Does Meditation Improve Memory: தியானப் பயிற்சி உடல் மற்றும் மன ஆரோக்கியத்திற்கு மிகவும் பயனுள்ளதாக கருதப்படுகிறது. தொடர்ந்து தியானம் மேற்கொள்வதன் மூலம் பல ஆரோக்கிய நன்மைகளைப் பெறலாம். குறிப்பாக மன அழுத்தம், பதட்டம் மற்றும் மனச்சோர்வு போன்ற மன ஆரோக்கியம் தொடர்பான நிலைமைகளைக் கட்டுப்படுத்த தியானம் மிகவும் அவசியமான ஒன்றாகும். எனவே மன அமைதிக்காக தியானம் மேற்கொள்வது சிறந்த தேர்வாகும்.
இது தவிர, இரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்துவது, தூக்கம் தொடர்பான பிரச்சனைகளில் இருந்து விடுபடுவது மற்றும் சுவாச பிரச்சனைகளில் இருந்து விலகி இருப்பது போன்ற பல்வேறு ஆரோக்கியநன்மைகளை தியானப் பயிற்சி செய்வதன் மூலம் பெறலாம். இது போன்ற பல்வேறு நன்மைகளை அளிக்கும் தியானத்தைக் கொண்டு நினைவாற்றலை மேம்படுத்த முடியுமா? என்ற கேள்வி அனைவருக்கும் எழும். இதில் நினைவாற்றலை மேம்படுத்த தியானம் எவ்வாறு செய்யலாம் என்பது குறித்து AIIMS டெல்லியின் டாக்டர் பிரியங்கா செஹ்ராவத் (MD, DM- Neurology, AIIMS Delhi) அவர்கள் சில தகவல்களைப் பகிர்ந்துள்ளார்.
முக்கிய கட்டுரைகள்
இந்த பதிவும் உதவலாம்: Brain Sharpening Tips: மூளைத் திறன் மேம்பாட்டிற்கு உதவும் டாப் பழக்க வழக்கங்கள்
தியானத்தின் மூலம் ஞாபக சக்தியை அதிகரிக்கலாமா?
மருத்துவர் பிரியங்காவின் கூற்றுப்படி, “தியானம் செய்வது மூளையின் செயல்பாட்டை மேம்படுத்துகிறது. இதன் வழக்கமான பயிற்சி மூளையை சிறப்பாக செயல்பட உதவுகிறது. மேலும், இது மூளையை வலிமையாக்கவும், நினைவாற்றல் சக்தியை வலுப்படுத்தவும் உதவுகிறது”. உடலின் வெளிப்புற ஆரோக்கியத்துடன், உட்புற ஆரோக்கியத்தையும் பாதுகாப்பது எந்த அளவு முக்கியம் என்பதைத் தெரிந்து கொள்வது அவசியமாகும். இதில் மூளையின் சில பகுதிகள் சில முக்கியமான செயல்பாடுகளைக் கட்டுப்படுத்துகிறது.
தியானம் செய்வதால் மூளையில் கிடைக்கும் நன்மைகள்
- தியானம் செய்வதன் மூலம் கவனத்தின் காலத்தை அதிகரிக்கவும், திசைதிருப்பும் போக்கைக் குறைக்கவும் உதவுகிறது.
- இதில் முக்கியமாக நம் உணர்ச்சிகளைக் கட்டுப்படுத்தும் திறனை அதிகரிக்கிறது.
- தியானம் செய்வது நினைவாற்றல் மற்றும் அறிவாற்றல் ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவுகிறது.
- சிந்தனையின் தெளிவை மேம்படுத்துவதில் தியானம் முக்கிய பங்கு வகிக்கிறது.
- உணர்ச்சிகளைக் கட்டுப்படுத்தி உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்த தியானம் செய்யலாம்.
இந்த பதிவும் உதவலாம்: Brain Power Increasing Habits: ப்ரெய்ன் ஷார்ப்பா இருக்கணும்னா தினமும் நீங்க செய்ய வேண்டியது இது தான்!
- தியானத்தின் போது, மூளையானது ஆல்பா அலைகள் அல்லது ஆழ்ந்த தளர்வு என்ற நிலைக்கு நுழைகிறது. இவ்வாறு மனம் தளர்வடைந்து மன அழுத்த ஹார்மோன்கள் குறையும் போது கவனம் அதிகரிக்கிறது.
- இவை உடலின் சீரான பகுதிகளுக்கு இரத்த ஓட்டத்தை அதிகரிப்பதன் காரணமாக, சிறந்த ஒட்டுமொத்த மன செயல்திறனுக்கு வழிவகுக்கிறது.
- எனவே, வழக்கமான தியானம் செய்வதன் மூலம் நீண்டகால கட்டமைப்பு மாற்றங்களுக்கு வழிவகுப்பதாகக் கூறப்படுகிறது.
இவ்வாறு தியானம் செய்வது உடனடி அமைதியான விளைவைத் தருகிறது. இது அறிவாற்றலை நேரடியாக மேம்படுத்துவது மட்டுமல்லாமல், காலப்போக்கில் மூளையின் கட்டமைப்பில் மாற்றங்களைத் தூண்டுகிறது. இது மேம்படுத்தப்பட்ட மனத்திறன் மற்றும் நல்வாழ்வுக்கு முக்கிய பங்களிக்கிறது.
மருத்துவர்கள் பரிந்துரை
டாக்டர் பிரியங்கா அவர்களின் கூற்றுப்படி, ஒவ்வொரு நபரும் தியானம் செய்ய வேண்டும் என பரிந்துரைக்கின்றனர். இது உடலின் ஒட்டுமொத்த ஆரோக்கியத்தில் சாதகமான விளைவைத் தருகிறது. இதைச் செய்த பிறகு உடலில் வித்தியாசமான ஆற்றலை அனுபவிக்க முடியும். எனவே நாள் முழுவதும் அமைதியாகவும், மகிழ்ச்சியாகவும் உணர முடியும். எனவே தினமும் தியானம் செய்வதன் மூலம் உடல், மன ஆரோக்கியம் இரண்டையும் மேம்படுத்த முடியும்.
இந்த பதிவும் உதவலாம்: Meditate In Bed: படுக்கையில் தியானம் செய்வது நல்லதா? நிபுணர் தரும் விளக்கம்
Image Source: Freepik