Mindfulness techniques for stress relief: இன்றைய நவீன காலகட்டத்தில் பலரும் மன அழுத்தம் தொடர்பான பல்வேறு பிரச்சனைகளைச் சந்திக்கின்றனர். குறிப்பாக, வேலை மற்றும் குடும்பத்தின் அழுத்தங்கள் முதல் சமூக தொடர்புகளைப் பேணுவதில் உள்ள சவால்கள் வரை அனைவருமே பலதரப்பட்ட மன அழுத்தம் தொடர்பான பிரச்சனைகளைச் சந்திக்கும் சூழல் ஏற்படுகிறது. இந்த இறுக்கமான காலம் அவர்களின் அன்றாட வாழ்க்கையைப் பாதிப்பது மட்டுமல்லாமல், அவர்களின் உடல் ஆரோக்கியத்தையும் பாதிக்கலாம்.
மன அழுத்தம் உடல் மற்றும் மன ஆரோக்கியத்தை மட்டும் பாதிப்பதாகக் கூறப்படுவதில்லை. ஆனால், இது வாழ்க்கைத் தரம், உற்பத்தித்திறன் போன்றவற்றையும் பாதிக்கலாம். மன அழுத்தத்தை நிர்வகிக்கப்படாவிட்டால், எரிச்சல், பதட்டம் மற்றும் மனச்சோர்வுக்கு வழிவகுக்கலாம். எனினும் இந்த தீராத மன அழுத்தத்தை சில மேலாண்மை நடவடிக்கைகளைக் கொண்டு நிர்வகிக்க முடியும். இதில் மன அழுத்தத்தை நிர்வகிக்க உதவும் சில குறிப்புகளைக் காணலாம்.
இந்த பதிவும் உதவலாம்: மன அழுத்தத்தை நொடியில் விரட்ட எசென்ஷியல் ஆயிலை இப்படி யூஸ் பண்ணுங்க
மன அழுத்தத்தை திறம்பட நிர்வகிப்பது எப்படி?
ஆழ்ந்த சுவாசம் மேற்கொள்ளுதல்
ஆழ்ந்த சுவாசம் மேற்கொள்வதன் மூலம் எதிர்மறையான எதிர்வினைகளை எதிர்த்து உடல் மற்றும் மனதை அமைதிப்படுத்த முடியும். அதன் படி, மிகவும் பயனுள்ள ஆழமான சுவாச நுட்பங்களில் ஒன்றாக 4-7-8 முறை அமைகிறது. இதில் 4 விநாடிகள் உள்ளிழுத்து, 7 விநாடிகள் வைத்திருந்து, 8 விநாடிகளுக்கு மூச்சை வெளியேற்றுவது அடங்கும். இந்த எளிய பயிற்சியின் உதவியுடன், எண்ணங்களின் கட்டுப்பாட்டை மீட்டெடுக்கவும், மன அழுத்த அளவுகள் அதிகரிக்கும் போது அமைதியாகவும் இருக்க உதவுகிறது.
உடல் செயல்பாடு மேற்கொள்வது
உடல் செயல்பாடு உடல் மற்றும் மன ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவக்கூடிய மிகவும் சக்திவாய்ந்த ஒன்றாகும். இது மன அழுத்த நிவாரணிகளில் முக்கியமானதாகக் கருதப்படுகிறது. இதற்கு யோகா, நீச்சல் மற்றும் நடைபயிற்சி போன்ற உடலை நகர்த்தும் எந்தவொரு உடற்பயிற்சியும் உடலில் என்டோர்பின்களை வெளியிட உதவுகிறது. இந்த எண்டோர்பின்கள் இயற்கையாகவே மனநிலையை அதிகரிக்கவும், மனதை தளர்வடையச் செய்யவும் உதவுகிறது. எனவே வழக்கமான உடற்பயிற்சி மேற்கொள்ளலின் மூலம் மன அழுத்தத்தை குறைக்கலாம். மேலும், இது மன ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது.
ஜர்னலிங் செய்வது
பதட்டத்தை வெளிப்படுத்துவதற்கான வழியைக் கண்டறிவதன் மூலம் மன அழுத்தத்தை விரைவில் சமாளிக்கலாம். அதன் படி, ஜர்னலிங் மற்றும் பிற எழுத்து வடிவங்களின் உதவியுடன் பதட்டத்தைச் சிறப்பாக சமாளிக்க முடியும். ஆய்வு ஒன்றில், உணர்ச்சி அடிப்படையிலான ஜர்னலிங், மன உளைச்சலைக் குறைக்க உதவுகிறது. மேலும், இது உடலின் ஒட்டுமொத்த ஆரோக்கியத்தையும் மேம்படுத்துவதாகக் கண்டறியப்பட்டுள்ளது.
இந்த பதிவும் உதவலாம்: இந்த அறிகுறிகள் இருந்தால்... மனதிற்கு ஓய்வு தேவை என்று அர்த்தம்..
மூலிகை தேநீர் அருந்துதல்
பல்வேறு வகையான மூலிகை தேநீர் வகைகள் கவலை மற்றும் தூக்கத்தை எளிதாக்க உதவுவதாகக் கூறப்படுகிறது. சில தேநீர் வகைகளைத் தயாரிப்பது மற்றும் குடிப்பது மிகவும் எளிமையானதாக இருக்கலாம். அதே சமயம், சில தேநீர் வகைகள் மூளையில் அதிக நேரடி விளைவை ஏற்படுத்தலாம். இதன் மூலம் பதட்டத்தைக் குறைக்கலாம். அதன் படி, ஆய்வு ஒன்றில் கெமோமில் தேநீர் அருந்துவது கார்டிசோல் அளவைக் குறைப்பதாகக் கூறப்படுகிறது. கார்டிசோல் ஆனது மன அழுத்தத்தைக் குறைக்கும் ஹார்மோன் ஆகும்.
மூலிகை சப்ளிமெண்ட்ஸ்
மூல்கை டீ வகைகளைப் போலவே பல்வேறு மூலிகை சப்ளிமெண்ட்ஸ்களும் பதட்டத்தைக் குறைக்க உதவுகிறது. எனினும், சிறிய அறிவியல் சான்றுகளே, இந்த கூற்றுகளை ஆதரிக்கிறது. இருப்பினும், மூலிகை சப்ளிமெண்ட்ஸ் மற்றும் பிற மருந்துகளுடன் அதன் சாத்தியமான தொடர்புகள் குறித்து தெரிந்த மருத்துவரிடம் இணைந்து பணியாற்றுவது அவசியமாகும்.
அரோமாதெரபி
அரோமாதெரபி என்பது ஆரோக்கியம் மற்றும் நல்வாழ்வை மேம்படுத்த இயற்கை நறுமண எண்ணெய்களை பயன்படுத்தும் ஒரு முழுமையான குணப்படுத்தும் சிகிச்சையைக் குறிக்கிறது. இது சிகிச்சை பண்புகளுக்காக நன்கு அறியப்படும் ஒன்றாகும். இந்த சிகிச்சையில் பயன்படுத்தப்படும் இனிமையான தாவர அத்தியாவசிய எண்ணெய்களின் வாசனை மன அழுத்தம் மற்றும் பதட்டத்தைக் குறைக்க உதவுகிறது. குறிப்பாக, லாவண்டர் எண்ணெய் மன அழுத்தம் தொடர்பான கவலைக் கோளாறுகளுக்கு சிகிச்சையளிப்பதாக ஆய்வில் கூறப்படுகிறது.
இவை அனைத்துமே மன அழுத்தம், பதட்டத்தைப் போக்க உதவும் சிறந்த மேலாண்மை நடவடிக்கைகளாகும்.
இந்த பதிவும் உதவலாம்: Stress and heart health: மன அழுத்தத்தால் இதய ஆரோக்கியம் பாதிக்கப்படுமா? இதைத் தடுக்க என்ன செய்வது?
Image Source: Freepik