Fri Sep 11, 2026 | 11:45 PM IST

இத மட்டும் தினமும் ஃபாலோ பண்ணுங்க! எந்த கவலையும் இல்லாம இருக்கலாம்

What habits improve mental health: உடல் ஆரோக்கியத்துடன் வைத்திருப்பது எவ்வளவு முக்கியமோ, அதே போல மன ஆரோக்கியத்தைக் கண்காணிப்பதும் அவசியமாகும். மன ஆரோக்கியம் என்பது ஒரு நபரின் ஒட்டுமொத்த நல்வாழ்வின் முக்கிய அங்கமாக விளங்குகிறது. இது மறைமுகமாக உடல் ஆரோக்கியத்துடன் தொடர்புடையதாக அமைகிறது. மன ஆரோக்கியத்தை மேம்படுத்துவதன் மூலம் வாழ்க்கை மற்றும் வேலையின் சவால்களை எளிதில் சமாளிக்கலாம்.

எனவே தான் உடல் ஆரோக்கியத்தைப் போலவே, மன ஆரோக்கியத்திற்கும் கவனிப்பு மற்றும் கவனம் இரண்டுமே தேவைப்படுகிறது. ஆனால் நவீன கால வாழ்க்கை முறை மற்றும் உணவுமுறைகள் மன அழுத்தம், பதட்டத்தை ஏற்படுத்தி பல்வேறு உடல்நல பிரச்சனைகள் மற்றும் மனநல பிரச்சனைகளைத் தருகிறது. எனினும், சில ஆரோக்கியமான நடவடிக்கைகளின் மூலம் மன ஆரோக்கியத்தை மேம்படுத்தலாம்.

இந்த பதிவும் உதவலாம்: சமைப்பது மன ஆரோக்கியத்தை மேம்படுத்துமா? ஸ்ட்ரெஸ் ரிலீவ் செய்ய சூப்பர் டிப்ஸ்!

மன ஆரோக்கியத்தைப் பாதுகாக உதவும் தினசரி நடவடிக்கைகள்

நாம் தினசரி கடைபிடிக்கும் சில அன்றாட நடவடிக்கைகளின் உதவியுடன் மன ஆரோக்கியத்தைப் பாதுகாக்கலாம்.

உடற்பயிற்சி செய்வது

தினசரி உடல் செயல்பாடுகளில் ஈடுபடுவது இயற்கையாகவே உடலில் எண்டோர்பின்களின் உற்பத்தியை அதிகரிக்க உதவுகிறது. அதன் படி, நீட்சி, நடைபயிற்சி அல்லது யோகா போன்ற 30 நிமிட உடற்பயிற்சி, ஒட்டுமொத்த மன ஆரோக்கியத்தையும் மேம்படுத்துகிறது. இதன் மூலம் பதட்டம், மன அழுத்தம் மற்றும் மனச்சோர்வு போன்றவற்றைக் குறைக்கலாம்.

ஆரோக்கியமான உணவுமுறை

உடல் ஆரோக்கியத்திற்கு ஆரோக்கியமான உணவுமுறைகள் மிகவும் நன்மை பயக்கும். ஆனால் இது மன ஆரோக்கியத்தையும் மேம்படுத்துகிறது என்பது உங்களுக்குத் தெரியுமா? ஆம். ஆரோக்கியமான உணவுமுறைகளின் உதவியுடன் உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்தலாம். அதன் படி, வைட்டமின்கள், தாதுக்கள் மற்றும் பழங்கள், காய்கறிகள் மற்றும் முழு தானியங்கள் போன்ற ஆக்ஸிஜனேற்றங்கள் நிறைந்த உணவுகளை உட்கொள்ளலாம். இது மேம்பட்ட மனநிலைக்கும், மூளை செயல்பாட்டை மேம்படுத்தவும் உதவுகிறது.

கவனத்துடன் செயல்படுவது

மைண்ட்ஃபுல்னெஸ் என்பது தற்போதைய தருணத்தில் கவனம் செலுத்துவதைக் குறிக்கிறது. இதன் மூலம் அதிகப்படியான சிந்தனை மற்றும் மன அழுத்தத்தை குறைக்க முடியும். இதனைத் தவிர்க்க, ஆழ்ந்த சுவாசம் மற்றும் தியானம் போன்றவற்றை மேற்கொள்வது அவசியமாகிறது. இவ்வாறு எளிய நடைமுறைகளை மேம்படுத்துவதன் மூலம் மனதை அமைதிப்படுத்தவும், உணர்ச்சிக் கட்டுப்பாட்டை மேம்படுத்தவும் முடியும்.

இந்த பதிவும் உதவலாம்: நீங்க கட்டாயம் தவிர்க்க வேண்டிய மூளை ஆரோக்கியத்தைப் பாதிக்கும் அன்றாட பழக்கங்கள்!

திரை நேரத்தை வரம்பிடுதல்

திரைகளின் அதிகப்படியான பயன்பாடு அதிலும் குறிப்பாக சமூக ஊடகங்களின் காரணமாக, கவலை, பொறாமை மற்றும் மன அழுத்தம் போன்றவை அதிகரிக்கலாம். இந்த காரணிகள் அனைத்துமே மன ஆரோக்கியத்தை எதிர்மறையாக பாதிக்கிறது. எனவே, திரை நேரத்தில் எல்லைகளை அமைப்பது மற்றும் வழக்கமான டிஜிட்டல் இடைவெளிகளை மேற்கொள்வது அவசியமாகும். இதன் மூலம் தளர்வு மற்றும் கவனத்தை மேம்படுத்தலாம்.

போதுமான தூக்கம் பெறுவது

மன ஆரோக்கியத்தைப் பொறுத்த வரை ஆரோக்கியமான தூக்கம் அவசியமான ஒன்றாகும். இது மூளையை சரி செய்யவும், ஓய்வெடுக்கவும் உதவுகிறது. ஏனெனில், தூக்கமின்மை காரணமாக மனநிலை மாற்றங்கள், எரிச்சல் போன்றவை ஏற்படலாம். இது எரிச்சல் மற்றும் இன்னும் சில பிரச்சனைகளை ஏற்படுத்தலாம். எனவே நாள்தோறும் 7-9 மணிநேரம் தூங்குவதை உறுதி செய்ய வேண்டும்.

இலக்குகளை அமைப்பது

பணிகளைச் சமாளிக்கக்கூடிய படிகளாக உடைப்பது அதிகப்படியான உணர்வுகளைக் குறைக்க உதவுகிறது. எனவே ஒரு வேலையை ஒழுங்கைக்க அல்லது முடிக்க சிறு சிறு பணிகளைத் தினமும் செய்து முடிக்க வேண்டும். இது சுயமரியாதையை அதிகரிக்கவும், சாதனை உணர்வை அளிக்கவும் உதவுகிறது. இதன் மூலம் சிறந்த மற்றும் ஆரோக்கியமான மனநலத்தை மேம்படுத்தலாம்.

இவ்வாறு எளிமையான முறையில் தினசரி அன்றாட நடவடிக்கைகளின் உதவியுடன் மன அழுத்தம் தொடர்பான பிரச்சனைகளைக் குறைக்கலாம்.

இந்த பதிவும் உதவலாம்: Morning Habits: ஆரோக்கியமான வாழ்க்கைக்கு இந்த விஷயங்களை காலையில் செய்யுங்க!

Image Source: Freepik

Read Next

Power of Talking Less : கொஞ்சமா பேசுறவங்க எப்படிப்பட்டவங்க தெரியுமா?

Disclaimer

தகவலின் துல்லியம், நம்பகத்தன்மை, சரியான நேரத்தில் வழங்குதல் மற்றும் உண்மைத்தன்மையை உறுதி செய்ய அனைத்து சாத்தியமான நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளது. இருப்பினும், Onlymyhealth.com இதற்கு எந்தப் பொறுப்பையும் ஏற்காது. இந்த வலைதளத்தில் வழங்கப்படும் எந்தவொரு தகவலையும் பயன்படுத்துவது பார்வையாளர்களின் விருப்பத்திற்கு ஏற்ப மட்டுமே. ஏதேனும் மருத்துவத் தேவைகள்/தொடர்ச்சியான உடல்நலப் பிரச்சினைகள் ஏற்பட்டால், மேலே குறிப்பிடப்பட்டுள்ள வலைத்தளத்தில் எங்கள் குழு அல்லது மூன்றாம் தரப்பினரால் பதில்கள்/கருத்துகள் வடிவில் வழங்கப்படும் எந்தவொரு ஆலோசனை/குறிப்புகளையும் பயன்படுத்துவதற்கு முன்பாக, ஒரு தகுதிவாய்ந்த மருத்துவ பயிற்சியாளரை அணுகுமாறு நாங்கள் உங்களுக்கு அறிவுறுத்துகிறோம்.

கௌதமி சுப்ரமணி

கௌதமி சுப்ரமணி

இளைய உள்ளடக்க எழுத்தாளர்

நான் கௌதமி சுப்ரமணியம், டிஜிட்டல் மீடியாவில் ஐந்து ஆண்டுகளுக்கு மேலாக பணியாற்றி வருகிறேன். ஆரோக்கியம், உணவு, உடற்பயிற்சி, உடல் நலம், அழகு குறிப்பு போன்றவை தொடர்பான விவரங்களை ஆராய்ந்து கட்டுரைகளை எழுதி வருகிறேன். நான் எழுதும் ஒவ்வொரு பகுதியும் ஈர்க்கக்கூடியதாக இருப்பதை உறுதிசெய்து, விவரங்களுக்கு ஒரு தீவிரமான பார்வையை வளர்த்துக்கொண்டேன். மக்களுக்குத் தேவையான மற்றும் உண்மையான தகவல்களை வழங்குவதன் மூலம் நல்ல ஆரோக்கியம் மற்றும் நல்வாழ்வுக்கான இலக்கை மேம்படுத்துவது எனது நோக்கம் ஆகும்.

Read More..

How we keep this article up to date:

We work with experts and keep a close eye on the latest in health and wellness. Whenever there is a new research or helpful information, we update our articles with accurate and useful advice.


    Medically reviewed content
    200+ medical reviewers in network
    17 Years of Trusted Health Content
    Medically reviewed content
    200+ medical reviewers in network
    17 Years of Trusted Health Content
    Medically reviewed content
    200+ medical reviewers in network
    17 Years of Trusted Health Content