$
Post Dinner Walk Benefits: இன்று பலரும் தவறான உணவுமுறை மற்றும் ஆரோக்கியமற்ற பழக்க வழக்கங்களால் பல பிரச்சனைகளை சந்திக்கின்றனர். இதில் ஒன்றே உடல் எடை அதிகரிப்பும் அமையும். குறிப்பாக இரவு உணவை தாமதமாக எடுத்துக் கொள்வது, சாப்பிட்ட உடனேயே உறங்கச் செல்வது போன்றவை பல்வேறு அசௌகரியங்களை ஏற்படுத்தும்.
ஆனால், உணவு சாப்பிட்ட பிறகு எந்தவொரு உடல் செயல்பாடுகளைச் செய்வதும் உடல் ஆரோக்கியத்திற்கு நன்மை பயக்கும். எனினும் முழு உணவுக்குப் பிறகு தீவிர உடற்பயிற்சி அல்லது விறுவிறுப்பான நடைபயிற்சி தவிர்க்கப்பட வேண்டும். தினந்தோறும் உணவு உண்ட பிறகு 15 நிமிடங்களாவது நடப்பதன் மூலம், நீண்ட காலத்திற்கு பலவிதமான உடல்நலக் குறைபாடுகளைத் தவிர்க்கலாம்.
இந்த பதிவும் உதவலாம்: Prolonged Sitting Effects: நீண்ட நேரம் உட்கார்ந்திருப்பவர்களா நீங்க? இந்த பிரச்சனையை சந்திக்க தயாராகிக்கோங்க
உணவுக்குப் பின் நடைபயிற்சி
இரவு உணவிற்குப் பின் குறுகிய நடை செல்வதன் மூலம் வாழ்க்கை முறையை மேம்படுத்தலாம். அதிலும், இரவில் அமைதியான சூழல், இனிமையான வானிலை போன்ற நிலைகளில் நடைபயிற்சி செய்வது மிகுந்த நன்மை பயக்கும். இது மன அழுத்தத்தைக் குறைப்பதுடன், பல்வேறு உடல்நலப் பிரச்சனைகளுக்கும் தீர்வு தருகிறது.
இரவு நேரத்தில் உணவு உண்ட பிறகு நடப்பது, இரத்த அழுத்தத்தைக் கட்டுப்படுத்துவது, கொலஸ்ட்ராலைக் குறைப்பது, இதய ஆரோக்கியத்திற்கும், நீரிழிவு நோய் மற்றும் பிற வளர்ச்சிதை மாற்றக் கோளாறுகளைத் தடுக்கவும் உதவுகிறது. இதில் இரவு உணவு உண்ட பிறகு நடைபயிற்சி செய்வதால் கிடைக்கும் நன்மைகளைக் காணலாம்.

இரவு உணவுக்குப் பின் நடைபயிற்சி செய்வதன் நன்மைகள்
இரவு உணவிற்குப் பிறகு நடைபயணத்தை மேற்கொள்வது உடல் ரீதியாகவும் மன ரீதியாகவும் குறிப்பிடத்தக்க ஆரோக்கிய நன்மைகளைத் தருகிறது.
செரிமான மேம்பாட்டிற்கு
இரவு உணவு எடுத்துக் கொண்ட உடனேயே உட்கார்ந்திருத்தல் அல்லது தூங்கச் செல்வது செரிமான பிரச்சனையை ஏற்படுத்தலாம். எனவே சாப்பிட்ட பிறகு நடைபயிற்சி மேற்கொள்வது செரிமானப் பாதை வழியாக உணவின் இயக்கத்தைத் தூண்டி, செரிமானத்தை மேம்படுத்துகிறது. இதன் மூலம் இது அஜீரணம், வயிற்று உப்புசம், உணவுக்குப் பின் ஏற்படும் அசௌகரியங்களைத் தடுக்கலாம்.
எடை மேலாண்மைக்கு
சாப்பிட்ட பிறகு உடல் செயல்பாடுகளில் ஈடுபடுவது உடலில் கலோரிகளை எரிக்க ஏதுவாக அமைகிறது. மேலும், உணவுக்குப் பிந்தைய பசியைக் கட்டுப்படுத்துவதுடன், அதிகப்படியான உணவைத் தடுக்கிறது. இது காலப்போக்கில் எடை இழப்பு அல்லது எடை பராமரிப்பில் பங்களிக்கிறது.
நீரிழிவு நோய்க்கு
உணவு உண்ட பிறகு, நடைபயிற்சி மேற்கொள்வது தசைகளால் குளுக்கோஸ் உறிஞ்சுதலை அதிகரித்து, இரத்த சர்க்கரை அளவைக் குறைக்க உதவுகிறது. மேலும், இது நீரிழிவு நோய் அல்லது நீரிழிவு நோய் நிலைமையை உருவாகும் அபாயத்தில் உள்ளவர்களுக்கு பயனுள்ளதாக அமைகிறது.
இந்த பதிவும் உதவலாம்: Mental Health During Summer: கோடை வெயிலில் மன அழுத்தமா? எப்படி தப்பிப்பது?
ஆரோக்கியமான தூக்கத்திற்கு
உடல் செயல்பாடானது, அதிலும் குறிப்பாக இரவு உணவுக்குப் பின் செய்யும் உடல் செயல்பாடு நல்ல மற்றும் தரமான தூக்கத்தைத் தர உதவுகிறது. இரவு உணவுக்குப் பிறகு நடைபயணம் மேற்கொள்வது நல்ல ஓய்வைத் தரவும், உடலை நிம்மதியான தூக்கத்திற்கு தயார் செய்யவும் உதவுகிறது.

இதய ஆரோக்கியத்திற்கு
நடைபயிற்சியின் மூலம் இரத்த அழுத்தம் குறைக்கப்படுவதுடன், கொழுப்பின் அளவு குறைக்கப்பட்டு, இரத்த ஓட்டம் மேம்படுத்தப்படுகிறது. இதன் மூலம் இதய ஆரோக்கியத்தை மேம்படுத்தலாம். எனவே இரவு உணவுக்குப் பிறகு வழக்கமான நடைபயிற்சி மேற்கொள்வது பக்கவாதம் மற்றும் இதயநோய் ஏற்படும் அபாயத்தைக் குறைக்க உதவுகிறது.
மன அழுத்தத்தைக் குறைக்க
நடைபயிற்சி செய்யும் போது உடலில் மனநிலையை உயர்த்தும் எண்டோர்பின்கள் வெளியிடுவது ஊக்குவிக்கப்படுகிறது. இவை இரவு நேரத்தில் ஏற்படும் மனஅழுத்தத்தைக் குறைத்து, மேம்பட்ட மன ஆரோக்கியத்திற்கு வழிவகுக்கிறது.
குடும்பப் பிணைப்பு
இரவு உணவுக்குப் பின்னதாக, நடைபயிற்சி செய்வது குடும்பம் அல்லது நண்பர்களுடன் தரமான நேரத்தை செலவிட சிறந்த வழியாகும். இந்த நேரத்தில் அன்றைய நாள் முழுவதும் நடந்ததைக் குறித்து உரையாடுவதும், அனுபவங்களைப் பகிர்வதற்கும் சிறந்த நேரமாகக் கருதப்படுகிறது. இவை ஒட்டுமொத்த நல்வாழ்வுக்கு முக்கியமானவையாகும்.
நாள்தோறும் இரவு நேரத்தில் உணவு உண்ட பிறகு நடைபயிற்சி மேற்கொள்வது இது போன்ற பல்வேறு நன்மைகளைத் தருகிறது.
இந்த பதிவும் உதவலாம்: கால்களுக்கு இடையே தலையணை வைத்து தூங்குவதில் இத்தனை நன்மைகள் இருக்கா?
Image Source: Freepik