Is It Good To Walk Right After Eating: இன்றைய காலகட்டத்தில் பலரும் உட்கார்ந்த வாழ்க்கை முறையையே பின்பற்றி வருகின்றனர். அதிலும் சரியான நேரத்திற்கு உணவு உண்ணாமல் இருப்பது, ஆரோக்கியமற்ற உணவுகளை எடுத்துக் கொள்வது போன்றவற்றால் பல வித பிரச்சனைகளை அனுபவிக்கின்றனர். இவ்வாறு உடல் செயல்பாடுகள் எதுவும் இல்லாமல், ஆரோக்கியமற்ற உணவுகளை உண்பது உடல் ஆரோக்கியத்தைப் பல்வேறு வழிகளில் பாதிக்கலாம். குறிப்பாக, இதய நோய், நீரிழிவு நோய் உள்ளிட்ட நோய்களுக்குக் காரணமாக விளங்கும் உடல் எடை அதிகரிப்பு இதன் காரணமாகவே நிகழ்கிறது.
இதற்குத் தீர்வாக அமைவது ஒவ்வொரு உணவுக்குப் பிறகு உடலை சிறிது செயல்படுத்த வேண்டும் என்பதாகும். அதாவது உணவு உண்ட பிறகு கனமான பொருள்களைத் தூக்குவது, கடினமான வேலைகளைச் செய்வது என்பதல்ல. எளிதான பயிற்சியாக ஒவ்வொரு முறை உணவு உட்கொண்ட பின்னரும் சிறிது நேரம் நடைபயிற்சி மேற்கொள்வதாகும். இவ்வாறு உணவுக்குப் பிறகு நடைபயிற்சி வழக்கத்தைக் கையாள்வதன் மூலம் பல்வேறு உடல்நல பிரச்சனைகளிலிருந்து விடுபடலாம்.
இந்த பதிவும் உதவலாம்: Curd For Weight Loss: எடை வேகமாக குறைய தயிரை இப்படி சாப்பிடுங்க. சீக்கிரம் ரிசல்ட் கிடைக்கும்
உணவுக்கு முன் நடப்பதன் நன்மைகள்
உணவுக்குப் பின் நடப்பதைப் போலவே உணவுக்கு முன் நடப்பதும் உடல் ஆரோக்கியத்திற்கு நன்மை பயக்கும். அதிலும் குறிப்பாக, கார்ப்பரேட் பணியாளர்கள் தங்களது முழு வேலை நேரத்தையும் பெரும்பாலும் உட்கார்ந்தே செலவிடுகின்றனர். இவர்கள் மதிய உணவுக்கு முன் சிறிது நடப்பது அவர்களுக்கு குறிப்பிட்ட நன்மைகளைத் தரும். இதில் அவர்கள் மனம் மற்றும் உடல் ரீதியான நன்மைகளைப் பெறுவார்கள். இது அவர்களின் திறன் மற்றும் ஒட்டுமொத்த ஆரோக்கியம் இரண்டையும் அதிகரிக்கும்.
ஒவ்வொரு உணவுக்குப் பிறகு நடப்பதால் கிடைக்கும் நன்மைகள்
சரி. இப்போது உணவு உண்ட பிறகு நடைபயிற்சி செய்வதால் கிடைக்கும் நன்மைகளைக் காணலாம்.
உடல் எடையைக் குறைக்க
உணவு உண்ட உடனேயே உட்கார்ந்து கொள்வது உடல் எடை அதிகரிப்புக்கு முக்கிய காரணமாகும். இதனைத் தவிர்க்க நடைபயிற்சி சிறந்த தேர்வாகும். குறிப்பாக உணவுக்குப் பிறகு 10 நிமிடம் நடைபயிற்சி செய்வது உடலில் கலோரிகளை கரைக்க உதவுகிறது. இதன் மூலம் உடல் எடையை முறையாக பராமரிக்க உதவுவதுடன், நீண்ட நாள் பலனைத் தருகிறது.
செரிமான ஆரோக்கியத்திற்கு
உணவுக்குப் பின் 10 நிமிடங்கள் நடப்பது செரிமான பிரச்சனைகளைத் தீர்க்க உதவுகிறது. இது வயிறு செயல்பாடுகளைத் தூண்டி உடல் ஆரோக்கியத்திற்கு நன்மை பயக்கும். இதன் மூலம் வயிறு உப்புசம், செரிமான கோளாறுகள் மற்றும் அசௌகரியங்களைப் போக்கலாம். குறிப்பாக பணியாளர்கள் நாள் முழுவதும் வேலை செய்வதில் அசௌகரியத்தை அனுபவிப்பர். இவ்வாறு நடைபயிற்சி மேற்கொள்வது அவர்களின் பணி சிறக்க உதவும்.
புத்துணர்ச்சியை மேம்படுத்த
இன்று பலரும் பணி மற்றும் வேறு பிரச்சனைகள் தொடர்பாக மன அழுத்தத்தை சந்திக்கின்றனர். இந்த மனஅழுத்தங்களில் இருந்து சிறிது இடைவெளி எடுத்துக்கொள்ள உணவுக்குப் பின் நடைபயிற்சி மேற்கொள்வது சாத்தியமான தேர்வாக அமையும். மேலும் இது மனச்சோர்வைப் போக்கி, தெளிவான மனநிலையைத் தரும். இது பணியில் மீண்டும் கவனத்துடன் செயலாற்ற உதவும். புதிய கவனம் மற்றும் தெளிவுடன் செயலாற்றலாம்.
இந்த பதிவும் உதவலாம்: Overeating And Weight Loss: உடல் எடையைக் குறைக்க கம்மியா சாப்பிடணுமா? இத மட்டும் ஃபாலோ பண்ணுங்க
ஆற்றல் அளவை அதிகரிக்க
உடற்பயிற்சி செய்வது, அதிலும் குறிப்பாக நடைபயிற்சி மேற்கொள்வது உடலில் இரத்த ஓட்டத்தை அதிகரிக்கும். இது மூளை தசைகளுக்கு அதிகளவில் ஆக்ஸிஜன் எடுத்துச் செல்வதை உறுதிபடுத்துகிறது. மேலும், உடல் ஆற்றலை அதிகரிக்கச் செய்யவும் உதவுகிறது. இதன் மூலம் சோர்வை போக்கி, முழுகவனத்துடன் ஈடுபட வைப்பதுடன், அதிக ஆற்றலையும் தருகிறது.
இரத்த சர்க்கரை அளவை பராமரிக்க
பொதுவாக உணவு உண்ட பிறகு உடலில் இரத்த சர்க்கரை அளவு உயரும் என்பது குறிப்பிடத்தக்கது. இதனை முறைப்படுத்த நடைப்பயிற்சி பெரிதும் உதவுகிறது. ஆம். உணவுக்குப் பின் நடைபயிற்சி செய்வது உடல் குளுக்கோஸ் எடுப்பதை உறுதிபடுத்துகிறது. இதன் மூலம் உணவுக்குப் பிறகு திடீரென உயரும் இரத்த சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்த உதவுகிறது.
நீண்ட நாள் உடல் ஆரோக்கியத்திற்கு
தொடர்ந்து வேலை செய்து கொண்டே இருக்கும் போது, உணவுக்குப் பிறகு சிறிது நேர நடைபயிற்சி செய்வது நீண்ட கால ஆரோக்கிய நன்மைகளைத் தருகிறது. இது உடல் பருமன், நீரிழிவு நோய் மற்றும் புற்றுநோய் உள்ளிட்ட பல்வேறு நாள்பட்ட நோய்கள் ஏற்படுவதை தடுக்க உதவுகிறது. மேலும், இதன் மூலம் ஒட்டுமொத்த உடல் ஆரோக்கியத்தைப் பாதுகாக்கலாம்.
இவ்வாறு உடல் ஆரோக்கியத்தைப் பாதுகாக்கும் வகையில் ஒவ்வொரு உணவுக்குப் பின்னரும் 10 நிமிடம் நடைபயிற்சி மேற்கொள்வது சிறப்பானதாகக் கருதப்படுகிறது.
இந்த பதிவும் உதவலாம்: Black Foods: வெயிட் லாஸ் பண்ணனுமா? உங்க டயட்ல இந்த கருப்பு உணவுகளை சேர்த்துக்கோங்க
Image Source: Freepik