Walking Benefits For Weight Loss: உடல் எடையை குறைக்க நடைபயிற்சி ஒரு எளிதான உடற்பயிற்சியாக திகழ்கிறது.
தொடர்ந்து நடைப்பயிற்சி செய்வதன் மூலம் வயிற்றில் உள்ள கூடுதல் கலோரிகள் மற்றும் கொழுப்பை சிறிது நேரத்தில் எரித்துவிடலாம். இது தொடர்பாக பொதுமக்களிடையே விழிப்புணர்வும் அதிகரித்துள்ளது. பெரும்பாலான மக்கள் தங்களால் முடிந்த போதெல்லாம் நடக்கின்றனர். ஒரு நாளைக்கு எவ்வளவு தூரம் நடக்க வேண்டும் என்று இலக்கை நிர்ணயித்து, ஸ்மார்ட் வாட்ச்சில் உள்ள ஸ்டெப் கவுண்டரைத் தொடர்ந்து பார்த்துக் கொண்டிருக்கிறார்கள்.
எவ்வளவு தூரம் நடக்க வேண்டும்?
அமெரிக்காவின் முன்னணி மருத்துவ ஆராய்ச்சி நிறுவனமான மயோ கிளினிக், உடல் எடையை குறைக்க எவ்வளவு தூரம் நடக்க வேண்டும் என்பது குறித்து ஆய்வு நடத்தியது. வாரத்தில் ஐந்து நாட்களில் தினசரி அரை மணி நேரம் விறுவிறுப்பான நடைப்பயிற்சி செய்தால், ஒரு நாளைக்கு 150 கலோரிகளை எரிக்கலாம் என்று முடிவு செய்யப்பட்டுள்ளது. வேகத்தையும், தூரத்தையும் அதிகப்படுத்தினால் பலன் அதிகம் என்று கூறப்படுகிறது.

இதையும் படிங்க: வாக்கிங் செல்வதால் கிடைக்கும் பலன்களை முழுமையாக அறிந்துக் கொள்ளுங்கள்!
தினமும் நடப்பதால் என்ன ஆகும்?
நடைபயிற்சி உங்கள் தசைகளை வலுவாக்கும். வயிற்றைச் சுற்றியுள்ள கொழுப்பைக் கரைக்கும். நடைப்பயிற்சி உடல் ஆரோக்கியத்துடன் மன ஆரோக்கியத்தையும் மேம்படுத்துகிறது. மன அழுத்தம், பயம், கோபம் போன்ற எதிர்மறை எண்ணங்களை நடைபயிற்சி மூலம் தவிர்க்கலாம். உடல் கட்டுக்கோப்பாக இருந்தால் இதய நோய், புற்றுநோய், சர்க்கரை நோய் போன்ற தீராத நோய்கள் வராது.
எவ்வளவு தூரம் நடக்க வேண்டும்?
ஒரு நபருக்கு ஒரு நாளைக்கு எத்தனை கலோரிகள் தேவை என்பது அவர்களின் வயது, உயரம், எடை மற்றும் செயல்பாடுகளைப் பொறுத்தது. உடல் ரீதியாக சுறுசுறுப்பாக இருப்பவர்களுக்கு அதிக கலோரிகள் செலவிடப்படுகின்றன. அவர்கள் விரைவாக எடை இழக்கிறார்கள். வாரத்திற்கு 4 முதல் 5 மைல்கள் நடைப்பயிற்சி மேற்கொள்வதன் மூலம் மூட்டு வலி மற்றும் முழங்கால் வலி வராமல் தடுக்கலாம்.
Image Source: Freepik