Walking Benefits: தினமும் 10,000 ஸ்டெப்ஸ் நடந்தா, இந்த பிரச்சனை வரவே வராதாம்!

  • SHARE
  • FOLLOW
Walking Benefits: தினமும் 10,000 ஸ்டெப்ஸ் நடந்தா, இந்த பிரச்சனை வரவே வராதாம்!

இதனைத் தவிர்க்க, நாள்தோறும் அன்றாட பழக்க வழக்கங்களில் நடைபயிற்சியை சேர்த்துக் கொள்ள வேண்டும். ஆனால் ஒரு நாளைக்கு எத்தனை படிகள் நடப்பது உடலுக்கு நன்மை என்பது குறித்து யோசித்திருக்கிறீர்களா? ஆனால், நாள்தோறும் 10,000 படிகளுக்கு மேல் நடப்பது உடல் ஆரோக்கியத்திற்கு நம்பமுடியாத நன்மைகளைத் தரும் என்பது உங்களுக்குத் தெரியுமா? இதில் தினமும் 10,000 படிகளுக்கு மேல் நடப்பதால் கிடைக்கும் நன்மைகள் சிலவற்றைக் காணலாம்.

இந்த பதிவும் உதவலாம்: Arm Fat Exercise: கஷ்டமே வேணாம்! கை சதை குறைய இந்த உடற்பயிற்சி செய்யுங்க

தினமும் 10,000 படிகளுக்கு அதிகமாக நடப்பதால் கிடைக்கும் நன்மைகள்

நுரையீரல் திறனை மேம்படுத்த

தினந்தோறும் நடைபயிற்சியை வழக்கமாக்கிக் கொள்வது நுரையீரல் திறனை கணிசமாக அதிகரிக்கிறது. இந்த ஒவ்வொரு சுவாசத்திலும் அதிக ஆக்ஸிஜனை எடுக்க அனுமதிக்கப்படுகிறது. இது குறித்து, இதய நுரையீரல் மறுவாழ்வு மற்றும் தடுப்பு இதழில் வெளியிடப்பட்ட ஆய்வு ஒன்றில், நடைபயிற்சி செய்வது சுவாச தசைகளை பலப்படுத்துவதாகக் கூறப்படுகிறது. இது காற்றோட்டத்தை மேம்படுத்த உதவுகிறது. மேலும் ஒட்டுமொத்த நுரையீரல் செயல்பாட்டை மேம்படுத்துகிறது.

பெண்களுக்கான பக்கவாதத்தைக் குறைக்க

ஸ்ட்ரோக் இதழில் வெளியிடப்பட்ட ஆய்வு ஒன்றில், பெண்கள் நாள்தோறும் 10,000 அல்லது அதற்கு மேற்பட்ட படிகள் நடப்பது, அவர்களுக்கு ஏற்படும் பக்கவாதம் அபாயத்தைக் கணிசமாகக் குறைக்கிறது. நடைபயிற்சி மேற்கொள்வது இரத்த அழுத்தத்தை ஆரோக்கியமான அளவில் பராமரிக்க உதவுகிறது. மேலும் இரத்த ஓட்டத்தை மேம்படுத்தி தமனிகளில் பிளேக் குவிதலைக் குறைக்கிறது. இவை அனைத்தும் பக்கவாதத்தைக் குறைக்கும் காரணிகளாகும்.

உடல் எடை இழப்புக்கு

உடல் எடையை இழக்க விரும்புவோர்க்கு நடைபயிற்சி ஒரு சிறந்த வழியாகும். ஒரு நாளைக்கு 10,000 படிகளுக்கு அதிகமாக நடப்பது, தினசரி கலோரிகளை எரிக்கவும், எடை இழப்பை ஊக்குவிக்கவும் உதவுகிறது. தினந்தோறும் கலோரி செலவை அதிகரிப்பது எடை இழப்புக்கு அவசியமாகும். இதற்கு நடைபயிற்சி சிறந்த தேர்வாகும். மேலும் நடைபயிற்சி செய்வதன் மூலம் வளர்ச்சிதை மாற்றத்தை அதிகரித்து, ஆரோக்கியமான உடல் எடையைப் பராமரிக்கலாம். தினந்தோறும் 10,000 ஸ்டெப்ஸ்களுக்கு அதிகம் நடப்பது எடை அதிகரிப்பதைத் தடுக்கவும், ஆரோக்கியமான எடை இழப்பை ஊக்குவிக்கவும் உதவுகிறது.

இந்த பதிவும் உதவலாம்: Neck Pain Exercises: தீராத கழுத்து வலியிலிருந்து நிவாரணம் பெற இந்த உடற்பயிற்சிகளை செய்யுங்க

நோயெதிர்ப்புச் சக்தியை அதிகரிக்க

நாள்தோறும் நடைபயிற்சி மேற்கொள்வது நோயெதிர்ப்பு மண்டலத்தை வலுப்படுத்துவதுடன், நோய்த்தொற்றுகள் மற்றும் நோய்களை எதிர்த்துப் போராட உதவுகிறது சளி தொற்றுக்களை எதிர்த்துப் போராடவும் நடைபயிற்சி மேற்கொள்ளலாம். உடலில் நோயெதிர்ப்புச் செல்களின் சுழற்சியை அதிகரிக்க நாள்தோறும் நடைபயிற்சி செய்யலாம். இது நிணநீர் செயல்பாட்டை மேம்படுத்தி, வீக்கத்தைக் குறைக்க உதவுகிறது. இவை நோயெதிர்ப்பு செயல்பாட்டை மேம்படுத்தி, ஒட்டுமொத்த ஆரோக்கியத்தையும் ஆதரிக்கிறது.

நல்ல தூக்கத்திற்கு

நடைபயிற்சி போன்ற வழக்கமான உடல் செயல்பாடு செய்வது தூக்கத்தின் தரத்தையும், அதன் கால அளவை மேம்படுத்த உதவுகிறது. அதன் படி, வாரத்திற்கு குறைந்தது 150 நிமிடங்கள் நடப்பது சிறந்த தூக்கத்தின் தரத்தைத் தருவதாகக் கூறப்படுகிறது. மேலும், இவ்வாறு நடைபயிற்சி செய்வது, குறைந்த சுறுசுறுப்பாக இருப்பவர்களுடன் ஒப்பிடுகையில் காலையில் அதிக புத்துணர்ச்சியுடன் காணப்படுவர். இது தூக்க விழிப்பு சுழற்சியை சீராக வைத்து, சிறந்த தூக்கத்திற்கு உதவுகிறது.

மனநிலையை மேம்படுத்த

நடைபயிற்சி உடல் ஆரோக்கியத்துடன், மன ஆரோக்கியத்திலும் நேர்மறையான விளைவுகளைத் தருகிறது. நடைபயிற்சி செய்வது மன அழுத்தத்தைக் குறைத்து, மன நிலையை மேம்படுத்துகிறது. ஒரு நாளைக்குக் குறைந்தது 10 நிமிடங்கள் நடப்பது பதட்டம் மற்றும் மனச்சோர்வு அறிகுறிகளைப் போக்க உதவுவதாக ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது. மேலும், நடைபயிற்சி செய்யும் போது உடலில் எண்டோர்பின்கள் வெளியிடப்படுகிறது. இது இயற்கையாகவே மனநிலையை மேம்படுத்த உதவும் ஹார்மோன் ஆகும். அதே சமயம், நடைபயிற்சி ஆனது உடலில் உள்ள அழுத்த ஹார்மோன்களின் அளவைக் குறைக்க உதவுகிறது.

இவ்வாறு ஒரு நாளைக்கு 10,000 படிகளுக்கு மேல் நடப்பது பல்வேறு உடல்நல பிரச்சனைகளுக்குத் தீர்வு தருவதுடன், மன ஆரோக்கியத்தையும் மேம்படுத்துகிறது.

இந்த பதிவும் உதவலாம்: Walking Mistakes: வாக்கிங் செல்லும் போது மறந்தும் இந்த தவறுகளை செய்யாதீங்க!!

Image Source: Freepik

Read Next

World Athletics Day 2024: உலக தடகள தினம் உருவான வரலாறு… இதன் முக்கியத்துவம் தெரியுமா.?

Disclaimer