Fri Sep 11, 2026 | 10:20 PM IST

உணவுக்குப் பின் ஒரு 10 நிமிஷம் நடந்தா உடலில் என்ன மாற்றங்கள் நடக்கும் தெரியுமா?

Is It Good To Walk 10 Minutes After Eating: ஆரோக்கியமான உணவு முறையைக் கையாள்வதை பலரும் கடைபிடிப்பதில்லை. இதனால் நம் அன்றாட வாழ்க்கை முறையில் நாம் செய்யும் சில தவறுகள் பெரிய பிரச்சனைகளை ஏற்படுத்துவதற்கான வாய்ப்பு அதிகமாகும். அந்த வகையில், உணவுக்குப் பிறகு பலரும் படுக்கைக்கு செல்வதையே வழக்கமாகிக் கொண்டுள்ளனர். ஆனால், இவ்வாறு ஒவ்வொரு உணவுக்குப் பின்னும் படுக்கைக்கு செல்வது அவர்களின் உடல் ஆரோக்கியத்தைப் பல்வேறு வழிகளில் பாதிக்கிறது. இந்நிலையில் நம் ஆரோக்கியத்தை மேம்படுத்த எளிய மற்றும் பயனுள்ள வழியைக் கண்டறிவது பலருக்கும் சவாலான ஒன்றாக மாறிவிட்டது.

எனினும், உடல் ஆரோக்கியத்தைப் பேணிக்காக்கவும், நீண்ட நாள்கள் உடல்நலப் பிரச்சனையின்றி வாழவும் சில எளிய முறைகளைக் கையாள்வது அவசியமாகும். அந்த வகையில் உணவுக்குப் பிறகு படுக்கைக்குச் செல்லாமல் சிறிது நடந்து செல்வது அவர்களின் உடல் ஆரோக்கியத்தைப் பேணிப் பாதுகாக்கிறது. இது பல்வேறு வழிகளில் உடலுக்கு நன்மை பயக்கும் வழியில் அமைகிறது. இந்த பயனுள்ள மற்றும் எளிதில் ஏற்றுக் கொள்ளக்கூடிய பழக்கத்தினக் கையாள்வது உடல் ஆரோக்கியத்திற்கு மிகவும் பயனுள்ளதாக அமைகிறது. இதில் ஒவ்வொரு உணவுக்குப் பிறகும் நாம் ஏன் 10 நிமிடமாவது நடைபயிற்சி செய்ய வேண்டும் என்பது குறித்துக் காணலாம்.

இந்த பதிவும் உதவலாம்: ஜப்பானியர்களைப் போல ஹெல்த்தியா இருக்க தொடர்ந்து 28 நாள்கள் இத ஃபாலோ பண்ணுங்க!

உணவுக்குப் பின் 10 நிமிடங்கள் ஏன் நடக்க வேண்டும்?

இரத்த சர்க்கரையைக் கட்டுப்படுத்த

உணவுக்குப் பிறகு நடைபயிற்சி செய்வது இரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவைக் கட்டுப்படுத்த உதவுகிறது. குறிப்பாக, நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டவர்கள் அல்லது நிலைமையை உருவாக்கும் அபாயத்தில் உள்ளவர்களுக்கு மிகவும் நன்ம பயக்கும். ஆய்வு ஒன்றில் வெளியான கருத்துப்படி, ஒவ்வொரு உணவிற்கும் பிறகு 10 நிமிடங்கள் நடப்பது இரத்த சர்க்கரை அளவைக் கணிசமாகக் குறைப்பதாகக் கூறப்படுகிறது. மேலும், உணவுக்குப் பிறகு உட்கார்ந்திருப்பதை விட நடப்பதன் மூலம் ஒட்டுமொத்த இரத்த சர்க்கரை அளவை 22% வரை குறைக்கலாம்.

எடையிழப்புக்கான சிறந்த உத்தி

பொதுவாக உணவுக்குப் பின் உடனே உட்கார்ந்திருப்பது அல்லது படுப்பது நல்ல செரிமானம் அடையச் செய்யாமல் கொழுப்பு அதிகரிக்க வழிவகுக்கிறது. எனவே உணவுக்குப் பிறகு குறுகிய நடைகளைச் சேர்ப்பது எடை மேலாண்மைக்கு சிறந்ததாகும். அன்றாட வாழ்வில் தினமும் இது போன்று வழக்கமான நடைபயிற்சியைச் சேர்ப்பது நாள் முழுவதும் எரிக்கப்படும் கலோரிகளின் எண்ணிக்கையை அதிகரிக்கிறது. ஆய்வு ஒன்றில், இந்த பழக்கங்கள் வளர்சிதை மாற்றத்தை மேம்படுத்துவதாகக் கூறப்படுகிறது. இவை காலப்போக்கில் ஆரோக்கியமான எடையை பராமரிக்க உதவுகிறது. எனவே நடைபயிற்சியின் மூலம் எடை இழப்பு இலக்குகளை ஆதரிக்கலாம்.

மனதளவில் ஆரோக்கியமாக வைக்க

ஒவ்வொரு உணவுக்குப் பின்னர் 10 நிமிடம் நடப்பது, உடல் ஆரோக்கியத்திற்கு மட்டுமல்லாமல், மன ஆரோக்கியத்தையும் மேம்படுத்தக் கூடியதாக அமைகிறது. இதற்கு வெறும் 10 நிமிடங்கள் மட்டும் உணவு உண்ட பிறகு செய்ய வேண்டும். இவ்வாறு நடக்கும் போது மனநிலையை உயர்த்தும் எண்டோர்பின்களை உடல் இயற்கையாகவே வெளியிடுகிறது. ஆய்வு ஒன்றில், உணவுக்குப் பின் நடப்பவர்களை உணவுக்குப் பின் உட்கார்ந்திருப்பவர்களுடன் ஒப்பிடுகையில், குறைவான மன அழுத்தம் மற்றும் அதிக நிதானமாக இருப்பதாகக் கூறப்படுகிறது. இது பதற்றத்தைக் குறைத்து ஒட்டுமொத்த மனநிலையை மேம்படுத்துகிறது.

இந்த பதிவும் உதவலாம்: Physical Activity Benefits: தினமும் உடல் செயல்பாடுகளை செய்வது ஏன் முக்கியம் தெரியுமா?

செரிமான ஆரோக்கியத்தை மேம்படுத்த

உணவுக்குப் பின்னதாக நடைபயிற்சி செய்வதன் மூலம் செரிமான ஆரோக்கியத்தை மேம்படுத்தலாம். இந்த வழக்கமான மென்மையான இயக்கம் செரிமான அமைப்பைத் தூண்டுகிறது. மேலும் இது வயிறு மற்றும் குடல் வழியாக உணவை சீராகச் செல்ல ஊக்குவிக்கிறது. ஆய்வு ஒன்றில் உணவுக்குப் பிறகு லேசான உடல் செயல்பாடு மேற்கொள்வது இரைப்பை காலியாக்க உதவுகிறது. இதன் மூலம் வீக்கம் மற்றும் அஜீரணம் ஏற்படும் அபாயத்தைக் குறைக்க உதவுகிறது.

இதய ஆரோக்கியத்தை மேம்படுத்த

உணவுக்குப் பிந்தைய நடைபயிற்சியின் உதவியுடன் இதய ஆரோக்கியத்தை மேம்படுத்தலாம். ஏனெனில், வழக்கமான நடைபயிற்சி இரத்த ஓட்டத்தை மேம்படுத்த உதவுகிறது. மேலும் இரத்த அழுத்தத்தைக் குறைக்க உதவுகிறது. இதன் மூலம் ஒட்டுமொத்த இதய ஆரோக்கியத்தை மேம்படுத்தலாம். ஆய்வு ஒன்றில் நடைபயிற்சி போன்ற வழக்கமான உடல் செயல்பாட்டின் மூலம், இதய நோய்களின் அபாயத்தை 30% வரை குறைக்கலாம் என ஆய்வில் கூறப்படுகிறது. எனவே உணவுக்குப் பிறகு நடப்பது குறிப்பாக இதயத்தை சுறுசுறுப்பாக வைத்திருக்க உதவுகிறது.

இவ்வாறு உணவுக்குப் பிறகு நடப்பது பல்வேறு உடல் ஆரோக்கிய நன்மைகளைத் தருகிறது. இது போன்ற நன்மைகளைப் பெற ஒவ்வொரு உணவு உட்கொள்ளலுக்குப் பிறகும் நடைபயிற்சியை மேற்கொள்ளலாம்.

இந்த பதிவும் உதவலாம்: Walking After Dinner: நைட் சாப்பிட்ட பிறகு வாக்கிங் போனா இந்த நன்மைகள் எல்லாம் கிடைக்குமாம்!

Image Source: Freepik

Read Next

Meditation Benefits: இப்படி தியானம் பண்ணா ஞாபக சக்தி அதிகரிக்குமாம்

Disclaimer

தகவலின் துல்லியம், நம்பகத்தன்மை, சரியான நேரத்தில் வழங்குதல் மற்றும் உண்மைத்தன்மையை உறுதி செய்ய அனைத்து சாத்தியமான நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளது. இருப்பினும், Onlymyhealth.com இதற்கு எந்தப் பொறுப்பையும் ஏற்காது. இந்த வலைதளத்தில் வழங்கப்படும் எந்தவொரு தகவலையும் பயன்படுத்துவது பார்வையாளர்களின் விருப்பத்திற்கு ஏற்ப மட்டுமே. ஏதேனும் மருத்துவத் தேவைகள்/தொடர்ச்சியான உடல்நலப் பிரச்சினைகள் ஏற்பட்டால், மேலே குறிப்பிடப்பட்டுள்ள வலைத்தளத்தில் எங்கள் குழு அல்லது மூன்றாம் தரப்பினரால் பதில்கள்/கருத்துகள் வடிவில் வழங்கப்படும் எந்தவொரு ஆலோசனை/குறிப்புகளையும் பயன்படுத்துவதற்கு முன்பாக, ஒரு தகுதிவாய்ந்த மருத்துவ பயிற்சியாளரை அணுகுமாறு நாங்கள் உங்களுக்கு அறிவுறுத்துகிறோம்.

கௌதமி சுப்ரமணி

கௌதமி சுப்ரமணி

இளைய உள்ளடக்க எழுத்தாளர்

நான் கௌதமி சுப்ரமணியம், டிஜிட்டல் மீடியாவில் ஐந்து ஆண்டுகளுக்கு மேலாக பணியாற்றி வருகிறேன். ஆரோக்கியம், உணவு, உடற்பயிற்சி, உடல் நலம், அழகு குறிப்பு போன்றவை தொடர்பான விவரங்களை ஆராய்ந்து கட்டுரைகளை எழுதி வருகிறேன். நான் எழுதும் ஒவ்வொரு பகுதியும் ஈர்க்கக்கூடியதாக இருப்பதை உறுதிசெய்து, விவரங்களுக்கு ஒரு தீவிரமான பார்வையை வளர்த்துக்கொண்டேன். மக்களுக்குத் தேவையான மற்றும் உண்மையான தகவல்களை வழங்குவதன் மூலம் நல்ல ஆரோக்கியம் மற்றும் நல்வாழ்வுக்கான இலக்கை மேம்படுத்துவது எனது நோக்கம் ஆகும்.

Read More..

How we keep this article up to date:

We work with experts and keep a close eye on the latest in health and wellness. Whenever there is a new research or helpful information, we update our articles with accurate and useful advice.


    Medically reviewed content
    200+ medical reviewers in network
    17 Years of Trusted Health Content
    Medically reviewed content
    200+ medical reviewers in network
    17 Years of Trusted Health Content
    Medically reviewed content
    200+ medical reviewers in network
    17 Years of Trusted Health Content