Things To Avoid While Walking: அதிகாலையில் வாக்கிங் செல்லும் பழக்கம் நம்மில் பலருக்கு இருக்கும். அதிகாலையில் வாக்கிங் செல்வது பல ஆரோக்கிய நன்மைகளை வழங்கும். தினமும் 30 நிமிடம் வாக்கிங் சென்றால், உடல் சோர்வு நீங்கு சுறுசுறுப்பாகும். அதே நேரம், உடலில் உள்ள கூடுதல் கலோரிகளை குறைக்கவும் உதவும். தினமும் வாக்கிங் செல்வது எவ்வளவு முக்கியமோ, அதே அளவு நாம் சரியான முறையில் நடக்கிறோமா என்பது முக்கியம்.
வாக்கிங் செல்லும் பொது நாம் செய்யும் சில விஷயங்கள் தவறு என்பதே நம்மால் பலருக்கு தெரிவதில்லை. இதனால், நாம் வாக்கிங் சென்றதற்கான சரியான பலன் நமக்கு கிடைப்பதில்லை. அத்துடன் நன்மைக்கு பதிலாக நம் உடலுக்கு தீங்கு விளைவிக்கும். வாக்கிங் செல்லும் போது நாம் செய்யக்கூடாத சில தவறுகள் பற்றி இந்த தொகுப்பில் பார்க்கலாம்.
இந்த பதிவும் உதவலாம் : Walking Benefits: நடந்தா உடம்பு குறையுமா? அப்போ எவ்வளவு நேரம் நடக்கனும்.!
வாக்கிங் செல்லும் போது நாம் தவிர்க்க வேண்டிய விஷயங்கள்

தலை குனிந்து நடப்பது
பல சமயங்களில் நாம் பேசிக்கொண்டே தலையை குனிந்தபடி நடந்து செல்வோம். ஆனால், அவ்வாறு செய்வது நமது தலை மற்றும் கழுத்தை பாதிக்கும். இது முதுகின் தசைகளை சேதப்படுத்தும், இதனால் கழுத்து மற்றும் முதுகில் வலி மற்றும் விறைப்பு ஏற்படும்.
அடியை அழுத்தி வைப்பது
சிலர் வேகமாக நடக்க தங்கள் கால்களை அழுத்தி ஊன்றுவார்கள். இப்படி செய்வது உடலின் தசைகளையும் பாதிக்கும். இது உங்கள் கால்களில் வலியை ஏற்படுத்தக்கூடும். மேலும், நீங்கள் அடுத்தநாள் நடக்க சிரமப்படுவீர்கள்.
தினமும் ஒரே பாதையில் நடப்பது
நாம் அனைவரும் பெரும்பாலும் ஒரே பாதியில் அல்லது வழியில் தான் வாக்கிங் செல்வோம். இதனால், உங்கள் ஆர்வம் குறையத் தொடங்கும். இது உங்களுக்கு நடைபயிற்சி சலிப்பை ஏற்படுத்தும், இதன் காரணமாக நீங்கள் தினமும் நடைபயிற்சி செய்ய விரும்ப மாட்டீர்கள். எனவே, ஒரு குறிப்பிட்ட நாட்களுக்கு பின்னர் உங்கள் நடைப் பாதையை மாற்றவும். இதனால் உங்கள் ஆர்வம் அதிகரிப்பதுடன், நீங்கள் சுறுசுறுப்பாகவும் உணர்வீர்கள்.
இந்த பதிவும் உதவலாம் : Workout Tips: புரோட்டீன் பவுடர் எப்ப சாப்பிடணும், வொர்க் அவுடுக்கு முன்பா.. பின்பா?
நடக்கும்போது மொபைல் பயன்படுத்துவது

நடப்பதில் ஏற்படும் அலுப்பைக் குறைக்க பலர் நடக்கும்போது மொபைல் போன்களைப் பயன்படுத்துகின்றனர். ஆனால், அது கவனச்சிதறலையும் ஏற்படுத்தும். தொடர்ந்து உங்கள் கழுத்தை வளைத்து வைத்திருப்பது உங்கள் தலை மற்றும் முதுகை பாதிக்கலாம். இதன் காரணமாக, உங்கள் தசைகள் பலவீனமடையக்கூடும். எனவே, வாக்கிங் செல்லும் போது மொபைல் பயன்படுத்துவதை தவிர்க்கவும்.
வலி அல்லது காயத்தில் நடைபயிற்சி
சிலர் கால்களில் காயம் அல்லது வலி இருந்தாலும் வாக்கிங் பழக்கத்தை தக்க வைத்துக் கொள்வதற்காக நடப்பார்கள். இப்படி செய்வதால் உங்கள் பிரச்சனை மேலும் அதிகரிக்கலாம் மற்றும் நீங்கள் நடக்க சிரமப்படுவீர்கள். எனவே, உங்கள் கால்கள் நன்றான பிறகு வாக்கிங் செல்லவும்.
இந்த பதிவும் உதவலாம் : Food After Walking: காலையில் வாக்கிங் செல்பவரா நீங்க? வாக்கிங்கு பின் என்ன சாப்பிடணும்?
சரியான காலணி

தவறான அளவு கொண்ட ஷூ மற்றும் செருப்புகளை நீங்கள் அணிந்து நடந்தால், அது உங்கள் கால்களின் தசைகளில் அழுத்தத்தை ஏற்படுத்தும். இது உங்கள் கால்களில் காயம் அல்லது வலி ஏற்படும் அபாயத்தையும் ஏற்படுத்தலாம்.
Pic Courtesy: Freepik