை எடுத்துக் கொண்டு, அதில் சீரகம் மற்றும் வெந்தயத்தை கலந்து அரைக்கவும். இதை 1 கப் தண்ணீரில் கலந்து கொதிக்க வைக்க வேண்டும். பின் இதில் சிறிது சர்க்கரை சேர்த்துக் குடிக்கலாம். இந்த மசாலா டீ எடுத்துக் கொள்வது குளிர்கால பிரச்சனைகளிலிருந்து விடுபட வைக்கிறது.

தேன் உட்கொள்ளுதல்

தேனில் பாக்டீரியா மற்றும் வைரஸ்களை அழிக்க உதவும் குணங்கள் நிறைந்துள்ளன. இதற்கு முதல் 1 தேக்கரண்டி எலுமிச்சைச் சாறு எடுத்துக் கொண்டு, அதில் 2 ஸ்பூன் தேன் சேர்த்துக் கொள்ளலாம். இந்த கலவையை உட்கொள்வதன் மூலம் வயிற்றில் ஏற்படும் பிரச்சனைகளைத் தவிர்க்கலாம்.

வெந்தயம் மற்றும் வெந்நீர்

குளிர்காலத்தில் வயிற்று வலி அல்லது அமைதியின்மை இருந்தால், வெந்தய விதைகள் மிகவும் பயனுள்ளதாக இருக்கும். இதை உட்கொள்ள முதல் அரை ஸ்பூன் வெந்தய விதைகளை வறுக்கவும். இப்போது 1/4 அளவு உப்பு சேர்த்து, வெந்நீரில் உட்கொள்ளலாம். ஆயுர்வேதாச்சார்யா கூறுகையில் வெந்தயத்தில் வெப்பமயமாதல் தன்மை இருப்பதால், வயிற்றில் ஏற்படும் சளி பிரச்சனையில் இருந்து நிவாரணம் பெற முடியும்.

வயிறு குளிர்ச்சியாக இருக்கும் போது சூடான பொருள்களை உட்கொள்ளலாம். இது வயிற்றுப் பிரச்சனைகளைக் குணப்படுத்த உதவுகிறது. இது தவிர, குளிர்ச்சியன விளைவைக் கொண்ட பொருள்கள் எடுத்துக் கொள்வதைத் தவிர்க்க வேண்டும். இது கூடுதல் பிரச்சனையைத் தரலாம். அதே சமயம், இந்த பிரச்சனை அதிகமாக இருப்பின், சரியான நேரத்தில் மருத்துவரை அணுகலாம்.

இந்த பதிவும் உதவலாம்: Black Raisin Benefits: சரும பிரச்சனை முதல் மலச்சிக்கல் பிரச்சனை வரை. பெண்களுக்கு இது ஒன்னு போதும்

Image Source: Freepik

Read Next

Dust Allergy Remedies: டஸ்ட் அலர்ஜியை எதிர்த்து போராட உதவும் எளிய வீட்டு குறிப்புகள்!

Disclaimer