Best Way To Keep Your Mind Active And Healthy: நாம் தினசரி செய்யும் சில நடவடிக்கைகள், உடல் ஆரோக்கியத்தை மட்டுமல்லாமல், மன ஆரோக்கியத்தையும் பாதிப்பதாக அமைகிறது. ஆனால், தற்காலத்தில் உடல் செயல்பாடுகளில் ஈடுபடாமல் இருப்பது, அதிகளவிலான மொபைல் பயன்பாடு, போதுமான தூக்கம் இல்லாமை போன்றவற்றால் மன அமைதியை இழந்து தவிக்கின்றனர். மேலும் இது மூளை ஆரோக்கியத்தையும் பாதிக்கலாம்.
அதாவது இளமை மற்றும் கூர்மையான மனதை பராமரிக்க, ஒரு தனிநபரின் வாழ்க்கையின் பல்வேறு அம்சங்களை உள்ளடக்கிய ஒரு முழுமையான அணுகு முறையைக் கையாள வேண்டும். உடலின் மற்ற பாகங்களைப் போலவே, மூளை ஆரோக்கியமான வாழ்க்கை முறை மற்றும் வழக்கமான உடற்பயிற்சி போன்றவற்றால் பயனடைகிறது. இதில் நம் மூளையை ஆரோக்கியமாக வைப்பதுடன் இளமையாக மற்றும் கூர்மையாக வைக்க தினசரி நாம் செய்ய வேண்டிய சில பழக்க வழக்கங்களைக் காணலாம்.
முக்கிய கட்டுரைகள்
இந்த பதிவும் உதவலாம்: Walking After Dinner: நைட் சாப்பிட்ட பிறகு வாக்கிங் போனா இந்த நன்மைகள் எல்லாம் கிடைக்குமாம்!
மூளை ஷார்ப்பாக இருக்க உதவும் தினசரி பழக்க வழக்கங்கள்
ஆரோக்கியமான உணவுமுறை
மூளையின் ஆரோக்கியத்திற்கு உணவுமுறை நேரடி தாக்கத்தை ஏற்படுத்துகிறது. அதன் படி, காய்கறிகள், பழங்கள், மெலிந்த புரதங்கள், முழு தானியங்கள் போன்ற உணவுகளை எடுத்துக் கொள்ளலாம். இது மூளை செயல்பாட்டை மேம்படுத்த உதவுகிறது. குறிப்பாக, ஆலிவ் எண்ணெய், நட்ஸ், மீன் மற்றும் காய்கறிகளுக்கு அதிகமுக்கியத்துவம் கொடுக்க வேண்டும். இது அறிவாற்றல் திறனை மேம்படுத்துவதுடன், அல்சைமர் நோய் அபாயத்தைக் குறைக்க உதவுகிறது.
உடல் செயல்பாடுகள் ஈடுபடுவது
உடற்பயிற்சி செய்வது உடல் ஆரோக்கியத்திற்கு மட்டுமல்லாமல், மூளை ஆரோக்கியத்திற்கும் நன்மை பயக்கும். எனவே வழக்கமான உடல் செயல்பாடு மூளைக்கு இரத்த ஓட்டத்தை மேம்படுத்துகிறது. மேலும் புதிய நியூரான்களின் வளர்ச்சியை ஊக்குவிக்கவும், அறிவாற்றல் செயல்பாடுகளை மேம்படுத்தவும் உதவுகிறது. ஆய்வு ஒன்றில், வழக்கமான உடல் செயல்பாடுகளில் ஈடுபடும் நபர்களுக்கு அறிவாற்றல் வீழ்ச்சி ஏற்படுவதற்கான ஆபத்து குறைவாக இருப்பதாகக் கண்டறியப்பட்டுள்ளது. வாரத்தில் குறைந்தது நான்கு நாள்களாவது தினந்தோறும் குறைந்தது 30 நிமிடங்கள் நடைப்பயிற்சி அல்லது சைக்கிள் ஓட்டுதல் போன்ற உடல் செயல்பாடுகள் ஈடுபடலாம்.
சுறுசுறுப்பாக இருக்க முயற்சிப்பது
மூளையை ஈடுபாட்டுடனும், சவாலுடன் வைத்திருப்பது அவசியமாகும். இன்றைய நவீன காலகட்டத்தில் மூளை செயல்பாடு எதுவும் இல்லாமல் பொழுதுபோக்கிற்காக மொபைல் பயன்பாடே அதிகம் உள்ளது. இதனைக் கருத்தில் கொண்டு புதிர்கள், புத்தகம் படிப்பது, புதிய மொழியைக் கற்றுக் கொள்வது, இசைக்கருவி வாசிப்பது போன்ற மனதைத் தூண்டும் செயல்பாடுகளில் ஈடுபட வேண்டும். இது புதிய நரம்பு வழிகளை உருவாக்கி அறிவாற்றல் செயல்பாட்டை மேம்படுத்த உதவுகிறது.இவை அனைத்தும் டிமென்ஷியா வருவதைத் தாமதப்படுத்துவதாக அமைகிறது.
புதியவற்றை கற்றுக்கொள்ளுதல்
வாழ்நாள் முழுவதும் கூர்மையான மனதை பராமரிக்க உதவும் ஒரு சிறந்த சக்திவாய்ந்த கருவியாக அமைவது கற்றல் திறனே ஆகும். ஒரு பாடத்திட்டத்தை எடுப்பது அல்லது புதிய ஆர்வங்களை ஆராய்வது போன்ற எதுவாக இருப்பினும், தொடர்ச்சியாக நாள்தோறும் செய்து கொண்டே வருவது மூளையைத் தூண்டுகிறது. ஆய்வு ஒன்றில், குறைவான சவாலான செயல்களில் ஈடுபடுபவர்களைக் காட்டிலும், புதிய தேவைப்படும் திறன்களைக் கற்றுக் கொள்பவர்களின் நினைவாற்றல் அதிக முன்னேற்றத்தைக் கட்டுவதாகக் கூறப்படுகிறது. இது மனதை கூர்மையாக வைத்திருக்க உதவும் சிறந்த வழியாகும்.
இந்த பதிவும் உதவலாம்: Sesame Oil Massage Benefits: உடம்பு வலி காணாமால் போக நல்லெண்ணெய் மசாஜ் செய்யுங்க
மூளை சக்தியை மேம்படுத்தும் உணவுகள்
மூளை சக்தி என்பது நினைவாற்றல், மனநிலை மற்றும் மன சுறுசுறுப்பு போன்ற அனைத்தையும் மேம்படுத்துவதைக் குறிக்கிறது. ஆனால், இன்றைய காலத்தில் பெரும்பாலானோர் விரும்பி உண்ணும் ஜங்க் ஃபுட், எண்ணெய் உணவு வகைகள் போன்றவை மூளைத் திறனை பாதிக்கலாம். இதனைத் தவிர்க்க, நட்ஸ், பூசணி விதைகள், ப்ரோக்கோலி, கிரீன் டீ, காபி, முழு தானியங்கள், இலை கீரைகள் போன்ற பல்வேறு மூளைத்திறனை அதிகரிக்கும் உணவுகளை சாப்பிடலாம். இது அறிவாற்றல் திறனை மேம்படுத்த உதவுகிறது. ஆரோக்கியமான வாழ்க்கை முறையுடன், இந்த உணவுகளைச் சேர்த்துக் கொள்வது மூளையின் செயல்பாட்டை கணிசமாக மேம்படுத்துவதுடன் ஒட்டுமொத்த மன ஆரோக்கியத்தையும் மேம்படுத்துகிறது.
தியானம் செய்வது
மூளை ஆரோக்கியத்தில் நேரடியாக பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும் சக்தி தியானத்திற்கு உள்ளது. நாள்தோறும் தியானம் மேற்கொள்வதன் மூலம், மன அழுத்தத்தைக் குறைக்கவும், செறிவை மேம்படுத்தவும் உதவுகிறது. மேலும் உணர்ச்சிக் கட்டுப்பாட்டை மேம்படுத்தவும் தியானம் உதவுகிறது. ஆய்வு ஒன்றில், வழக்கமாக தியானம் மேற்கொள்வது மூளைத் திறனை மேம்படுத்துவதுடன், சிறந்த நினைவாற்றல் மற்றும் அறிவாற்றல் செயல்பாடுகளுடன் இணைக்கப்பட்டதாக அமைகிறது.
மூளைக்கு இடைவெளி அளிப்பது
மூளைக்கு போதுமான இடைவெளி தேவை என்பது தூக்கத்தைக் குறிக்கிறது. ஏனெனில், நல்ல ஆரோக்கியமான தூக்கத்தின் மூலம் மன ஆரோக்கியத்தை மேம்படுத்தலாம். இது மூளை நினைவுகளை ஒருங்கிணைப்பதுடன், நச்சுக்களை வெளியேற்ற உதவுகிறது. ஆய்வு ஒன்றில் பெரியவர்கள் நாள்தோறும் ஆற்றலுடன் சிறப்பாக செயல்பட 7 முதல் 9 மணி நேர இரவு தூக்கம் தேவைப்படுவதாகக் கூறப்படுகிறது. ஏனெனில், மோசமான தூக்க செயல்பாடு, அறிவாற்றல் வீழ்ச்சிக்கு வழிவகுக்கும்.
இந்த வகை தினசரி செயல்பாடுகளின் மூலம், மூளை மற்றும் மன ஆரோக்கியத்தை சிறப்பாக மேம்படுத்த முடியும்.
இந்த பதிவும் உதவலாம்: Brain Power Increasing Habits: ப்ரெய்ன் ஷார்ப்பா இருக்கணும்னா தினமும் நீங்க செய்ய வேண்டியது இது தான்!
Image Source: Freepik