நீங்க கட்டாயம் தவிர்க்க வேண்டிய மூளை ஆரோக்கியத்தைப் பாதிக்கும் அன்றாட பழக்கங்கள்!

  • SHARE
  • FOLLOW
நீங்க கட்டாயம் தவிர்க்க வேண்டிய மூளை ஆரோக்கியத்தைப் பாதிக்கும் அன்றாட பழக்கங்கள்!

மூளை ஆரோக்கியத்தை சேதப்படுத்தும் பழக்க வழக்கங்கள்

மோசமான உணவு

உணவில் உள்ள சில முக்கிய ஊட்டச்சத்துக்கள் மூளை ஆரோக்கியத்திற்கு உதவுகிறது. குறிப்பாக, ஆரோக்கியமற்ற கொழுப்புகள், பதப்படுத்தப்பட்ட உணவுகள் மற்றும் சுத்திகரிக்கப்பட்ட சர்க்கரைகள் போன்றவை மூளை வீக்கத்திற்கு பங்களிக்கிறது. மேலும் இது நரம்பியக்கடத்தி செயல்பாட்டை பாதித்து, அறிவாற்றல் செயல்முறைகளை மெதுவாக்குகிறது. எனவே மோசமான உணவுத் தேர்வுகள் பதட்டம், மனச்சோர்வு போன்ற மனநலக் கோளாறுகளை ஏற்படுத்துகிறது என ஆய்வுகளில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனைத் தவிர்க்க, பழங்கள், காய்கறிகள், முழு தானியங்கள் மற்றும் நட்ஸ், விதைகள், மீன் போன்ற ஆரோக்கியமான கொழுப்புகள் நிறைந்த உணவுகளை உண்ண வேண்டும். குறிப்பாக, ஒமேகா -3 கொழுப்பு அமிலங்கள் மூளையின் ஆரோக்கியத்தை ஆதரிக்க உதவுகிறது.

இந்த பதிவும் உதவலாம்: Mind Control Tips: அலைபாயும் மனதை அமைதிப்படுத்த இதெல்லாம் ஃபாலோ பண்ணுங்க

உட்கார்ந்த வாழ்க்கை முறை

உடல் உழைப்பின்மை உடல் மற்றும் மன ஆரோக்கியத்தையும் பாதிக்கும் காரணிகளில் ஒன்றாகும். இது மூளை ஆரோக்கியத்தை பாதிக்கிறது. வழக்கமான உடற்பயிற்சி மூளையின் இரத்த ஓட்டத்தை மேம்படுத்தி, புதிய நியூரான்களின் வளர்ச்சியை ஊக்குவிக்கிறது. உட்கார்ந்த வாழ்க்கை முறையானது மனநிலைக் கோளாறுகள், மோசமான நினைவகம், மற்றும் நீண்ட காலத்திற்கு டிமென்ஷியா அபாயம் போன்றவற்றை ஏற்படுத்தலாம். இதனைத் தவிர்க்க, நீச்சல், நடைபயிற்சி, அல்லது யோகா போன்ற வழக்கமான உடல் செயல்பாடுகளை மேற்கொள்ள வேண்டும். மூளையின் செயல்பாட்டை அதிகரிக்க ஒவ்வொரு வாரமும் குறைந்தது 150 நிமிடங்கள் மிதமான உடற்பயிற்சியை மேற்கொள்வது அவசியமாகும்.

அதிக திரை நேரம்

இன்றைய காலகட்டத்தில் பலரும் செல்போன், கணினி போன்றவற்றில் அதிக நேரத்தை செலவிடுகின்றனர். ஆனால், இந்த டிஜிட்டல் பயன்பாடு மூளை ஆரோக்கியத்தைப் பாதிக்கும் என்பது உங்களுக்குத் தெரியுமா? ஆம். இது கவனத்தை பலவீனப்படுத்தி, தூக்க முறைகளை சீர்குலைக்கிறது. மேலும் இது சிக்கலைத் தீர்க்கும் திறனைக் குறைப்பதுடன், மோசமான நினைவாற்றலுக்கு உள்ளாக்குகிறது. குறிப்பாக, குழந்தைகள் மற்றும் இளம் வயதினர்கள் அதிக திரை நேர பயன்பாட்டில் இருப்பது, உணர்ச்சி துயரத்திற்கு பங்களிக்கிறது. எனவே திரை நேரத்தைக் கட்டுப்படுத்துவதற்கான வழிமுறையாக 20-20-20 விதியைப் பயன்படுத்தலாம். அதாவது ஒவ்வொரு 20 நிமிடங்களுக்கும், 20 வினாடிகளுக்கு 20 அடி தொலைவில் உள்ள ஒன்றைப் பார்ப்பதைக் குறிக்கிறது.

இந்த பதிவும் உதவலாம்: Meditation Benefits: இப்படி தியானம் பண்ணா ஞாபக சக்தி அதிகரிக்குமாம்

நாள்பட்ட மன அழுத்தம்

பொதுவாக, நாள்பட்ட மன அழுத்தத்தின் காரணமாக உடலில் கார்டிசோல் அளவு உயர்கிறது. இது அதிக அளவில் இருக்கும் போது மூளையின் ஹிப்போகாம்பஸை சேதப்படுத்தி, கற்றல் மற்றும் நினைவகத்தைத் தடுக்கிறது. இது காலப்போக்கில் நினைவாற்றல் இழப்பு, மோசமான அறிவாற்றல் செயல்திறன் மற்றும் கவனம் செலுத்துவதில் சிரமம் போன்றவற்றிற்கு வழிவகுக்கும். இந்நிலையில் மன அழுத்தத்தைக் குறைக்க தியானம் போன்ற ஆழ்ந்த சுவாச பயிற்சிகள், உடற்பயிற்சி போன்றவற்றைச் செய்வது மன அழுத்தத்தைக் குறைக்கிறது. இது தவிர, ஓய்வு தரும் செயல்பாடுகளில் ஈடுபடுவது, வேலையிலிருந்து வழக்கமான இடைவெளி எடுப்பது உள்ளிட்டவற்றை மேற்கொள்ளலாம்.

தூக்கமின்மை

தொடர்ந்து தூக்கமில்லாமல் இருப்பது, உடல் ஆரோக்கியம் மட்டுமல்லாமல் மூளையையும் பாதிக்கிறது. ஏனெனில் ஆழ்ந்த உறக்கத்தின் போதே மூளை நச்சுகளை வெளியேற்றுகிறது. இது நினைவுகளை ஒருங்கிணைத்து நரம்பு இணைப்புகளை பலப்படுத்துகிறது. நாள்பட்ட தூக்கமின்மை அறிவாற்றல் செயல்பாடுகளை பாதித்து, அல்சைமர் போன்ற நரம்பியக்கடத்தல் நோய்களுடன் இணைக்கப்பட்டுள்ளதாகும். இதனைத் தவிர்க்க, ஒவ்வொரு இரவும் 7-9 மணி நேரம் தூங்குவதை உறுதி செய்ய வேண்டும். வழக்கமான உறக்க அட்டவணையைப் பராமரித்து, சீரான உறக்க வழக்கத்தை உருவாக்குவதன் மூலம் மூளை ஆரோக்கியத்தைப் பாதுகாக்கலாம்.

அன்றாட வாழ்வில் இந்த ஆரோக்கியமான பழக்க வழக்கங்களைக் கையாள்வதன் மூலம் மூளை ஆரோக்கியத்தை பாதுகாக்கலாம்.

இந்த பதிவும் உதவலாம்: Morning Habits: ஆரோக்கியமான வாழ்க்கைக்கு இந்த விஷயங்களை காலையில் செய்யுங்க!

Image Source: Freepik

Read Next

செல்போனில் ரீல்ஸ் பார்த்துக்கிட்டே சாப்பிடுபவரா நீங்கள்… இந்த எச்சரிக்கை உங்களுக்குத் தான்!

Disclaimer

குறிச்சொற்கள்