$
Ways To Eat Ashwagandha For Stress Relief: ஆயுர்வேதத்தில் பல நோய்களுக்கு சிகிச்சையளிக்க அஸ்வகந்தா பயன்படுகிறது. இதனை எடுத்துக் கொள்வது கருவுறுதல் மற்றும் பாலியல் ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது. மேலும், இது உடல் தசைகளை வலுப்படுத்துவதுடன், மன ஆரோக்கியத்திற்கும் உதவுகிறது. மன அழுத்தம் மற்றும் பதட்டத்தில் இருந்து விடுபட அஸ்வகந்தாவை எடுத்துக் கொள்ளலாம். இது நல்ல தூக்கத்திற்கு வழிவகுக்கவும், மன அழுத்தத்தை நீக்கவும் உதவுகிறது. எனவே, பதட்டம் அல்லது மன அழுத்தம் உள்ளவர்கள் அஸ்வகந்தாவை உணவில் சேர்த்துக் கொள்ளலாம்.
மன அழுத்தத்தைக் குறைப்பதில் அஸ்வகந்தாவின் பங்கு
மன அழுத்தம் மற்றும் பதட்டம் போன்ற மனநலம் தொடர்பான பிரச்சனைகளிலிருந்து விடுபட அஸ்வகந்த பெரிதும் உதவுகிறது. இது உடலில் மன அழுத்தத்தை அதிகரிக்கச் செய்யும் கார்டிசோல் என்ற ஹார்மோனின் அளவைக் குறைக்கிறது. கார்டிசோல் அதிகரிக்கும் போது, மன அழுத்தம் மற்றும் பதட்டம் அதிகமாகலாம். இந்த சூழ்நிலையில் அஸ்வகந்தாவை உட்கொள்வது நன்மை தரும். இது மனதிற்கு அமைதி தருவதுடன், மனச்சோர்வை நீக்குகிறது.
இந்த பதிவும் உதவலாம்: Amla With Honey Benefits: வெறும் வயிற்றில் நெல்லிக்காய் உடன் தேன் சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள் இது தான்
மன அழுத்தத்தைப் போக்க அஸ்வகந்தா சாப்பிடும் முறை
மன அழுத்தம் மற்றும் பதட்டம் உள்ளவர்கள் அஸ்வகந்தாவை கீழ்க்காணும் வழிமுறைகளில் எடுத்துக் கொள்ளலாம்.
தேனுடன் கலந்து
அஸ்வகந்தா மற்றும் தேன் கலந்த கலவை மன அழுத்தத்திலிருந்து விடுபட உதவுகிறது. இதில் அஸ்வகந்தாவை பொடி அல்லது வேராக எடுத்துக் கொள்ளலாம். இதை ஒரு கிளாஸ் தண்ணீரில் கொதிக்க வைத்து பின் வடிகட்டி, அதில் தேன் கலந்து குடிக்கலாம். தினந்தோறும் இதை எடுத்துக் கொள்வது மன அழுத்தத்திலிருந்து விடுபட உதவுகிறது.

நீரில் கொதிக்க வைத்த அஸ்வகந்தா
மன அழுத்தத்தை நீக்க அஸ்வகந்தாவை தண்ணீரில் கொதிக்க வைத்து எடுத்துக் கொள்ளலாம். இதற்கு அரை ஸ்பூன் அளவு அஸ்வகந்தா பொடியை எடுத்துக் கொண்டு, அதில் 2 கப் தண்ணீர் சேர்த்து கொதிக்க வைக்க வேண்டும். இதில் கொதிக்கும் நீர் பாதியாக குறையும் வரை வைத்து, பின் வடிகட்டி எடுத்துக் கொள்ளலாம். இவ்வாறு நன்கு தண்ணீரில் காய்ச்சி அஸ்வகந்தாவை குடிப்பது மன அழுத்தம் மற்றும் பதட்டத்தை நீக்கும்.
இந்த பதிவும் உதவலாம்: Herbal Bath Powder: சருமத்தை மென்மையாக்க உதவும் மூலிகை குளியல் பொடியை வீட்டிலேயே இப்படி தயாரிக்கலாம்
அஸ்வகந்தா மற்றும் ஷதாவரி
மன அழுத்தத்தில் உள்ளவர்கள், அஸ்வகந்தா மற்றும் ஷதாவரியை ஒன்றாக உட்கொள்ளலாம். இந்த இரண்டு கலவையையும் தண்ணீரில் கலந்து கொதிக்க வைக்க வேண்டும். பின் இதை வடிகட்டி குடிக்கலாம். அஸ்வகந்தா மற்றும் ஷதாவரியை இரவில் ஒன்றாக உட்கொள்வது மன அழுத்தத்திலிருந்து நிவாரணம் தருகிறது.
பாலுடன் அஸ்வகந்தா
இவை இரண்டையும் ஒன்றாக சேர்த்து எடுத்துக் கொள்வது மன அழுத்தத்தை நீக்க உதவுகிறது. இதற்கு ஒரு கிளாஸ் பாலைக் காய்ச்சி, அதில் அரை தேக்கரண்டி அளவு அஸ்வகந்தாவைச் சேர்த்து உட்கொள்ளலாம். இந்த இரண்டின் கலவை, மன அழுத்தம் மற்றும் பதட்டத்தில் இருந்து விடுவிக்கிறது.

இது போன்ற வழிகளில் அஸ்வகந்தாவை எடுத்துக் கொள்வது உடல் ஆரோக்கியத்திற்கு நன்மை தருவதுடன், மன ஆரோக்கியத்தையும் பாதுகாப்பதாக அமைகிறது.
இந்த பதிவும் உதவலாம்: இந்த குளிருல தாங்க முடியாத மூட்டு வலியா? இந்த ஒரு ஆயுர்வேத வைத்தியம் போதும்.
Image Source: Freepik