Stress and Anxiety: காலநிலையும் வாழும் முறையும் முற்றிலும் வேகமாக மாறிவருகிறது. டிஜிட்டல் யுகத்தில் மக்களின் வாழ்க்கை முறை என்பதே முற்றிலும் மாறிவிட்டது. இந்த காலக்கட்டத்தில் மக்கள் ஏதாவது ஒன்றை புதிதாக கற்றுக் கொள்ள வேண்டிய தேவை தொடர்ந்து ஏற்படுகிறது. அதேபோல் மக்களின் வேலை முறை என்பதும் முற்றிலும் மாறிவிட்டது.
அது, அலுவலக வேலையாக இருந்தாலும் சரி, வீட்டு வேலையாக இருந்தாலும் சரி. அனைத்தும் அழுப்பு ஏற்படாமல் அமர்ந்த இடத்திலேயே செய்யக்கூடிய பணியாக மாறிவிட்டது. உடல் செயல்பாடுகள் குறைவதால் நமது ஆரோக்கியத்திலும் நேரடி தாக்கம் ஏற்படுகிறது. இதன் விளைவு உடல் ரீதியாக மட்டுமின்றி மன ரீதியாகவும் ஏற்படுகிறது.
அதிகம் படித்தவை: Drinking Milk Before Bed: இரவில் தூங்க செல்லும் முன் ஒரு கிளாஸ் பால் குடிப்பது நல்லதா?
கவலை மற்றும் மன அழுத்தம்
கவனிக்கத்தக்க விஷயம் என்னவென்றால் கடந்த சில ஆண்டுகளாகவே மன அழுத்தம் மற்றும் பதட்டம் ஆகியவை மக்கள் மத்தியம் அதிகளவு அதிகரித்து வருகின்றன. மேலும், இது பொதுவான நோயாகவே மாறிவிட்டது. மன ரீதியாக சந்திக்கும் பிரச்சனையை பலர் பிரச்சனையாகவே கருதுவதில்லை, அதற்கு முறையான வைத்தியமும் பலர் எடுத்துக் கொள்வதில்லை. இதில் குறிப்பிடத்தக்க விஷயம் என்னவென்றால் கவலை மற்றும் மன அழுத்தம் இரண்டும் வெவ்வேறு வகையான பிரச்சனைகள் என்பதையே பலரும் அறிந்திருப்பதில்லை.
கவலை மன அழுத்தத்தை எவ்வாறு ஏற்படுத்துகிறது. மன ஆரோக்கியத்தில் எப்படி பிரச்சனை ஏற்படுகிறது. தனிப்பட்ட மற்றும் தொழில் வாழ்க்கையின் அதிகரித்து வரும் சவால்கள், சமூக அழுத்தம் மற்றும் எதிர்காலத்தில் பற்றிய சிந்தனை ஆகியவை மன ஆரோக்கியத்தில் நேரடி பிரச்சனையை ஏற்படுத்துகிறது.
முக்கிய கட்டுரைகள்
பணிகளை தொடர்ந்து ஒத்திவைத்தல்
கவலையை அதிகரிக்க ஒத்திவைத்தலும் ஒரு முக்கிய காரணம். எந்த ஒரு வேலையைத் திரும்பத் திரும்பத் தள்ளிப் போடுகிறோமோ, அதை முடிக்காதது சிந்தனையாக மாறி மன அழுத்தம் அதிகமாகிறது.
எரிச்சல் உணர்வு
மக்கள் அடிக்கடி எரிச்சல் உணர்வை மன அல்லது உடல் சோர்வு என்று தவறாக நினைக்கிறார்கள், இது கவலையின் அறிகுறியாகவும் இருக்கலாம். சிறிய விஷயங்களில் கோபம் கொள்வதும் எரிச்சல் அடைவதும் நீங்கள் மன அழுத்தத்தையும் பதட்டத்தையும் அனுபவிக்கிறீர்கள் என்பதைக் குறிக்கிறது.
அதிக சிந்தனை
அதிக சிந்தனை அதாவது அதிகம் சிந்திக்கும் பழக்கமும் கவலையை மேலும் அதிகரிக்கும். ஒவ்வொரு சூழ்நிலையையும் மீண்டும் மீண்டும் யோசிப்பவர்கள், அறியாமலேயே தங்கள் கவலையை அதிகரிக்கிறார்கள். இது எதிர்மறையான எண்ணங்களை மனதில் வர வைத்து விஷயங்களை கடினமாக்குகிறது.
தனிமை
என் இனிய தனிமையே என பலரும் தனிமையை விரும்பி அதை அனுபவிக்க ஆசைப்படுகிறார்கள். வாழ்க்கையில் தனிமை என்பது எப்போதுமே வரம் அல்ல சாபம் என்பதை கருத்தில் கொள்ள வேண்டும்.
தன்னைத் தானே தனிமைப்படுத்திக் கொள்வது, அதாவது சமூகத்திலிருந்து தன்னைப் பிரித்துக் கொள்வதும் கவலைக்கு ஒரு காரணமாக இருக்கலாம். நம் பிரச்சனைகளை நம்முள் வைத்துக்கொண்டு, மற்றவர்களிடம் பேசாமல் இருப்பதும் கவலையும் மன அழுத்தமும் அதிகரிக்கத் தூண்டுகிறது.
உடல் அறிகுறிகள்
பல நேரங்களில் கவலையின் அதீதத்தை உடல் அறிகுறிகள் மூலம் தென்படலாம், ஆனால் பலரும் அதை பொருட்படுத்துவதில்லை. அதிக வியர்வை, விரைவான இதயத் துடிப்பு, தசை வலி அல்லது வயிற்றுப் பிரச்சனைகள் ஆகியவையும் மனரீதியாக கவலையுடன் இருப்பதற்கான அறிகுறிகளாகும்.
மன அழுத்தம் மற்றும் பதட்டத்தின் ஒத்த அறிகுறிகள் என்ன?
மன அழுத்தம் என்பது அதீத கவலையாலும் ஏற்படக்கூடும். எதிர்கால முன்னேற்றம் குறித்த சிந்தனை, பொருளாதாரம் தொடர்பான சிந்தனைகளால் தான் பலர் பல மன அழுத்த பிரச்சனையை எதிர்கொள்கிறார்கள்.
எதிர்மறை சிந்தனை
பதட்டம் மற்றும் மன அழுத்தம் போன்ற அறிகுறிகளில் பிரதான ஒன்று எதிர்மறை சிந்தனை. எப்போதும் எதிர்மறை சிந்தனை என்பதும் மன அழுத்தத்தின் உச்சத்தை குறிக்கிறது. இத்தகைய சிந்தனை தோன்றும் போது உடனடியாக மருத்துவர் ஆலோசனையை பெறுவது நல்லது.
தலைவலி, சோர்வு, சுவாசிப்பதில் சிரமம்
கவலை மற்றும் மன அழுத்தம் காரணமாக, ஒரு நபருக்கு தலைவலி, சோர்வு, சுவாசிப்பதில் சிரமம், தசை வலி மற்றும் இரைப்பை குடல் பிரச்சினைகள் இருக்கலாம். ஒரு நபருக்கு மன அழுத்தம் அல்லது பதட்டம் இருக்கும்போது, ஹார்மோன் மாற்றங்கள் ஏற்படுகின்றன, இது உடல் ரீதியான பிரச்சனைகளை ஏற்படுத்தக்கூடும்.
தூக்க முறைகளில் மாற்றம்
தூங்குவதில் சிரமம் அல்லது படுத்திருக்கும் போது அமைதியின்மை தொடர்ச்சியாக இருக்கும் போது இது மன அழுத்தத்தை ஏற்படுத்தலாம். சொல்லப்போனால் இவை இரண்டுக்கும் தொடர்பு உண்டு. தூக்கமின்மையால் மன அழுத்தம் ஏற்படலாம், மன அழுத்தம் அதிகம் இருந்தால் தூக்கமின்மை ஏற்படலாம். இதற்கு முறையான ஆலோசனையை பெறுவது மிக அவசியம். தூக்கம் என்பதே உடலின் பல பிரச்சனைக்கு சிறந்த தீர்வாகும்.
இதையும் படிங்க: Turmeric coffee: காபியில் மஞ்சள் சேர்த்து குடிச்சி பாருங்க! எதிர்பார்க்காத லெவலில் வெயிட்டை குறைக்கலாம்
கவலை மற்றும் மன அழுத்தத்தை எவ்வாறு தடுப்பது?
தவறாமல் உடற்பயிற்சி செய்யுங்கள். இது தூக்க முறையை மேம்படுத்தும். உடல் ஆரோக்கியத்திற்கும் இது நல்லது.
தூங்குவதற்கு முன் மொபைல், காஃபின் அல்லது கணினியில் அதிக நேரம் செலவிட வேண்டாம். இதனால் தூங்கும் போது பிரச்சனை வரலாம்.
ஆரோக்கியமான உணவு முறையும், சரிவிகித உணவும் மிக முக்கியம். இது வைட்டமின்கள் மற்றும் தாதுக்களின் அளவை மேம்படுத்தும்.
உங்கள் மனதில் எந்த எண்ணத்தையும் கொண்டு வர வேண்டாம். எதையும் அதிகம் சிந்திக்க வேண்டாம். அவ்வப்போது மன அமைதி தரும் இடத்திற்கு சென்று வாருங்கள்.
காலையில் யோகா மற்றும் தியானம் செய்யுங்கள். இது மூளைக்கு ஆக்ஸிஜன் விநியோகத்தை மேம்படுத்துகிறது மற்றும் மன அழுத்தத்தை குறைக்க பெருமளவு உதவுகிறது.
image source: freepik