Sat Sep 12, 2026 | 01:49 AM IST

Curd For Weight Loss: எடை வேகமாக குறைய தயிரை இப்படி சாப்பிடுங்க. சீக்கிரம் ரிசல்ட் கிடைக்கும்

Ways To Use Curd For Weight Loss: உடல் எடையைக் குறைப்பது இன்று பலரும் சந்திக்கும் சவால்களில் ஒன்றாகும். இன்றைய காலகட்டத்தில் மோசமான உணவுமுறை மற்றும் ஆரோக்கியமற்ற பழக்க வழக்கங்களால் கொழுப்பு அதிகமாகி அதிகரித்த உடல் எடையுடன் காணப்படுகின்றனர். இந்த சூழ்நிலையில் உடல் எடையைக் குறைக்க பலரும் பல்வேறு முயற்சிகளை செய்து வருகின்றனர். அந்த வகையில் உடல் எடையை குறைக்க உணவு மற்றும் பானங்களை குறைப்பது, கடுமையான உடற்பயிற்சிகளை செய்வது போன்ற முயற்சிகளில் ஈடுபடுகின்றனர்.

அதே சமயம், இந்த முறைகளின் மூலம் ஆரோக்கியமான உடல் எடை இழப்பை அடைய முடியாது. எனவே ஆரோக்கியமான உடல் எடை இழப்பை விரும்புபவர்கள் உணவில் தயிர் சேர்த்துக் கொள்ளலாம். ஆரோக்கியமான எடை இழப்பில் தயிர் சேர்த்துக் கொள்வது அனைத்து வகையான ஊட்டச்சத்துக்களையும் பெறுவதுடன், எடையும் கட்டுக்குள் இருக்கும். இதில் உடல் எடையைக் குறைக்க தயிர் தரும் நன்மைகளையும், எப்படி எடுத்துக் கொள்வது என்பது குறித்து காணலாம்.

இந்த பதிவும் உதவலாம்: Ginger for Weight Loss: வேகவேகமா எடையைக் குறைக்கணுமா? இஞ்சி தண்ணீரை இப்படி குடிச்சி பாருங்க

உடல் எடையைக் குறைக்க தயிரை எப்படி எடுத்துக் கொள்ளலாம்?

எடை குறைய எளிய தயிர்

உடல் எடையை குறைக்க விரும்புபவர்கள், உணவில் சாதாரண தயிர் சேர்த்துக்கொள்ளலாம். இதற்கு ஒரு கிண்ணம் தயிரை காலை உணவு, மதிய உணவு மற்றும் இரவு உணவுடன் சேர்த்து சாப்பிட வேண்டும். உணவுடன் தயிர் சேர்த்துக் கொள்வது அதிகம் உணவு எடுத்துக் கொள்வதைத் தடுக்கிறது. மேலும் உடல் எடையைப் படிப்படியாகக் குறையத் தொடங்குகிறது.

எடை குறைய தயிருடன் கருமிளகு

உடல் எடை குறைய தயிருடன் கருப்பு மிளகு சேர்த்து சாப்பிடலாம். உடலில் சேரும் அதிகப்படியான கொழுப்பைக் குறைக்க கருமிளகு, தயிர் இரண்டுமே சிறந்த நன்மை பயக்கும். இதற்கு ஒரு கிண்ணம் தயிர் எடுத்துக் கொண்டு, அதில் கருமிளகுத் தூள் சேர்த்து உட்கொள்ள வேண்டும். இவை இரண்டுமே உடல் எடையை விரைவாகக் குறைக்க உதவுகிறது.

பராத்தாவுடன் தயிர்

பெரும்பாலானோர் பராத்தாவை பால், சட்னி அல்லது டீயுடன் சாப்பிட விரும்புகின்றனர். ஆனால், தயிருடன் பராத்தாவை சேர்த்து உட்கொள்வது உடல் எடையைக் குறைக்க உதவுகிறது. எனவே, உடல் எடை மேலாண்மைக்கு பரோட்டாவுடன் தயிர் சாப்பிடுவது நன்மை பயக்கும்.

இந்த பதிவும் உதவலாம்: Radish for Weight Loss: எவ்ளோ பெரிய தொப்பையையும் அசால்ட்டாக குறைக்க முள்ளங்கியை சாப்பிடுங்க

தயிர் சாதம்

இந்த இரண்டின் கலவையானது உடல் எடையை வெகுவாகக் குறைக்க உதவுகிறது. எனவே எடை குறைய சாதத்துடன் தயிர் சேர்த்து சாப்பிடலாம். இதன் மூலம் உடல் எடையை எளிதாகக் குறைக்கலாம்.

உலர் பழங்களுடன் தயிர்

தயிரை மிகவும் ஆரோக்கியமானதாக மாற்ற அதில் நறுக்கிய உலர்ந்த பழங்களைச் சேர்த்து எடுத்துக் கொள்ளலாம். தயிரில் உலர் பழங்களைச் சேர்ப்பது உடல் ஆரோக்கியத்திற்கு நன்மை தருகிறது. இது அதிக சத்தானதாக மாறுகிறது. தயிரில் உலர் பழங்களைச் சேர்ப்பது உடலுக்குத் தேவையான ஊட்டச்சத்துக்களை வழங்குகிறது. இந்த கலவையைச் சாப்பிடுவது வயிறு நீண்ட நேரம் நிரம்பிய உணர்வைத் தருகிறது. இது உடல் எடையைக் குறைக்க உதவுகிறது.

உடல் எடையிழப்புக்கு தயிர் தரும் நன்மைகள்

  • தயிர் உட்கொள்வது கொழுப்பு கரைய சிறந்த தேர்வாக செயல்படுகிறது.
  • இது வளர்ச்சிதை மாற்றத்தை மேம்படுத்துவதுடன், உடல் எடையை விரைவாகக் குறைக்க உதவுகிறது.
  • தினந்தோறும் தயிர் சாப்பிடுவது BMI-ஐக் கட்டுக்குள் வைக்க உதவுகிறது.
  • தயிரில் புரத சத்துக்கள் நிறைந்துள்ளது. இது வயிறு நிரம்பிய உணர்வைத் தருவதுடன், நீண்ட நேரம் பசியைக் கட்டுப்படுத்த உதவுகிறது.
  • தயிரில் உள்ள புரோபயாடிக்குகள் செரிமான அமைப்பை ஆரோக்கியமாக வைப்பதுடன், வளர்ச்சிதை மாற்றத்தை மேம்படுத்த உதவுகிறது.

இவ்வாறு உடல் எடையிழப்பு பயணத்தில் தயிர் சேர்ப்பது பல்வேறு நன்மைகளைத் தருகிறது.

இந்த பதிவும் உதவலாம்: Weight Loss Drinks: இந்த ஜூஸ் எல்லாம் குடிங்க! மெட்டபாலிசம் அதிகரிக்கும், உடல் எடையும் குறையும்

Image Source: Freepik

Read Next

Ginger for Weight Loss: வேகவேகமா எடையைக் குறைக்கணுமா? இஞ்சி தண்ணீரை இப்படி குடிச்சி பாருங்க

Disclaimer

தகவலின் துல்லியம், நம்பகத்தன்மை, சரியான நேரத்தில் வழங்குதல் மற்றும் உண்மைத்தன்மையை உறுதி செய்ய அனைத்து சாத்தியமான நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளது. இருப்பினும், Onlymyhealth.com இதற்கு எந்தப் பொறுப்பையும் ஏற்காது. இந்த வலைதளத்தில் வழங்கப்படும் எந்தவொரு தகவலையும் பயன்படுத்துவது பார்வையாளர்களின் விருப்பத்திற்கு ஏற்ப மட்டுமே. ஏதேனும் மருத்துவத் தேவைகள்/தொடர்ச்சியான உடல்நலப் பிரச்சினைகள் ஏற்பட்டால், மேலே குறிப்பிடப்பட்டுள்ள வலைத்தளத்தில் எங்கள் குழு அல்லது மூன்றாம் தரப்பினரால் பதில்கள்/கருத்துகள் வடிவில் வழங்கப்படும் எந்தவொரு ஆலோசனை/குறிப்புகளையும் பயன்படுத்துவதற்கு முன்பாக, ஒரு தகுதிவாய்ந்த மருத்துவ பயிற்சியாளரை அணுகுமாறு நாங்கள் உங்களுக்கு அறிவுறுத்துகிறோம்.

கௌதமி சுப்ரமணி

கௌதமி சுப்ரமணி

இளைய உள்ளடக்க எழுத்தாளர்

நான் கௌதமி சுப்ரமணியம், டிஜிட்டல் மீடியாவில் ஐந்து ஆண்டுகளுக்கு மேலாக பணியாற்றி வருகிறேன். ஆரோக்கியம், உணவு, உடற்பயிற்சி, உடல் நலம், அழகு குறிப்பு போன்றவை தொடர்பான விவரங்களை ஆராய்ந்து கட்டுரைகளை எழுதி வருகிறேன். நான் எழுதும் ஒவ்வொரு பகுதியும் ஈர்க்கக்கூடியதாக இருப்பதை உறுதிசெய்து, விவரங்களுக்கு ஒரு தீவிரமான பார்வையை வளர்த்துக்கொண்டேன். மக்களுக்குத் தேவையான மற்றும் உண்மையான தகவல்களை வழங்குவதன் மூலம் நல்ல ஆரோக்கியம் மற்றும் நல்வாழ்வுக்கான இலக்கை மேம்படுத்துவது எனது நோக்கம் ஆகும்.

Read More..

How we keep this article up to date:

We work with experts and keep a close eye on the latest in health and wellness. Whenever there is a new research or helpful information, we update our articles with accurate and useful advice.


    Medically reviewed content
    200+ medical reviewers in network
    17 Years of Trusted Health Content
    Medically reviewed content
    200+ medical reviewers in network
    17 Years of Trusted Health Content
    Medically reviewed content
    200+ medical reviewers in network
    17 Years of Trusted Health Content